பிசாசியல்-மதச் சார்பான மண்டலம் Connersville, Indiana, USA 53-0609A 1நான் உங்களை இன்று நல்லார்வமிகுந்த கிறிஸ்தவ ஐக்கியத்துடன் வாழ்த்துகையில், எத்தனைப்பேர் இந்த சிறிய பாடலை அறிவீர்கள், எத்தனைப் பேருக்கு இந்த சிறிய பாடல் தெரியும், ''அவர் உனக்காக கவலை கொள்கிறார்?'' எத்தனைப்பேர் அதை அறிவீர்கள்? சரி, நாம் பாட முடிகின்றதா என்று பார்ப்போம். உங்களுக்குத் தெரியுமா, சகோதரியே? உங்களுக்குத் தெரியுமா? ஆம். இப்பொழுது: அவர் உனக்காக கவலை கொள்கிறார், அவர் உனக்காக கவலை கொள்கிறார்; வெயில் அல்லது நிழலினூடாக, அவர் உனக்காக கவலை கொள்கிறார். ஓ, அது அருமையானது. இப்பொழுது நாம் அதை மறுபடியுமாக முயற்சிப்போம். அவர் உனக்காக கவலை கொள்கிறார், அவர் உனக்காக கவலை கொள்கிறார், வெயில் அல்லது நிழலினூடாக, அவர் உனக்காக கவலை கொள்கிறார். 2எங்கள் பரலோகப் பிதாவே, (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) ....நீர் எங்களுக்காக கவலை கொள்கிறீர் என்றும் எங்களுக்காக உம்முடைய அன்பை வெளிப்படுத்தியிருக்கின்றீர் என்ற அளவின்படி நீர் உம்முடைய சொந்த அருமையான குமாரனை.... குற்றமுள்ள பாவிகளின் இடத்தை எடுத்துக் கொள்வதற்காக, அந்த ஒன்றுமறியாத தேவனுடைய குமாரனை அனுப்பினீர் என்று விசுவாசிக்கிறோம். இதைச் செய்யும்படிக்கு, நீர் எங்களைக்குறித்து சிந்தனையுடையவராய் எங்களுக்காக அக்கறை கொள்கிறீரே, அதற்காக உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக நாங்கள் இருக்கிறோம்! கர்த்தாவே நாங்கள் மிகவும் உண்மையுணரும் இயல்புடையவர்களாக இருக்கிறோம். இந்த மதிய வேளையில், வானங்களின் மாடங்களின் கீழ் இங்கே ஒன்று கூடுவதற்கு மகிழ்ச்சி கொண்டு இந்த ஆராதனையின் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களைக் கோருகிறோம். அருளும், கர்த்தாவே, இங்கே இருக்கின்ற ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையன் அல்லது பெண்தாமே இப்பொழுது வேத வசனங்களில் உள்ளதை ஆழமாக ஆராய்வார்களாக. சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரு உலகத்தை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். ஆகவே, பிதாவே, நாங்கள் பிசாசுகளுடைய வல்லமையையும் அவை ஜனங்களுக்கு என்ன செய்யுமென்றும் நாங்கள் ஆராய்கையில், நீர்தாமே எங்களுக்கு மகத்தான விசுவாசத்தை அளித்து, மேலும் மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்பட நாங்கள் ஜெபிக்கிறோம். இதை நாங்கள் தேவனுடைய மகிமைக்கென்று கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3நாம் இந்த மதியம் ஒரு பாடத்தை நாம் பார்ப்போம், சுமார் பதினைந்து நிமிடங்கள் முன்னர் என்று நான் யூகிக்கிறேன். அது இன்னுமாக பிசாசியலின் பேரில் தான் ஆகும். இப்பொழுது சகோதரன் பீலர், என்னுடைய நண்பர்களிடமிருந்து சற்று முன்னர் ஒரு செய்தி எனக்கு கிடைத்தது; ஜூலையின் நடுவில் நான் ஆப்பிரிக்காவில் துவங்குகிறேன். ஆகவே அதுதான், அதை நாங்கள் இப்பொழுது ஏற்பாடு செய்துவிட்டோம். சகோதரன் பாக்ஸ்டர் அந்த சமயத்தில் போக முடியாதிருந்தது, ஆதலால் நானாகவே ஆப்பிரிக்காவிற்கு செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆகவே அங்கே செல்வது.... ஒருக்கால்... கர்த்தர் எனக்கு உதவி செய்யத்தக்கதாக நீங்கள் எனக்காக இப்பொழுது ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், ஏனெனில் உண்மையாகவே அது எனக்குத் தேவையாயிருக்கிறது, அங்கே அவர்கள் மத்தியில்.... அந்த வட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். 4இங்கே எனக்கு ஒரு தரிசனம் வந்தது. அதன் பலனை மக்களாகிய நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது டிசம்பர் மாதம் நடந்தது. ஒருநாள் காலை கர்த்தருடைய தூதன் உள்ளே வந்தபோது நான் அறையில் இருந்தேன். நான்.... நீங்கள் பாருங்கள், நான் அங்கே இருந்தபோது, நான் தேவனுக்கு கீழ்ப்படியாமற்போனேன், ஆகவே எனக்கு அமீபா (Amoeba) வந்துவிட்டது. அமீபா என்னவென்பதை ஒவ்வொரு மனிதனும் அறிவான் - அறிவான், அது ஒரு ஒட்டுண்ணி அது.... ஏறக்குறைய உன்னைக் கொன்றுவிடும். அது ஏனென்றால் செய்யக்கூடாது என்று தேவன் என்னிடம் கூறின ஒன்றை நான் செய்ததினால்தான். அதைப்பற்றின கதையை எத்தனைப்பேர் கேட்டிருக்கிறீர்கள்? இங்கே உங்களில் சிலர் கேட்டிருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். என்ன சம்பவித்தது என்பதைக்குறித்த கதையை கூடாரத்திலுள்ள மக்கள் கேட்டனர் என்பது எனக்குத் தெரியும். தேவன் என்னிடம் ஒரு இடத்திற்கு போ என்றும், இந்த இடத்திற்கு விலகியிரு என்றும், மற்றொரு இடத்திற்கு போகவேண்டும் என்றும் கூறினார். அதைக்குறித்து பிரசங்கிகள் என்னிடம் பேசும்படியாக அனுமதித்தேன். இப்பொழுது, பிரசங்கிகளாகிய நீங்கள் அற்புதமானவர்கள், அவர்கள் என்னுடைய சகோதரர் ஆவர், ஆனால் தேவன் உன்னிடம் என்ன கூறுகின்றார் என்பதை மாத்திரம் பற்றிக் கொண்டிரு. அது சரி. பாருங்கள்? உங்களுக்கு ஒரு ஊழியம் தான் இருக்கின்றது. 5வேதாகமத்தில் ஒரு சமயம் இரண்டு தீர்க்கதரிசிகள் இருந்தார்கள் என்பது எத்தனைப் பேருக்கு நினைவில் இருக்கின்றது? அவர்களில் ஒருவன், கர்த்தர் அவனிடம் கூறினார், ''நீ போய் அந்த... நீ வேறொரு வழியாய் திரும்பி போ'' என்றார். மேலும் இன்னுமாக. ஆகவே - ஆகவே அவர், ''நீ அங்கே இருக்கையில் புசிக்காதே அல்லது குடிக்காதே'' என்று அவர் கூறினார். மேலும் இன்னுமொரு உண்மையான தீர்க்கதரிசி அவனைச் சந்தித்து “கர்த்தர் உன்னை சந்தித்தப் பிறகு என்னையும் சந்தித்தார்'' என்றான். மேலும் ''என் வீட்டிற்கு வா'' என்று கூறினான். ஆகவே அந்த தீர்க்கதரிசி மற்றொவன் கூறினதற்கு செவிசாய்த்து அதினாலே தன்னுடைய ஜீவனையே இழந்து போனான். பாருங்கள், யார் என்ன கூறினாலும் சரி, உன்னிடம் தேவன் என்ன செய்ய வேண்டுமென்று கூறியிருக்கின்றாரோ அதை மாத்திரமே செய். 6இப்பொழுது நாம் இந்த தரிசனத்தில், அவர்.... அது என்னை எழுப்பினது, செப்டம்பர்.... அல்லது டிசம்பர் பதின்மூன்றாம் தேதி. ஆகவே - ஆகவே நான் என்னுடைய கட்டிலின் பக்கவாட்டில் அமர்ந்திருந்தேன், என்னுடைய எதிர்காலம் என்னவாகயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே திரும்பி வந்தபோது, அவர்கள் என்னை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதித்துவிட தயாராக இருந்தனர், தொற்று கிருமிகள் என்னை பிடிக்க ஆரம்பித்தன. நான் தேசத்தை வந்தடைந்தவுடன் அவர்கள் எனக்கு பரிசோதனையை மேற்கொண்டனர். ஆகவே, தேவனுடைய கிருபையால், அவர்கள் நான் வீடு செல்ல அனுமதித்தனர், ஏனெனில் அது மிகவுமாக இங்கும் அங்குமாக இருந்தது. ஆகவே நான் ஜெபித்தேன், பிறகு நான் அந்த போதகர்களிடம் சென்று, நான் அந்த வழியாக நான் போகக்கூடாதென்று கர்த்தர் என்னிடம் கூறியுள்ளார். என்றேன். அவர்கள், “ஓ, உம்மோடு மட்டுமல்ல மற்றவரோடும் தேவன் பேசுகிறார்'' என்றனர். நான் “ஒரு சமயத்தில் கோராகிற்கும் அதே கருத்து இருந்தது” என்று கூறினேன். ஆகவே மேலும், ஆனால் நான் சென்று சில இலைகளை எடுத்து வந்து அவர்களுடைய கால்களின் மேல் வைத்து, நான் ''நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தில் கூறுகிறேன், நாம் அங்கே செல்ல பிரயாணத்தை மேற்கொள்வோமானால், அது ஒரு தோல்வியாக முடியும், நாம் அதற்குரிய கிரயத்தை செலுத்துவோம்'' என்று கூறினேன். ஆகவே நாங்கள் நிச்சயமாக அதைச் செய்தோம்! ஓ, என்னே நாங்களெல்லாரும் மரித்திருப்போம். ஆகவே பிறகு திரும்பி வந்தபோது.... 7அந்த அன்னிய நாடுகளில் நீங்கள் அதிகமாக சகிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறிய “ஈ'' உன்னைக் கடிக்குமானால், அது உனக்கு ''டிக் காய்ச்சல்'' (Tick Fever) (என்ற ஒரு வித காய்ச்சல்) வந்துவிடச் செய்யும். அந்த சிறிய காரியமானது, அது உன்னைக் கடிக்குமானால், அது உனக்கு நமைச்சல் உணர்வைத் தரும், ஆனால் உன்னால் அதை நகத்தைக் கொண்டு பிறாண்ட முடியாது. நீ பார்க்கும்போது, அது ஒரு சிறிய கறுப்பு உருவத்தைக் காணலாம், அதைப் பிடுங்கிப் போடக்கூடாது. அதற்கு ஒரு சிறிய தலை இருக்கிறது, அது தோலுக்குள்ளாக துளையிட்டுக் கொண்டு செல்லும், இவ்விதமாக திரும்பி அது பதிந்து கொள்ளும். நீ அதை இழுப்பாயானால், அதன் தலை அப்படியே அதிலேயே தங்கிவிடும். அதற்குள் ஒரு நோய் நச்சுத்தன்மை இருக்கின்றது, அது உன்னை நிலைகுலைந்து செயலற்றவனாக்கிவிடும். ஆதலால் அதை சுரண்டவோ, அல்லது அதை இழுத்துப் போடவோ செய்யவேண்டாம்; கொழுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அது தன் பின்பாகத்தில்தான், சுவாசிக்கின்றது, அதன் மீது கொழுப்பை பூசுங்கள், அது வெளியே வந்துவிடும். பிறகு அங்கே ஒரு சிறிய கொசு இருக்கின்றது. அது ஒரு சத்தத்தைக் கூட பிறப்பிக்காது. அது காற்றினூடாக வருகின்றது. (சகோதரன் பிரன்ஹாம் தன் கையை தட்டுகிறார் - ஆசி) அது உங்களைத் தொட மாத்திரம் செய்யும், அவ்வளவுதான், உங்களுக்கு மலேரியா வந்துவிடும். 8ஆகவே - ஆகவே மேலும் மம்பா பாம்பு என்று அவர்கள் அழைக்கும் ஒன்று அங்கே இருக்கின்றது. அது உங்களை கடிக்குமானால், அது உங்களை கடித்தப்பிறகு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே நீங்கள் உயிராக இருப்பீர்கள். அங்கே மஞ்சள் நாகம் என்ற ஒன்று இருக்கின்றது. அது கடித்த பிறகு பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே நீ உயிர் வாழ்வாய். அவைகளில் ஒன்று என் மகன் அவன் தன்னுடைய கையை அதன்மேல் வைக்கின்ற அளவிற்கு அருகாமையிலிருந்தது. நாங்கள் அதை சுடுவதற்கு முன்னர், அதைப்போன்று அது அடிக்க தயாராக மேலே இருந்தது. அங்கே கறுப்பு நாகப்பாம்பு என்ற ஒன்று இருக்கின்றது. ஓ, அங்கே எல்லாமே இருக்கின்றது! மேலும் காட்டியல்பான மிருகங்களின் ஆபத்துகள், கூறப்போனால், சிங்கங்கள், புலி அல்லது சிறுத்தைகள், மற்றும் காட்டிலுள்ள எல்லாவற்றோடும் போராட வேண்டியதாக இருக்கும். மேலும் பிறகு அந்த வியாதிகள், அங்கே எல்லா விதமான வியாதிகளும் இருக்கின்றது. ஆகவே நீ அங்கே போகையில் இவையெல்லாவற்றையும் எதிர் கொள்ள வேண்டியதாகயிருக்கும். இதற்கு அப்பாற்பட்டு, மேலும் உன்னை ஒவ்வொரு விசையும் சவாலிட மந்திரவாதியும் அங்கே இருக்கிறான், பாருங்கள் - அவர்களுடைய எல்லா மந்திரங்களும் மற்றும் காரியங்களும். ஆனால், எப்படியாக, நம்முடைய கர்த்தர் அதை அப்படியே எல்லா பக்கத்திற்கும் விரட்டியடித்து, பிறகு முன்சென்று கொண்டிருப்பதைக் காண்பதென்பது என்ன ஒரு அற்புதமான காரியமாகும். ஆகவே அந்த நாளில், எவ்வளவு அருமையாக, என்ன நடந்ததென்பதை நான் நினைவு கூறுகிறேன், அதை மற்றொரு கூட்டத்தில் ஒரு நேரத்தில் நான் உங்களுக்கு கூறுகிறேன். ஏனெனில் இந்த மதிய வேளையில் பிசாசியல் என்பதைக்குறித்த பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். 9ஆனால் இப்பொழுது, ஆகவே முடிவு என்னவாயிருக்கும் என்று இதைக்குறித்து நான் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன், கடலைக் கடந்து திரும்ப வந்து கொண்டிருக்கையில், நாங்கள் அங்கே இருக்கையில் சுமார் லட்சம் பேர் மனமாறியவர்களைக் கொண்டிருந்தோம். ஆகவே வயதான சகோதரன் பாஸ்வர்த் என்னிடம் வந்தார். நான், ''நல்லது, சகோதரன் பாஸ்வர்த்?'' என்றேன். அவர், ''நான் உங்களைக் குறித்து பெருமை கொள்கிறேன், சகோதரன் பிரன்ஹாம்!'' என்றார். அவர், ''நீங்கள் - நீங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்'' என்றார். நான் கூறினேன், ''நல்லது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் யூகிக்கிறேன்'' என்றேன். நான் ''நான் நாற்பது வருடங்களைக் கடந்து விட்டேன். நான் நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டத்தை முடித்துவிட்டேன் என்று யூகிக்கிறேன்“ என்று கூறினேன். அவர் ''நாற்பது வருடங்கள் கடந்துவிட்டதா? நான் மனமாறியபோது அந்த வயதாகத்தான் இருந்தேன். நான் இன்னும் நலமாகச் சென்று கொண்டிருக்கிறேன்'' என்றார். அவர் எண்பது வயதிற்கு அருகில் அருமையாகச் சென்று கொண்டிருந்தார். ஆகவே... ''நல்லது, அது சரியாகத்தான் இருக்கும்'' என்று எண்ணினேன். ஆகவே அவர் ''இல்லை, நீங்கள் இப்பொழுது புத்தம் புதிதான பிரன்ஹாம். உங்கள் கூட்டங்கள் நல்லவிதமாக கட்டுக்குள் வைத்திருக்கவும் மற்ற எல்லாமும் தெரிந்திருக்கிறது. நீங்கள் சரியான ஒழுங்கில் அமைக்கப்பட்ட கூட்டத்தில் அமெரிக்காவை சரியான விதத்தில் அசைப்பீர்களானால், அங்கே ஒரு இடத்தில் ஆறு அல்லது எட்டு வாரங்கள் தங்கியிருந்து, அதை அமைத்து சுற்றிலும் விளம்பரப்படுத்தப்படுமானால் நீங்கள் ஏதாவதொன்றை செய்யலாம் - நம்முடைய கர்த்தருக்கு'' என்றார். ஆகவே நாங்கள் தொடர்ந்து சென்று, அதேவிதமாக செய்ததால், ஆகவே அது மிக - மிக அருமையாக இருந்தது. 10பிறகு சற்று கழித்து, நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன், நான் அமெரிக்காவில் இருந்தபோது அது எனக்கு வந்தது, என்னை ஆப்பிரிக்காவிற்கு திரும்பக் கொண்டு சென்றது, அது அதே கூட்டத்தை எனக்குக் காண்பித்தது, அங்கே டர்பனுக்கு முன்பாக நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆகவே அந்த முதல் கூட்டம் வரலாற்றில் சங்கமித்து, மேற்கை நோக்கிச் சென்றது. இரண்டாவது கூட்டம் மேலே எழும்பினது. அது வந்தபோது, அது இன்னுமாக முதல் கூட்டத்தைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. ஆகவே அவர்... நான் ஒரு கூக்குரலைக் கேட்டேன், ஒரு தூதன் பரலோகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு மகத்தான ஒளியைக் கொண்டிருந்தார். ஆகவே இங்கே நம்முடைய பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் கர்த்தருடைய தூதனானவர், நின்று கொண்டிருந்தார், என்னுடைய வலது பக்கத்தில் இங்கே இந்த பக்கத்தில் எப்பொழுதுமே நின்று கொண்டிருப்பவர் ஆகும். ஆகவே அது அங்கே நின்று கொண்டிருந்தது, ஆகவே அது - அது சுற்றிலும் அசைந்து கொண்டிருந்தது. ஆகவே நான் இந்த மனிதன் அவருக்குக் கீழ் நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர் - அவர் இல்லை.... இப்பொழுது, நீங்கள் அவரைக் காணும்போது அது தரிசனம் அல்ல. நீங்கள் என்னை எவ்விதமாகக் காண்கிறீர்களோ அதைப்போன்றே உண்மையானதாக இருக்கும். ஏன், அவர் உங்களோடு பேசுவதையும் நடப்பதையும் உங்களால் கேட்க முடியும். ஆகவே அவர்.... எதுவாயிருந்தாலும், அது உண்மையானதே. ஆகவே அது ஒரு தரிசனமல்ல; நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அதேவிதமாக அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருக்கிறார். ஆகவே அவருடைய சத்தம் என்னுடைய அல்லது உங்களுடையது போலவே அதேவிதமாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு தரிசனமோ, உங்களுக்கு முன்பாக வருகின்ற ஒன்றாகும், அதைப் போன்று நீங்களும் அதைக் காணலாம். ஆனால் இந்த மனிதனோ அப்படியே மேலே நடந்து அங்கே நிற்கிறார். 11ஆகவே என்ன நடக்கப் போகின்றது என்பதை அவர் எனக்கு கூறினார். அவர் கூறினார் அந்த... இந்த தூதன் கீழே வந்தார், அவர் என்னை திருப்பி இந்தப் பக்கமாக நோக்கிப் பார்க்கும்படி என்னிடம் கூறினார். அது இந்தியாவை நோக்கினதாக இருந்தது, அப்பொழுது அது இந்தியாவிலிருக்கிறது என்று நான் கூறவில்லை, ஆனால் அது அருகாமையில் இருந்தது. ஆனால் அவர்கள் இந்திய மக்கள் ஆவர். ஏனெனில், ஆப்பிரிக்கர்கள் பெரிய, முரடான, பருத்த உருவம் மிக்க ஜனங்கள் ஆவர். அவர்களில் சிலர் ஏறக்குறைய ஏழு அடி உயரம் மிக்கவர்களாய், இருநூற்று எண்பது, முந்நூறு பவுண்ட் எடையுடையவர்களாக இருப்பர், ஓ, பெரிய உருவம். சூலூக்கள் (Zulus), இப்பொழுது, அந்த ஷூங்கிக்கள் (Songhai) மற்றும் பசுடாக்கள் (Bazutu) ஓ, அங்கே அநேக வித்தியாசப்பட்ட பழங்குடி வகையினர் உள்ளனர். அங்கே பதினைந்து வித்தியாசப்பட்ட பழங்குடி வகையினர் அந்த நாளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர், நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். 12நான் ஒரு வார்த்தை கூறினேன், ''இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன்'' என்பதைப்போல. அதை எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் கூறி முடிப்பதற்குள்ளாக நான் சென்று சிறிது தண்ணீர் பருகிவிட்டு வருவேன். ஒருவர் கூறுவார்... எல்லாம் சத்தங்கள் போலிருக்கும் பெந்தெகொஸ்தே மக்கள் அந்நிய பாஷை பேசுகையில் நான் கேட்டிருக்கிறேன், அது ஒருக்கால் ஒருவர் ஒருவிதமான சத்தத்தில் பேசுகிறார் மற்றொருவர் வேறொன்றை பேசுகிறார் அது எப்படி? என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் வேதாகமம் சரி என்று நான் விசுவாசிக்கிறேன், ''அது அவ்விதமாகத்தான் என்று எனக்குத் தெரியும், அது அர்த்தமில்லாமல் எந்த ஒரு சத்தமும் இல்லை'' என்று கூறியிருக்கிறது. அவர்களில் சிலர் கூறுவர், அவர்களில் ஒருவர், “பிளார் பிளவர் பிளார் பிளார்'' என்பார். அப்படியானால் ”இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன்“ என்று அர்த்தமாயிருக்கும். மற்றொருவர், ''கிளக் கிளக் கிளக் கிளக்'' என்பார், அதற்கு ''இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்'' என்று அவருடைய பாஷையில் அர்த்தமாயிருக்கும். ஆகவே அது எந்தவிதமான ஒரு ஒலியாக இருந்தாலும் சரி, எங்கோ ஓரிடத்தில் அது ஒரு அர்த்தமாக இருக்கும். அது சரி. அது எந்தவிதமான சத்தமாக இருந்தாலும் சரி, அது யாரோ ஒருவருக்கு எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒன்றாக இருக்கும். ஆகவே அவர்... அவர்கள் அதைச் செய்வர். 13ஆகவே என்னுடைய இடது பக்கத்திற்கு, அந்த தூதன் கீழே வந்தபோது ஒரு திரளான கூட்டம் போல் அங்கே இருந்தது, என்பதை நான் கவனித்தேன். அவர்கள் மனிதர். அவர்களைச் சுற்றி ஒரு - ஒரு போர்வை போன்று காணப்பட்டது. இதைப்போன்று, ஒரு சிறு குழந்தைக்கு சுற்றப்பட்டதுபோல், சுற்றபட்டு முடிச்சு போடப்பட்டிருந்தவர்களாயிருந்தனர், குழந்தையின் அணையாடைப்போன்று. ஆகவே அதுதான். என்னால் கூடிய மட்டும் பார்க்க என்னால் முடிந்தது, அது ஜனங்களைத் தவிர வேறெதுவுமில்லை. ஆகவே பிறகு இந்த தூதன் ஒரு மகத்தான முன்னும் பின்னும் ஆடுகின்ற விளக்கைப் போட்டு, அதைப்போன்று முன்னும் பின்னுமாக ஆட்டத் துவங்கினான். நான் என்னுடைய வாழ்க்கையில் அவ்வளவு ஜனங்களை கண்டதில்லை. ஆகவே பிறகு இந்த அடுத்ததுதான் எனக்கு மிக அருகாமையில் வந்து, ''அந்த கூட்டத்தில் அவர்களில் மூன்று இலட்சம்பேர் உள்ளனர்'' என்று கூறினார். அதை நான் இங்கே குறித்து வைத்திருக்கிறேன். நீங்களும் அதை ஒரு காகிதத்துண்டைப் போன்றவற்றில் குறித்துக் கொள்ளுங்கள், பின்லாந்து நாட்டில் அந்த சிறிய பையன் உயிரோடெழுவதைக் குறித்து நான் கூறியது போன்று. நீங்கள் அதை உங்கள் வேதாகமத்தின் முன்புறம் அல்லது பின்புறத்தில் இருக்கின்ற வெற்றுத்தாளில் அல்லது எங்கேயாவது, இந்த கூட்டத்தில் ஒரு கூட்டம் ஒன்று நடக்கப்போகின்றது. அதை நீங்கள் ஏதாவது (ஒரு விளம்பரத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்) மூன்று இலட்சம் பேர்கள் கலந்து கொள்வார்கள், என்பதைக்குறித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, அது சரியானதா என்பதைப் பாருங்கள். அது முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமானதாக இருக்கும். பாருங்கள்? மூன்று இலட்சம் ஜனங்கள் கூட்டத்தில் பங்கு கொள்வர். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, நான் அங்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் நம்முடைய கர்த்தருக்கு ஆத்துமாக்களை சம்பாதிக்கவே நான் விரும்புகிறேன். அங்கே, ஒரே நேரத்தில், ஒரே பீட அழைப்பில் முப்பதாயிரம் பக்குவப்படாத அஞ்ஞானிகள், பக்குவப்பட்டிராத முப்பதாயிரம் அஞ்ஞானிகள். இயேசு கிறிஸ்துவண்டை வந்ததைக் காண்கையில் - காண்கையில்.... 14இப்பொழுது நம்முடைய பொருளிற்கு நாம் சீக்கிரமாக போவோம். நேற்று தீய ஆவிகளின் செய்முறை நுட்பத்தை நாம் ஆராய்ந்தோம். நான் தேவன் நடத்தும் விதமாக இன்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதை அறிந்து கொள்வதென்பது எவ்வளவு அருமையான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாது. இப்பொழுது, நான் ஒரு போதிப்பவர் அல்ல. ஒரு - ஒரு வேதாகம வியாக்கியானி என்பதிலிருந்து மிக அப்பாற்பட்டவன் நான். நான்.... என்னுடைய கல்வியறிவு ஏழாம் வகுப்பு வரை இருக்கின்ற ஒன்று தான். ஆகவே ஆ... ஆகவே நான் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்.... நான் பள்ளியிலிருந்து வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது, எனக்கு கல்வியறிவு கிடையாது, ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம் நான் ஊக்கத்தின் மூலமாக பெற்றுக் கொள்வதேயாகும். மேலும் அந்த ஊக்கமானது வேதாகமத்துடன் ஒத்துப்போகாவிடில், அப்படியானால் அது தவறான ஒன்றாகும். பாருங்கள்? அது வேதாகமமாக இருக்கவேண்டும். அது எந்தவிதமான ஊக்கமாக இருந்தாலும் சரி, அது வரவேண்டியது... இது தான் தேவனுடைய அஸ்திபாரம். இதைத் தவிர வேறு எந்த அஸ்திபாரமும் போடப்படவில்லை. ஆகவே இது என்னவோ, நான் கூறுவது இதற்கு முரண்பாடாயிருக்குமாயின், என்னுடைய வார்த்தைகள் பொய் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம், ஏனெனில் இதுதான் சத்தியமாகும். புரிகின்றதா? புரிகின்றதா? இதிலிருந்து வித்தியாசமாகக் காணப்படும் ஒன்றை ஒரு தூதன் உங்களுக்கு கூறுவானானால், ''அவன் உங்கள் பார்வைக்கு சபிக்கப்பட்ட ஒருவனாயிருப்பான்'' என்று பவுல் கூறியுள்ளான், ஒரு ஒளியின் தூதனாகக் கூட இருந்தாலும் சரி. இப்பொழுது, அநேக மகத்தான காரியங்கள் இருக்கின்றன. நான் மாத்திரம்.... மாத்திரம்... இந்த பொருளை மக்களுக்கு கற்பிக்கத்தக்கதாக நான் இரண்டு நாட்களையே தெரிந்து கொண்டேன், அது நேற்று மற்றும் இன்று மதிய கூட்டங்கள் ஆகும். 15இப்பொழுது, நான் இதைச் செய்த காரணம் என்னவெனில் தேவன் எனக்கு உதவி செய்வாரா என்று என்னைத்தானே சோதித்து பார்க்கவே ஆகும். என் இருதயத்தில் ஏதோ ஒன்று இருக்கின்றது. ஆகவே இது, இந்த மகத்தான செய்திக்கு பிறகு, சத்தியம் என்று நான் கூறினதை தேவன்தாமே அவருடைய வார்த்தையைக் கொண்டு, முதலாவதாக வார்த்தையினால், உறுதி செய்தபிறகு, பிறகு அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக உறுதி செய்தார். இப்பொழுது, சபைக்கான சுவிசேஷ சத்தியத்துடன் நான் தேவனுக்குக்கென்று இதை சபைக்கு கொண்டு வரத்தக்கதாக, நான் கடமைப்பட்டுள்ளவனாக உள்ளேன் என்றே நினைக்கிறேன். அது சரியே. அவர்கள் தவறாயிருக்கின்ற பல ஸ்தானங்களின் கீழ் உடைந்து போயுள்ளனர். நாம் மறுபடியும் பிறந்தபோது நாமெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். அதைப் பாருங்கள். நாமெல்லாரும் அவருடைய பிள்ளைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே தேவன் விரும்புகின்ற காரியத்தின் உண்மையாயிருக்கின்றது. 16இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், சாலமோனின் தேவாலயத்தின் கற்கள் உலகெங்கிலுமிருந்து கொண்டு வரப்பட்டது. இங்கே ஒரு கல் இந்த விதமாக வெட்டப்பட்டு வந்தது, ஒரு கல் அந்த விதமாக வெட்டப்பட்டு வந்தது, ஒன்று இந்த விதமாக செதுக்கப்பட்டு வந்தது, மற்றொன்று அந்த விதமாக செதுக்கப்பட்டு வந்தது, ஆனால் அவையெல்லாம் ஒன்றாக இணைக்கப்படுகையில், ஒரு இரம்பத்தின் ரீங்காரம், அல்லது ஒரு சுத்தியலின் சத்தமும் கூடக் கேட்கப்படவில்லை, எல்லாம் சரியாக அதன் இடத்திற்கு பொருந்தினது. தேவன் தான் அதின் ஆசிரியர் ஆவார். அசெம்பிளீஸ், மற்றும் தேவனுடைய சபை என்ற, இந்த மற்றும் அந்த என்று அழைக்கப்படும் சபையை தேவன் கொண்டிருக்கிறார். ஆகவே, ஆனால் அவர்களெல்லாரும் ஒன்றாக வரும்போது, அவர்கள் சகோதர அன்பின் ஒரு பெரிய குழுவாக இருப்பார்கள், தேவன் அந்த சபையை ஒன்றாகக் கூட்டி அவளை மேலே வானத்திற்குள் கொண்டு செல்வார். 17ஒவ்வொரு பிரசித்திப்பெற்ற படமும் அது ஒரு கலைக்கூடத்தில் மாட்டப்படும் முன்னர், அது தொங்கவிடப்பட வேண்டும், முதலாவதாக விமர்சகரின் மாடத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு சுவை நயத்தை வரைந்த அந்த மனிதன் அல்லது, என்னை மன்னிக்கவும், கடைசி இராப்போஜனம் படத்தை வரைந்த அந்த மனிதனின் பெயரை என்னால் உச்சரிக்க முடியவில்லை, அது என்னவாயிருந்தாலும், அதை வரைய அவனுடைய வாழ்நாள் முழுவதும் ஆனது. அவன்தான் அந்த படத்தை வரைந்தான். கிறிஸ்து மற்றும் யூதாஸ் படம் வரைந்த இடைபட்ட காலமானது இருபது வருடங்கள்... அல்லது அல்லது பத்து வருடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன், கிறிஸ்துவின் தோற்றத்திற்காக ஓவியனின் மாதிரி வகையான தோற்றத்தை மேற்கொண்ட அதே மனிதன் பத்து வருடங்கள் கழித்து யூதாசின் தோற்றத்திற்காக ஓவியனின் மாதிரி வகையாக நின்றான் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அது சரியே. அவன் செய்தான். பாவத்தின் பத்து வருடம், ஒரு பெரிய இசை நாடகப் பாடகன் என்பதிலிருந்து, கிறிஸ்துவின் இடத்தை எடுத்துக்கொள்ள, யூதாசின் இடத்திற்கு வர உங்களுக்கு பத்து வருடங்கள் தேவையில்லை. உங்களுக்கு அதே காரியத்தைச் செய்ய பத்து நிமிடங்கள் போதும். அது பாவத்திற்குள்ளாக மாற்றிவிடும். ஆனால், எப்படியாயினும், அந்த ஓவியமானது எல்லா குறைகூறுபர்களினூடாக கடந்து சென்றது. 18தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகின்ற அந்த குழுவைக் குறித்து அவ்வாறு தான் என்று நான் நினைக்கிறேன். இதை நான் தாக்கிக் கூறவேண்டுமென்று நான் விழையவில்லை. நான் ஏழு கடல்கள் பிரயாணம் செய்திருக்கிறேன், உலகைச் சுற்றி மூன்றாவது முறையாக நான் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன். மக்கள், ''பரிசுத்த - உருளையன் பரிசுத்த உருளையன்!'' என்று கூறுகின்றனர். நான் உலகம் முழுவதுமாக தேடினேன், ஆனாலும் இன்னுமாக நான் ஒரு பரிசுத்த உருளையனைக் கண்டெடுக்கவில்லை. அது மக்களின் மேல் பிசாசு கட்டிவிட்டிருக்கின்ற ஒரு பெயராகும். அவ்வளவுதான். பரிசுத்த உருளையன் என்கின்ற ஒரு காரியம் கிடையவே கிடையாது. உலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு அறுநூற்று அறுபது - எண்பது வித்தியாசப்பட்ட சபைகளின் புள்ளி விவரத்தை நான் வைத்திருக்கிறேன், அவைகளில் ஒன்று கூட பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. ஆகவே அது அரசாங்கத்திலிருந்து வந்ததாகும். எனக்கு தெரிந்திருக்கும் வரை ஒரு பரிசுத்த உருளையன் சபை என்பது கிடையாது. ஆகவே அது பிசாசு அவ்விதமாக அழைத்த ஒன்று. ஆனால் இப்பொழுது, இவையெல்லாவற்றிலும், இந்த எல்லா காரியங்களிலும், தேவன் ஒரு படத்தை வரைந்திருக்கிறார். ஒரு காலத்தில் இங்கே இருந்த இந்த சிறிய சபைகளில், உங்களில் சிலர்.... 19இந்த நரைத்த தலையையுடைய மனிதரை நான் கவனிக்கிறேன். நேற்றைய தினம் நான் அறையில் ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு போதகர் என் மகனிடம் வந்து ''உன்னுடைய அப்பாவிடம் கைகளைக் குலுக்க விரும்புகிறேன்'' என்றார். ஆம், என் மகன் சகோதரன் பாக்ஸ்டர் மற்றும் அவர்களுடன் வளர்க்கப்பட்டான், அவன் உடனே, ''இல்லை'' என்று கூறிவிட்டான், அவ்வளவுத்தான், அது எனக்கு பிடிக்காது. பாருங்கள்? பரவாயில்லை நான்..... ஆம், தேவன் மற்றும் மனஷனுடைய ஊழியக்காரனாகக்கூட இருக்க முடியாது. ஆனால் என்னுடைய சகோதரரோடு கைகுலுக்கவே நான் விரும்புகிறேன். அவ்விதமாகச் செய்ய எனக்கு பிடிக்கும். அதைக்குறித்து ஒன்று இருக்கின்றது, ஒரு - ஒரு ஊழியக்காரனுடைய கைகளையும் குலுக்க நான் விரும்புகிறேன். ஒரு ஊழியக்காரனுக்கு மாத்திரம் அல்ல, எந்த ஒரு தேவனுடைய பிள்ளைக்கும், நான் அதைச் செய்ய விரும்புகிறேன். என் மனைவி சற்று முன்பு அதைக்குறித்து எனக்கு கூறும் வரை எனக்குத் தெரியாது. நல்லது, அவன் அந்த போதகரிடம், ''ஒரு நிமிடம், அவர் அங்கே ஜெபத்தில் இருக்கின்றார், ஆகவே - ஆகவே அவர் என்ன செய்கின்றார் என்று பார்க்கிறேன்'' என்று கூறியிருப்பானென்றால், நல்லது, அது, அது சற்று நலமாக இருந்திருக்கும். அவ்விதமாகச் செய்யக்கூடாதென்று, நான் அதைக்குறித்த ஒரு சிறிய திருத்தத்தைக் கொடுத்தேன். பாருங்கள்? 20ஆகவே அது உண்மையாகும், சற்று முன்னர் சகோதரன் கூறியவாறு நீங்கள் நேராக அப்படி செய்யக்கூடாது. நீங்கள் அப்படி செய்வீர்களானால், நீங்கள் பாருங்கள் அப்படியானால் இரவு நேரத்தில் நான் - நான் களைத்துப் போயிருப்பேன். மக்கள் பேச ஆரம்பிப்பர், ஒருக்கால் ஒவ்வொருவருக்கும் ஒரு வியாதி இருக்கலாம், ஆகவே அவர்கள் அதைக்குறித்து பேசும்போது, சீக்கிரத்தில், சரியாக அதைக்குறித்துக் கூற கர்த்தருடைய தூதனானவர் அங்கே இருக்கின்றார். இப்பொழுது சில நிமிடங்களுக்கு முன்னர், அல்லது சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் அது சரியென்று அறிந்திருக்கின்ற ஒருவர் உட்கார்ந்து இப்பொழுது என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒரு ஸ்திரீ இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், முந்தின இரவு கர்த்தருடைய தூதன் அவர்களிடம் பேசி ஒன்றை அவர்களுக்கு கூறினார், அவர்களால் அதைப்புரிந்து கொள்ளமுடியவில்லை, அது என்னவென்றே அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் இன்று அது சம்பவித்தது, ஆகவே அவர் அவளிடம் பேசிக் கொண்டிருந்ததன் அர்த்தம் என்ன என்பது இப்பொழுது அவர்கள் அறிந்து கொண்டனர். ஆகவே அங்கே நின்று கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கர்த்தருடைய தூதனானவர் நேராக சென்று அவர்களுடைய பிரச்சனை என்ன என்றும், அதைக்குறித்த எல்லாவற்றையும், மேலும் - மேலும் எதைக்குறித்து அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுடைய அருமையானவர்களில் ஒருவர், தேவன் எவ்விதமாக பேசி அதை அவர் உறுதிபடுத்தினார் என்று கூறினதையும், என்ன நடக்கப்போகின்றது என்பதையும் அவர்களுக்கு கூறினார். ஆகவே சரியாக அந்த விதமாகவே அது இருக்கும். பாருங்கள்? தேவன் அவ்விதமாகக் கூறினார். 21நல்லது, இப்பொழுது, சில சமயங்களில் அந்த..... பிறகு, ஒவ்வொரு தரிசனமும் உன்னை அதிகமாக பலவீனமடையச் செய்யும், பாருங்கள். ஆகவே முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, சபைக்கு இரவில் நீங்கள் செல்லும்போது, என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு நீங்கள் முழுவதுமாக களைத்துப் போயிருப்பீர்கள். இப்பொழுது எனக்காக நீங்கள் ஜெபியுங்கள், பாருங்கள், ஏனெனில் அது ஒரு கூட்டத்திலிருந்து மற்றொன்றிற்காகும். இது ஒரேயொரு கூட்டம் மாத்திரம், அது வித்தியாசமானதாக இருக்கும், இப்பொழுது நான் வீட்டிற்குச் சென்று இரண்டு மாதங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லையென்றால், வெளியே சென்று என்னுடைய மீன் தூண்டிலை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கச் சென்றுவிடுவேன். ஆனால் நான் ஒரு கூட்டத்திலிருந்து மற்றொரு கூட்டத்திற்கு செல்ல வேண்டியவனாகவுள்ளேன், நீங்கள் பாருங்கள். அதுதான் அதை பிறப்பிக்கின்றது. 22ஆகவே நீங்களெல்லோரும் ஜெபியுங்கள், அங்கே பின்னே கூட்டத்தில் இருக்கின்ற மக்கள்.... அவர்கள் கடந்த இரவு என்னிடம் கூறினர் அந்த... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) அழைப்பிற்கு செவிகொடுக்கவில்லை. இப்பொழுது அது மிக ஆபத்தானது, நீங்கள் பாருங்கள். அவர்கள் அதைக் கூறினபோது..... நல்லது, சில சமயங்களில் இந்த வெளிச்சங்கள் பிரகாசிக்காது, அங்கே இடையே ஒரு கறுத்த புள்ளி இருக்கின்றது. கர்த்தருடைய தூதனானவர் இங்கே நின்று கொண்டிருப்பதை நான் கவனிப்பேன், என்னால் அதை உணரமுடியும். அப்பொழுது அது என்னிடமிருந்து அசைந்து செல்வதை என்னால் உணரமுடியும், நான் கவனிப்பேன், அது என்னை விட்டுச் சென்று எங்கோ ஓரிடம் சென்று சிறிது அங்கே நின்று கொண்டிருக்கும், என்னால் அதைக் காணமுடியும். பிறகு அது பிரகாசிக்கத் துவங்கும், பிறகு ஒரு தரிசனமானது வரத் துவங்கும். அப்பொழுது அந்த தரிசனத்தை நான் காண்பேன். அது எந்த விதமான நபராக அங்கே இருந்து காணப்படுகிறதென்பதை நான் கவனிப்பேன். நான் அந்த நபரைக் கண்டு கொள்வேன், பிறகு நான் பேசுவேன். சம்பவிப்பது அதுதான். அதை நீங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் அது - அதுதான் சம்பவிக்கின்றது, நீங்கள் பாருங்கள். அது எல்லாம் ஆவிக்குரிய பரிமாணத்தில் இருக்கின்றது. 23பிறகு அந்த நபர் மாறுத்தரம் அளிக்கவில்லையெனில், ''அதனுடன் ஒன்றுமில்லை'' என்று கூறுகின்ற இங்கே இருக்கின்ற வேதாகமத்தை வாசிப்பதைப் போன்று, அதனின்று கடந்து சென்றுவிடும். ஆகவே அது மிக மோசமாகச் செய்துவிடும். ஆகவே கவனமாக இருங்கள், கேட்டுக் கொண்டேயிருங்கள், கவனித்துக் கொண்டேயிருங்கள். அவர் பேசும் போது, பதிலளியுங்கள். பாருங்கள், எந்த நேரத்திலும் பதிலளிக்க தயாராக இருங்கள். இக்காலையில், என் மனைவி, மற்றும் சகோதரன் பீலர் அவர்களில் அநேகர், அதைக்குறித்து என்னிடம் கூறிக்கொண்டிருந்தனர், அது ஒரு மனிதனின் சகோதரனைக் குறித்ததாயிருந்தது. அது எங்கோ ஓரிடத்தில் இருந்த அவரைக்குறித்து ஏதோ ஒன்று தவறாகயிருப்பதை குறிப்பிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த மனிதனோ அந்த அழைப்பிற்கு மாறுத்தரம் அருளவில்லை, ஆகவே அதைக்குறித்து உதவி செய்யமுடியாது. அது தேவன் மற்றும் அந்த மனிதனுக்கிடையே உள்ள ஒன்றாகும். அந்த தரிசனம் என்னை விட்டுச்சென்றது. பிறகு என்னால் அதை மேலும் கண்டுகொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் பதிலளிக்கவில்லை. ஆதலால் நீங்கள் கவனித்துக் கொண்டேயிருங்கள், கவனமாக இருங்கள். 24இப்பொழுது நாம் பிசாசியல் என்ற பொருளை எடுத்து பிசாசுகளைக் குறித்து பேசுவோம். இப்பொழுது மக்களாகிய நீங்கள் ''பிசாசு'' என்று கூறுகையில் உடனடியாக அவர்கள் “ஓ ஏதோ ஒரு மூடபக்தி வைராக்கியம், அல்லது எதோ ஒன்று!'' என்று சிந்திக்கத் துவங்குகின்றனர். ஆனால் பிசாசுகள் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல தூதர்களும் அவ்வளவு உண்மையாக உள்ளது. அவைகள் அவ்விதமாகவே உண்மையாக உள்ளன. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதைப்போலவே உண்மையாகவே ஒரு பிசாசு என்கின்ற ஒருவன். அவன் ஒரு பிசாசு தான் மற்றும் பாதாளம் போன்ற ஒரு காரியம் இல்லாவிட்டால் பரலோகம் என்கின்ற ஒன்றும் கிடையாது என்று தான் அர்த்தம். ஆகவே நித்திய ஆசீர்வாதமானது.... இல்லை, நித்திய தண்டனையானது! இல்லையெனில் நித்தியமாக ஆசீர்வதிக்கப்படுதல் என்பதும் இருக்காது. ஒரு பகல் என்பது இல்லையெனில், இரவு என்பது கிடையாது. பாருங்கள்? ஆனால் பகல் என்பது எவ்வளவு நிச்சயமாக இருக்கின்றதென்றால், இரவும் இருக்கின்றது. நிச்சயமாக ஒரு - நிச்சயமாக ஒரு கிறிஸ்தவன் என்பவன் இருக்கிறானென்றால், ஒரு மாய்மாலக்காரனும் இருக்கத்தான் வேண்டும். தேவனிடத்திலிருந்து வந்திருக்கின்ற உண்மையான ஒருவன் இருப்பானென்றால், அதை போலியாக நடப்பித்துக்காட்ட ஒருவன் இருப்பான். பாருங்கள்? அது சரியாக ஆதரவாகவும் எதிராகவும், கறுப்பும் வெள்ளையுமான கூற்றாகவே உள்ளது, வாழ்கை முழுவதுமாக, அதின் பேரிலுள்ள எல்லாவற்றின் மேலும் எல்லாவிடங்களிலும் உண்மையானது மற்றும் தவறானது இருக்கின்றது. பொய்யான சுவிசேஷம் ஞானஸ்நானம் ஒன்று இருக்கின்றது, ஒரு உண்மையான சுவிசேஷமும் இருக்கின்றது. உண்மையான ஞானஸ்நானம் ஒன்று இருக்கின்றது, போலியான ஞானஸ்நானம் ஒன்றும் இருக்கின்றது. பாவனை விசுவாசம் என்று ஒன்று இருக்கின்றது, உண்மையான ஒன்றும் இருக்கின்றது. உண்மையான அமெரிக்க டாலர் உள்ளது, போலியான அமெரிக்க டாலரும் உள்ளது. மெய்யான கிறிஸ்தவன் ஒருவன் இருக்கின்றான், அசலான மாய்மாலக்காரனும் இருக்கின்றான், அப்படியே போலியாக நடித்துக் கொண்டிருப்பான். ஆகவே நீங்கள் அதைக்காணலாம், ஆகவே அவையெல்லாம் ஒன்று சேர்ந்து செல்கின்றது. இப்பொழுது, நம்மால் அதைப்பிரிக்க முடியாது. மழை பெய்யும்படியாக தேவன் செய்கின்றார். 25இங்கே நான் தானே சிறிது பேச அவர் அனுமதிக்கட்டும். இங்கே பிரசங்கிகள் எத்தனைப்பேர் இருக்கின்றீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எல்லா இடங்களிலும், பிரசங்கிகள், உங்கள் கரங்களை நான் காணட்டும். நல்லது, சகோதரரே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, இப்பொழுது நீங்கள் இதை ஒரு போதகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், ஆனால், இதை நாம் மிக முக்கிய பொருளாக அணுகலாம். அது என்ன என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். பெந்தெகொஸ்தே மக்கள் எத்தனைப்பேர் இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், சுற்றிலும் எல்லாவிடங்களிலும் உள்ளனர். நல்லது, நீங்களெல்லாரும் பெந்தெகொஸ்தேயினர். சரி. உங்கள் மத்தியில் முதன்முதலாக வந்த நான் என்ன கண்டேன் என்பதை உங்களுக்கு கூறப்போகிறேன். இங்கே இந்தியானாவில் மிஷாவாக்கா என்று அழைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் இருந்தேன். நான் முதலாவதாக கண்ட பெந்தெகொஸ்தே மக்களின் முதல் குழு, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பெந்தெகொஸ்தே சபைகள் என்று அழைக்கப்பட்டனர், அவ்விதமாக அல்லது அதைப்போன்ற ஒன்று என்று நான் நினைக்கிறேன், அது அருமையான மக்களைச் சார்ந்த குழுவாகும். இப்பொழுது அவர்கள் ஒன்று சேர்ந்து ஸ்தாபித்துக் கொண்டு ஐக்கிய பெந்தெகொஸ்தேயினர் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தின் பேரில் மற்றவர்களிடமிருந்து உடைந்து சென்றனர், அது அவர்களை மாய்மாலம் செய்பவர்கள் என்று ஆக்கிவிடாது. அவர்களைச் சேர்ந்தவர்களில் அநேகர் மெய்யான, உண்மையான பரிசுத்த ஆவி பெற்ற, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் ''இயேசுவின் நாமத்தில்'' ஞானஸ்நானம் பெறுகையில் தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியை அளித்தார், மற்றவர்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியில்'' ஞானஸ்நானம் பண்ணப்படுகையில் பரிசுத்த ஆவியை அளித்தார். ஆதலால், ''அவருக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் பரிசுத்த ஆவியை அருளுகிறார்,'' ஆகவே யார் - யார் பெற்றுக் கொண்டனர், யார் அவருக்கு கீழ்ப்படிந்தது? உங்களுக்கு புரிகின்றதா. 26நீங்கள் மறந்து போவீர்களானால், மேலும் ஒரு வழியில் இருக்க அவர்கள் விரும்புவார்களானால், அவர்கள் அப்படியே இருக்கட்டும், நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள், சகோதரர்களாக இருங்கள். அவ்வளவுதான். நீங்கள்... நடந்தது என்னவென்றால், அது அவர்களை உடைத்துக் கொண்டிருந்தது, உடைத்தது. பாருங்கள்? என்ன? உடைத்துக் கொண்டிருந்தது, கிழித்தது, சகோதரத்துவத்தை உடைத்தது, உங்களை நீங்களே வேறு பிரித்துக் கொள்கிறது. இல்லை, ஐயா, நாம் பிரிக்கப்பட்டவர்கள் அல்ல, நாமெல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். அது சரி. 27ஆனால் நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, அந்த மக்களை கவனித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, நான், ஒரு வழக்கமான, சிறிய, பழமையான தெற்கத்திய பாப்டிஸ்ட் சபையிலிருந்து வெளியே வந்திருந்தேன், என்ன, நான் அந்த மக்களைப் பார்ப்பேன். நான் இங்கே உள்ளே சென்றபோது அவர்களெல்லாரும் கைகளை கொட்டி, ''அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன் என்று கூறுவதில் மகிழ்ச்சி!'' கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ''என்னே! வியூ'' என்று நான் நினைத்தேன். முதலாவது காரியம் உங்களுக்கு தெரியும், அங்கே யாரோ ஒருவர் கூட்டத்தினூடாக வந்தார், அவர்களால் கூடிய மட்டும் மிகவுமாக நடனமாடிக் கொண்டிருந்தனர், நான், “என்ன ஒரு விதமான சபை நடத்தை! இவ்விதமான காரியங்களைக் குறித்து நான் கேள்விபட்டதேயில்லையே'' என்று நினைத்தேன். நான் அவர்களை சுற்று முற்றும் கவனித்துக் கொண்டிருந்தேன். ”நல்லது, இந்த உலகத்தில் அந்த மக்களுக்கு என்ன தான் சம்பவித்ததோ?'' என்று நான் வியந்து கொண்டிருந்தேன். 28இப்பொழுது, அங்கே நடந்த கூட்டத்தைக் குறித்து நான் என் வாழ்க்கை கதையை குறித்து கூறுகையில் நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். ஆனால் இந்த ஒரு காரியத்தை பொது மக்கள் முன்னிலையில் நான் கூறவில்லை, இதுவரை நான் கூறினதில்லை. ஆகவே அவர்கள்... இப்பொழுது, இதை உங்கள் ஒலி நாடாவிலிருந்து அழித்து விட விரும்புவீர்களானால், என்ன, அதைச் செய்துக் கொள்ளலாம். சரி. இதில் நான் கவனித்தது, இப்பொழுது நான் “நல்லது, என் வாழ்க்கையில் நான் கண்டதிலேயே மிக மகிழ்ச்சியாக இருப்பது இந்த மக்கள் தான்'' என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்து வெட்கப்படவில்லை. பாப்டிஸ்டுகளாகிய நாம் எப்பொழுதாவது ஒருமுறை சிறிது வெட்கப்படுவோம், உங்களுக்கு தெரியுமா? அவர்கள் ஜெபிக்கச் செல்லும்போது, உங்களுக்குத் தெரியுமா, மின் விசிறியின் பின்னால் சென்றுவிடுவர், உங்களுக்குத் தெரியுமா. ஆகவே - ஆகவே ஆனால் நாமோ.... ஆனால் அந்த மக்கள் அவ்விதமாக அல்ல, சகோதரனே, உள்ளும், புறம்பும், மற்றும் அவர்கள் முழுவதுமாக அவர்கள் - அவர்கள் மதத்தை (Religion) கொண்டிருந்தனர். 29நல்லது, பிரசங்க மேடையின் மீது நான் சென்ற அந்த இரவை நான் நினைவு கூறுகிறேன். ''மேடையில் இருக்கின்ற எல்லா பிரசங்கிகளே'' என்றேன். அது ஒரு கன்வென்ஷன் கூட்டமாக இருந்தது. தெற்கத்திய ஜீம் கிரா சட்டத்தினால், நிறவெறிப் பிரச்சனையால் அவர்கள் இதை மேற்கில் வைக்க வேண்டியதாக இருந்தது. ஆதலால் எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் ஒன்று கூடியிருந்தனர். ஆதலால், நான் அங்கே மேலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் கூறினார்.... நல்லது, இப்பொழுது அங்கே.... அந்த பகல் மற்றும் இரவு முழுவதும் எல்லா பிரசங்கிகளும் பேசினதைக் கேட்டேன். யாரோ ஒரு வயது சென்ற பிரசங்கி என்று கூறினர், அவர் ஒரு கறுப்பர் இன மனிதராக இருந்தார், அவர் பெரிய பழைய பிரசங்க அங்கியை அணிந்தவராக வந்தார், அவருடைய தலையில் அதைப்போன்று ஒரு சிறிய வட்ட வடிவான மயிர் இருந்தது, உங்களுக்கு தெரியுமா - வெல்வெட் காலர் பட்டையுடன் அதுவும் அந்த உஷ்ணமான சீதோஷன நிலையில் அந்த பரிதாபமான வயோதிப ஆள் இதைப்போன்று வந்தார். அவர் கூறினார், ''என் அருமை பிள்ளைகளே“ என்றார். அவர் கூறினார், ''நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்'' என்று. அவர் சாட்சி கூற ஆரம்பித்தார். பிரசங்க மேடையில் உட்கார்ந்திருந்தவர்களில் நான் தான் இளையவனாக இருந்தேன். ஆகவே அவர் அப்பொழுது கூறினார், ''நான் உங்களுக்கு கூறுகிறேன்!'' என்று. அவர் தன்னுடைய பொருளை யோபிலிருந்து எடுத்தார், ''நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? அதின் ஆதாரங்கள் எதின் மேல் போடப்பட்டது''. 30இந்த மற்ற எல்லா பிரசங்கிகளும் தொடர்ச்சியாக கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை கேட்டு, அவைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த வயோதிப ஆள் அப்படிச் செய்யவில்லை உலகம் துவங்குவதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சென்றார். அவர் பரலோகங்களுக்குள் சென்று ஆகாய விரிவுகளைக் கடந்து கீழே வந்தார், என்ன சம்பவித்தது என்று காண்பித்தார். அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தது என்னவென்றால், பகல் நேரத்தில் என்ன நடக்கிறதென்று; இவரோ பரலோகத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்று பிரசங்கித்தார். அவர் கிறிஸ்துவை அடிவானத்திலுள்ள வானவில்லின் மேல் திரும்பக் கொண்டு வந்தார். என்ன அந்த வயோதிப ஆள் சுமார் ஐந்து நிமிடங்கள் கூட பிரசங்கித்திருக்கமாட்டார், ஏதோ ஒன்று அவரை ஆட்கொண்டது. அவர் மேலே எகிறி குதித்தார், தன்னுடைய குதிங்கால்களை ஒன்று சேர்த்து தட்டினார், ''ஊ ஊப்பீ“ என்று கூக்குரலிட்டார். இங்கே எனக்கு பிரசங்கிக்க எவ்வளவு இடமிருக்கின்றதோ அவ்வளவு இடம் அவருக்கும் அங்கே இருந்தது. அவரோ ”எனக்கு பிரசங்கம் செய்ய போதுமான இடத்தை நீங்கள் எனக்கு அளிக்கவில்லை'' என்று கூறி திரும்பி சென்றுவிட்டார். என்ன, நான் “எண்பது வயது நிரம்பிய ஒரு மனிதனுக்கு அது அவ்விதமாகச் செய்யுமென்றால் எனக்கு என்ன செய்யும்?'' என்று எண்ணினேன். அதுதான் எனக்குத் தேவை. அதுதான் எனக்குத் தேவை. 31ஆனால் என் கவனத்தைக் கவர்ந்தது இதுதான். இப்பொழுது நாம் பிசாசுகளின் பேரில் பேசிக் கொண்டிருக்கிறோம். என் கவனத்தை இழுத்ததென்னவென்றால், நான் இரண்டு மனிதரை கவனித்தேன். ஒருவர் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தார், மற்றவர் வேறொரிடத்தில் அமர்ந்திருந்தார். ஆவி விழ ஆரம்பிக்கையில் அந்த மனிதர் எழுந்து அந்நிய பாஷையில் பேசி சத்தமிடுவார், வாயைச் சுற்றி வெள்ளை நுரையாக படர்ந்திருக்கும். ஆகவே நான், ''ஓ, என்னே, அதை மாத்திரம் நான் கொண்டிருப்பேனானால்! எவ்வளவு அற்புதமானது! ஓ அது... அதை நான் நேசிக்கிறேன்“ என்று நினைத்தேன், பாருங்கள். நல்லது, நான் சோளவயலுக்குச் சென்றேன். என் வாழ்க்கை கதையை உங்களுக்கு கூறியுள்ளேன். புத்தகத்தில் அதை நீங்கள் வாசிக்கலாம். இரவு முழுவதும் நான் உறங்கினேன். அடுத்தநாள் நான் திரும்பி வந்தேன், அதை சோதித்து பார்க்க வேண்டுமென நான் எண்ணினேன். நானும் தேவனும் தவிர, மற்ற யாரும் அறியாத விதத்தில் காரியங்களைச் செய்கின்ற ஒரு வழியை நான் கொண்டிருக்கிறேன். ஆதலால், அது நான் ஒரு உவமையை எடுத்து பிறகு ஒரு மனிதனின் ஆவியை சந்திக்க புறப்படுவேன். நீங்கள் அதை சரியாக பிரசங்க மேடையின் மீது காணலாம். பாருங்கள்? ஆகவே பிறகு நான் அந்த மனிதரில் ஒருவரிடம் பேச ஆரம்பித்தேன். நான் அவர்களை கவனித்தேன், அவர்கள் ஒன்றாக அருகில் அமர்ந்திருந்தனர், அவர்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடனமாடி சத்தமிட்டனர். நான், ”ஓ, என்னே, அது உண்மையென்றே எனக்கு தோன்றுகிறதே!'' என்று எண்ணினேன். ஆகவே அவர்களில் ஒருவருடைய கரங்களைப் பிடித்து, ''ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கூறினேன். அவர், ''நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்'' என்றார். மிக அருமையான மனிதன், பண்பாடு மிகுந்த ஆள். அவர் கூறினார்.... நான் “நீங்கள் ஒரு போதகரா?'' என்றேன். அவர், ''இல்லை, ஐயா. நான் ஒரு சாதாரண உறுப்பினர் மாத்திரமே'' என்றார். அவருடைய ஆவியை கண்டறிவதற்காக அவருடன் ஒரு சிறிய உரையாடலைச் செய்து கொண்டிருந்தேன். பாருங்கள்? அவருக்கு அது தெரியாது. யாருக்குமே தெரியாது. அதைக்குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை. அநேக வருடங்கள் கழித்து நான் அதைக் கூறினேன். ஆதலால் அவர்கள்... நான் கண்டுபிடிக்க ஆரம்பிக்கையில், அது சரியாக காண்பித்தது, அந்த மனிதன் பூரணமான, ஒரு கிறிஸ்தவ மனிதன் அந்த மனிதன் முற்றிலுமாக ஒரு தேவனுடைய பரிசுத்தவானாக இருந்தார். நான், ''சகோதரனே, அது அருமையானது'' என்று நினைத்தேன். 32ஆனால் விசித்திரமான பாகம் என்னவென்றால், நான் அந்த இன்னொரு மனிதனை சந்தித்தபோது, அது முரண்பாடான ஒன்றாக இருந்தது. அவர் தன்னுடைய மனைவி அல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அது சரி. ஒரு தரிசனம் அவரைக் குறித்து காண்பித்ததை நான் கண்டேன். நான், “ஓ, என்னே, அவ்விதமாக இருக்கக் கூடாதே'' என்று எண்ணினேன். ஆகவே அந்த மனிதன்.... நான் இப்பொழுது, இப்பொழுது, அந்த மக்களின் மத்தியில் இருந்த ஆவி தவறான ஒன்றாகும். அவ்வளவு தான் என்று நினைத்தேன். ஆகவே அந்த இரவில்... கூட்டத்திற்கு சென்றேன், ஆசீர்வாதங்கள் பொழியப்பட்டுக் கொண்டிருந்தன, நான் தேவனை நோக்கி ஜெபிப்பேன், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், அது பரிசுத்தஆவி தான் என்று கர்த்தருடைய தூதனானவர் சாட்சி கொடுப்பார். ஆகவே அந்த ஆவி தான் இந்த மனிதன் மேலும் பொழியப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த மனிதன் மேலும் பொழிந்து கொண்டிருந்தது. ஆகவே பரிசுத்தஆவி விழும்போது, அந்த இருவரும் எழுந்து நின்று இருவருமே சத்தமிட்டு, கூச்சலிட்டு கர்த்தரைத் துதித்து அந்நிய பாஷையில் பேசி நடனமாடுவார்கள். நான் ''என்னால் - என்னால் - என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை, கர்த்தாவே. அந்த... அதை வேதாகமத்தில் என்னால் காணமுடியவில்லை, அது எப்படி சரியானதாக இருக்கும்'' என்று கூறினேன். இப்பொழுது நான் ''ஒருக்கால் நான் வஞ்சிக்கப்பட்டிருப்பேன்'' என்றேன். பாருங்கள்? நான் கூறினேன்.... இப்பொழுது இங்கே என்னால் - என்னால்... நான் - நான் வேதாகமத்தில் விதிவிலக்கிற்கு இடந்தராத மிகவும் அடிப்படைவாதி. அது இந்த விதமாகத்தான் இருந்தாக வேண்டும். பாருங்கள்? நான் ''கர்த்தாவே, என்னுடைய நிலைமையை நீர் அறிவீர், மேலும் நான் - நான் அதை உம்முடைய வார்த்தையில் காண வேண்டியவனாக உள்ளேன். எனக்கு - எனக்கு புரியவில்லையே. பரிசுத்த ஆவி இந்த மனிதனின் மேல் விழுகின்றது, பரிசுத்த ஆவி அந்த மனிதனின் மேலும் விழுகின்றது, அவர்களில் ஒருவர் பரிசுத்தவானாக இருக்கிறார், மற்றவரோ ஒரு மாய்மாலக்காரனாக இருக்கிறார். அது எனக்குத் தெரியுமே'' என்று கூறினேன். அதை நான் அறிவேன், அதினால்... நான் அந்த மனிதனை வெளியே கொண்டு சென்று அதை அவருக்கு என்னால் நிரூபித்திருக்க முடியும், அல்லது அவரை வெளியே அழைத்து அதைக்குறித்து அவருக்கு கூறியிருக்க முடியும். 33கடந்த இரவு இங்கே உட்கார்ந்திருந்த இந்த மனிதனை என்னால் சுட்டிக்காண்பித்திருக்க முடியும், அவன் ஒரு பொய்யான மனிதனேயன்றி வேறொன்றுமல்ல. நான் அதை அழைத்திருக்க வேண்டும், ஆனால் அவன் எழுந்து வாதம் செய்து குழப்ப ஆரம்பித்திருப்பான். நான் கூட்டத்தை கருத்தில் கொண்டு அதை விட்டுவிட்டேன், ஆனால் நான் அவனை அறிந்திருந்தேன். ஆம், ஐயா. கடந்த இரவு, அங்கே ஒன்று, அவர்கள் இரண்டுபேர் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இங்கே நகரத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உண்மையான குற்றம் கண்டுபிடிப்பவர்கள். நான் அவர்களைக் கண்டிருந்தேன். ஆனால் அப்படி சுட்டிக்காட்டினால், அது தொந்தரவை பிறப்பிக்கும். நான் அதை அநேகமுறை செய்திருக்கிறேன். அவர்களை நான் அப்படியே விட்டுவிடுவேன். அது பரவாயில்லை. தேவன் அதை அறிவார், அவர் நியாதிபதி. அவர்கள் என்னை ஒரு தடவை அழைக்கட்டும், அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிப்பதை நீங்கள் காண்பீர்கள், புரிகின்றதா, அவனை விட்டுவிடுங்கள். அந்த பிசாசைப்போல், அந்த பிசாசை நான் வெளியே அழைக்கவில்லை. அவன் என்னிடம் வந்து சவாலிட்டான். அப்பொழுது தேவன் கிரியை நடப்பிக்க ஆரம்பித்தார், பாருங்கள், அது சரி. ஆகவே என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் கண்டீர்கள். அது சரி. ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். அது கூட்டத்தை கடுமையாக்கினது, ஏனெனில் அந்த ஆவியானது நேரம் முழுவதும் சரியாக என் பட்சமாகவே அசைந்து கொண்டிருந்தது, பாருங்கள். ஆகவே நான் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தேன். 34ஆனால் இப்பொழுது, இந்த மனிதர், என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அது இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் கழித்து, இண்டியானாவிலுள்ள கிரீன் மில்லில் நான் இருந்தபோது, இங்கே, சாரணர் இடத்தில் எனக்குப் புரிந்தது. நான் வழக்கமாகச் சென்று ஜெபிக்கும் அந்த பழைய குகைக்கு நான் சென்றேன். அங்கே நான், ''கர்த்தாவே, அந்த மக்கள் கூட்டத்திற்கு என்ன ஆயிற்று என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே. என் வாழ்க்கையில் நான் கண்ட மக்களில் மிக அருமையான மக்களாயிற்றே, ஆகவே அது எப்படி தவறான ஆவியாக இருக்கும் என்று என்னால் - என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது.... அப்படியானால்... என் இருதயத்தின் உத்தமத்தை நீர் அறிவீர். உம்மை நான் எப்படி நேசிக்கிறேன் என்றும் எப்படியெல்லாம் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆகவே இங்கே இருக்கின்ற என்னோடிருக்கின்ற அந்த அதே ஆவி அந்த மக்களின் மீதும் இருந்ததே. இங்கே அந்த நபரின் மீது அது இருந்தது, அங்கே, அதே விதமாக இருந்ததே'' என்று கூறினேன். ஆகவே என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. 35அப்பொழுது கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் கீழே இறங்கி வந்து அதை எனக்குக் காண்பித்தார். அது இங்கேதான் இருந்தது. முதலாவதாக, அது வேதப்பூர்வமாக இருக்கவேண்டும். அவர், “உன் வேதாகமத்தை கையில் எடு'' என்றார். நான் என்னுடைய வேதாகமத்தை கையில் எடுத்தேன். யாருமே.... மேலும் வார்த்தை வரும்வரை நான் வேதாகமத்தை பத்து நிமிடங்களுக்கு கையில் பிடித்திருந்தேன், என்று யூகிக்கிறேன், நான் சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்தேன். ''எபிரெயர் அதிகாரத்திற்கு திருப்பி வாசிக்கத் துவங்கு” என்று அவர் மறுபடியுமாக கூறினதை நான் கேட்டேன். நான் அவ்விதமாகவே செய்தேன். அப்படி அது ''பூமியின் மேல் தண்ணீர் பாய்ச்சி அதை ஆயத்தப்படுத்தி, முளைப்பிக்கச் செய்ய... அடிக்கடி பெய்கிற மழை... ஆனால் முள் செடிகளையும், முள் பூண்டுகளையும், முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு“ என்று கூறின இடத்திற்கு வந்தது. அதை அங்கே நான் சரியாக பிடித்துக்கொண்டேன். நான், ''இதோ அது. தேவனுக்கு நன்றியுண்டாவதாக! இதோ அது இருக்கிறது“ என்றெண்ணினேன். கவனித்தீர்களா? 36இப்பொழுது இயேசு, ''விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைத்து கொண்டே புறப்பட்டான்'' என்று கூறினார், அப்படி அவர் கூறினாரல்லவா? இப்பொழுது, இங்கே நீங்களெல்லாரும் கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் பெந்தெகொஸ்தேயினர், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் என்று எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தினார்கள், எப்படியாயினும், சரி. அவர்கள். ஆகவே அவர் கூறினார், ''விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைத்துக் கொண்டே புறப்பட்டான். பிறகு அவன் உறங்கினபோது...'' என்று கூறினார். அவனுடைய ஓய்வு, இடையில் வருகின்ற மரணம். பாருங்கள்? ''அவன் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சத்துரு வந்து வயலில் களைகளை விதைத்தான். களைகள் என்றால் என்ன? புற்பூண்டுகள், முற்செடி வகைகள் மற்றும் காரியங்கள். இப்பொழுது, ''அந்த தோட்டக்காரன் (பிரசங்கி) இந்த களைகள் வளர்வதைக் கண்டபோது ''இதை நான் சென்று பிடுங்கி போடட்டும்'' என்றான். அவரோ, ''வேண்டாம், வேண்டாம். கோதுமையும் கூட சேர்த்து பிடுங்கி விடுவாய். அவை இரண்டையும் ஒன்றாக வளர விடு'' என்று கூறினார். 37இங்கே ஒரு கோதுமை வயல் இருக்கின்றது. அதில் படர் கொடிகள், காஞ்சொறிச் செடிகள், நாற்றமெடுக்கும் புற்பூண்டு, மற்றும் எல்லாமும் அதில் இருக்கும். அது சரியல்லவா? ஆனால், இப்பொழுது அதற்கு தண்ணீர் பாய்ச்ச, அதன் மேல் மழை அடிக்கடி பெய்கின்றது. இப்பொழுது, மழை எதற்காக வருகின்றது? காஞ்சொறி செடிக்கு தண்ணீர் பாய்ச்ச அல்ல. இப்பொழுது உற்று நோக்கி கவனத்தை செலுத்துங்கள். படர் கொடிக்கு தண்ணீர் பாய்ச்ச அல்ல. கோதுமைக்கு எவ்வாறு தாகமெடுக்கின்றதோ அதேவிதமாக காஞ்சொறிச் செடியும் தாகம் கொள்கின்றன. கோதுமையின் மேல் விழுகின்ற அதே மழை களையின் மேலும் விழுகின்றது. கோதுமை எவ்விதமாக எழுந்து நின்று அதுதாமே நிமிர்ந்து நின்று செய்கின்றதோ அதைப்போலவே அந்த சிறிய பழைய களையும் அதைப்போன்று நேராக நிமிர்ந்து நின்று, சந்தோஷப்பட்டு களி கூறுகின்றது. ''ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.'' உங்களுக்கு புரிகின்றதா. பாருங்கள்? இப்பொழுது, அந்த அதே பரிசுத்த ஆவி ஒரு மாய்மாலக்காரனை ஆசீர்வதிக்கக்கூடும். அது ஆர்மீனியர்களாகிய உங்களில் சிலரை குறைவுபடுத்தி வீழ்த்துகிறது, ஆனால் அதுதான் சத்தியம். அதுதான் சத்தியாமாயிருக்கிறது. பரிசுத்தத்தில் போதிக்கப்பட்டு, பரிசுத்தத்தில் கூட நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த அதே ஆவிதாமே நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகின்றது, ஆனால் அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிவீர்கள். 38நான் இங்கே பார்த்து கோதுமையை எடுக்கச் சென்றால், நான் கோதுமையை பிடுங்குவேன், ஆனால் களைகள் அதை சுற்றிலும் முளைத்திருக்கும். கோதுமைக்காக விழுந்த அதே மழையைக் கொண்டே அவைகளும் ஜீவிக்கின்றன. மழையானது களைகளுக்காக அனுப்பப்படவில்லை, அது கோதுமைக்காவே அனுப்பப்பட்டது. ஆனால் மழையானது நிலத்தில் இருந்தபடியால், அந்த கோதுமை இருந்தால்... கோதுமை நிலத்தில் களைகள் இருந்தபடியினால், மழையைக் கொண்டு மற்றவை பயனடைந்தது போலவே இவைகளும் பயனடைந்தன. கோதுமையை ஜீவிக்கச் செய்த அதே மழையானது, களையையும் ஜீவிக்கச் செய்கின்றது. நாம் போதிப்பதைப்போல், இயற்கையில் இருக்கின்ற எல்லாக் காரியங்களும் ஆவிக்குரியதிற்கு நிழலாய் அமைந்திருக்கிறது. இதோ அது, பிசாசியல், கிறிஸ்தவத்தை போலியாக்கிக் காண்பிக்கும் பிசாசுகள், மேலும், ஆசீர்வாதத்துடனே செய்கின்றது. சகோதரரே, நீங்கள் அதை புரிந்து கொள்வீர்களானால் அது ஆடை எடுக்கப்பட்ட பால் அல்ல, பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது, அது - அது சத்தியமாகும். 39ஆகவே, இன்று நான் சத்தமிடுவதால் நான் இரட்சிக்கப்படவில்லை. நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று உணர்வதனால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த வேதாகமத்தில் உள்ள தேவனுடைய நிபந்தனைகளை நான் நிறைவேற்றினதால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். இயேசு, ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'', என்று சொன்னார். நான் அதை விசுவாசிக்கிறேன். அது சரி. அந்த நிபந்தனைகளின் பேரில் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், ஏனெனில் தேவன் அவ்விதமாகவே கூறியுள்ளார். யாரோ ஒருவர் ஒரு ''பெருங்காற்று என் முகத்தில் வீசிற்று'' என்று கூறினதால் நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறியிருப்பாரானால், அது அற்புதமானதுதான். ஆனால் அந்த பலத்த பெருங்காற்று என் முகத்தை அடிக்கும் முன்னர் அது எங்கிருந்து வந்தது என்று அறிய விரும்புகிறேன், பாருங்கள். இப்பொழுது, அந்த பலத்த சுழல்காற்று உங்களை அடித்த பிறகு எந்தவிதமான ஒரு வாழ்க்கையை நீ வாழப்போகிறாய்? பாருங்கள்? பாருங்கள், உங்கள், பிசாசுகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிரியை செய்யும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பவுலை கவனியுங்கள், பவுல் கூறினான்.... 40இப்பொழுது இங்கே தான் பின்மாரி நாள் மழை ஸ்தாபனத்தவர்.... உங்களில் யாராவது இங்கே இருப்பீர்களானால், உங்களுக்கு எதிராக நான் ஏதாவது கூறுவேனானால் என்னை மன்னியுங்கள். அசெம்பிளீஸ் அல்லது எந்த ஒரு, பாப்டிஸ்டுகள் அல்லது யாராயிருந்தாலும் சரி அவர்களுக்கெதிராக கூறுவதற்கு மேலாக நான் உங்களுக்கு எதிராக பேசமாட்டேன். சத்தியமாக எது இருக்கின்றதோ அது சத்தியம் தான். நீங்கள் எந்த இடத்தில் அகன்று சென்றுவிட்டீர்கள் என்றால், இதுதான்: தீர்க்கதரிசிகள் அல்லாதிருக்கின்ற இந்த மனிதரிலிருந்து நீங்கள் தீர்க்கதரிசிகளையும் மற்ற காரியங்களையும் உண்டாக்குகிறீர்கள். தீர்க்கதரிசிகள் என்பவர்கள் கைகள் மேலே வைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறவர்கள் அல்ல. தீர்க்கதரிசிகள் பிறப்பிலேயே தீர்க்கதரிசிகளாகயிருக்கின்றனர். பாருங்கள்? வேதாகமத்தில் தீர்க்கதரிசன வரம் என்கின்ற ஒன்று இருக்கின்றது. தீர்க்கதரிசன வரத்திற்கும் தீர்க்கதரிசிக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம். அங்கே தான் நீங்கள் தவறு செய்கின்றீர்கள், அந்த வரம்... “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும், தீர்க்கதரிசனம் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்''. ஆகவே கிறிஸ்துவின் சரீரமானது ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் அதினுள் கிரியை செய்கின்ற ஒன்றாக இருக்கின்றது. தீர்க்கதரிசனம், இன்றிரவு இந்த பெண்ணின் மீது இருக்கக்கூடும், இவளுடைய வாழ்நாள் முழுவதிற்கும் அது இருக்காது. அடுத்த இரவு இந்த பெண்ணின் மீது இருக்கக்கூடும். அடுத்த தடவை இந்த மனிதனின் மீது இருக்கக்கூடும். அடுத்த தடவை அங்கே பின்னால் இருக்கின்ற அந்த நபரின் மீது இருக்கக்கூடும். அடுத்த தடவை அங்கே பின்னால் இருக்கின்ற அந்த நபரின் மீதும் இருக்கக்கூடும். அது அவளை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கிவிடாது, எந்த ஒருவரையும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி செய்யாது. அது உனக்குள் இருக்கும் தீர்க்கதரிசன வரமாகும். 41அந்த மனிதன் அல்லது அந்த தீர்க்கதரிசனம் சபைக்கு அளிக்கப்படும் முன்னர், அது இரண்டு அல்லது மூன்று ஆவிக்குரிய நியாயாதிபதிகளால் சோதித்தறியப்பட வேண்டும். அது சரியா? அதன்படியே, இப்பொழுது, பவுல் “நீங்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்'' என்றான். ஏதாவதொன்று இந்த நபருக்கு வெளிப்பட்டிருக்குமானால், அந்த நபர் பேசாமலிருக்கக்கடவன். நல்லது, அப்படியானால், அது இன்றைய போதனையின்படி அது ஒரு முழு தீர்க்கதரிசன குழுவையே பிறப்பித்திருக்கும். இல்லை, பெந்தெகொஸ்தே சபையே, நாம் எல்லா காரியங்களையும் குழப்பினவர்களாக காணப்படுகிறோம். அதன் காரணத்தால்தான் தேவனால் உள்ளே வரமுடியவில்லை, வேதத்தின் பேரில் காரியத்தை சரிபடுத்தினாலொழிய அவரால் உள்ளே வரமுடியவில்லை. அது சரி. நீங்கள் சரியான பாதையை சென்றடைய வேண்டும். கட்டிட வரைபடத்தை பார்க்காமல் எப்படி ஒரு வீட்டை நீ கட்டப் போகின்றாய்? புரிகின்றதா? நீங்கள் சரியாக ஆரம்பிக்க வேண்டும். 42இப்பொழுது, இதிலே, ஒரு தீர்க்கதரிசி, யாரேனும் ஏசாயா, மோசேயின் முன்பாக எதிர்த்து நின்றதாக நீங்கள் கண்டதில்லை. ஒருவன் எதிர்த்து நின்றான், கோராகு, ஒரு நாளிலே, அவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு தர்க்கிக்க முயற்சித்தான். தேவன், ''தனியே பிரிந்து போ, நான் பூமியைத் திறக்கப் போகிறேன்'' என்றார். ஒரு தீர்க்கதரிசி பிறப்பிலேயே தீர்க்கதரிசியாக இருக்கிறான். ''வரங்களும் அழைப்புகளும்... மனந்திரும்புதல் இல்லாமலேயே''. அது குழந்தை பருவத்திலிருந்து, அது தேவனுடைய முன்குறித்தலாகும். ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக சரியாக இருந்தது, சரியாக அவன் கூறினது உண்மையாக இருந்து உறுதிபடுத்தப்பட்டு வெளி கொண்டு வரப்பட்டது. தீர்க்கதரிசியிடம் வருகின்ற தேவனுடைய வார்த்தை அது. ஆனால் தீர்க்கதரிசன வரம் சபையில் இருக்கின்றது. 43இப்பொழுது நீங்கள், ''நல்லது, தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டு காலத்தவர்'' எனலாம். ஓ, அல்ல புதிய ஏற்பாடும் - தீர்க்கதரிசிகளைக் கொண்டிருந்தது. அகபு புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாக இருந்தான். அங்கே விழுந்த தீர்க்கதரிசன ஆவியையும் அதைக்குறித்து பவுலுக்கு கூறினதையும் பாருங்கள். இங்கே அகபு எருசலேமிலிருந்து வந்து, பவுலைக் கண்டு, பவுலின் கச்சையை அவனைச் சுற்றிலும் கட்டிக்கொண்டு, திரும்பி, “கர்த்தர் உரைக்கிறதாவது, இதை கட்டிக் கொண்டிருக்கின்ற மனிதன் எருசலேமிற்கு செல்லும் போது சங்கிலியினால் கட்டப்படுவான்'' என்று கூறினான். எழுந்து கூறின அகபு, என்ன நடக்குமென்று முன்னுரைத்தான், அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான், தீர்க்கதரிசன வரத்தையுடைய ஒரு மனிதனாக அல்ல. ஆகவே என் பெந்தெகொஸ்தே நண்பனே, அந்த சுகமளிக்கும் வரம் மற்ற எல்லா வரங்களும், எல்லா வரங்களையும் குறித்து, நீ குழம்பிப் போயிருக்கின்றாய். அந்த வரங்கள் சபையில் இருக்கின்றன, சபையிலுள்ள எந்த ஒரு நபருக்கும் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கின்ற எந்த ஒருவருக்கும் அது கீழ்ப்பட்டிருக்கும், “ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்'' ஆகவே வேதாகமம் கூறுகின்றது.... ''நல்லது, சுகமளிக்கும் வரத்தை நான் கொண்டிருக்கிறேன்.'' நல்லது, வேதாகமம், “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்'' என்று கூறுகிறது. ஒவ்வொரு நபரும் மற்றவருக்காக ஜெபம் பண்ணவேண்டும். நாம் பிரிவுகளாக உள்ள ஒரு குழு அல்ல; நாம் ஒரு முழு மொத்தமான, ஒன்று சேர்க்கப்பட்ட குழுவாகும். பாருங்கள்? இப்பொழுது, இவ்விதமாகத்தான் சில சமயங்களில் பிசாசுகள் கிரியை செய்கின்றன. 44இப்பொழுது பவுல் என்ன கூறினான் என்பதை கவனியுங்கள், ''ஒருவன் அந்நிய பாஷையில் பேசினால், அவன் என்ன கூறினானோ அதை மற்றவன் வியாக்கியானம் செய்து, சபையானது அதை ஏற்றுக்கொள்ளும் முன்பு, அது சரிபார்க்கப்பட வேண்டும்.'' இப்பொழுது, அது வேதவாக்கியங்களையோ அல்லது வேறொன்றைப் போன்ற ஒன்றையோ மேற்கோள் காட்டுவதில்லை தேவன் தம்மை தாமே.... ஆனால் அது சபைக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். அங்கே நல்ல தீர்ப்பு கூறுபவர்கள் இருந்தால், ''நாம் அதைப் ஏற்றுக் கொள்வோம். அது சரி, அது தேவனால் உண்டானது,'' என்று கூறட்டும். அப்படியே இரண்டாவது நபரும், நாம் அதை ஏற்றுக்கொள்வோம்,'' என்று சொல்லட்டும். ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேரின் சாட்சிகளினால் ஒவ்வொரு வார்த்தையும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்பொழுது சபை ஏற்றுக்கொண்டு, அதற்காக அது ஆயத்தப்படும். கூறப்பட்ட அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லையெனில், அங்கே உங்கள் மத்தியில் தீய ஆவி இருக்கின்றது. அது சரி. அது நிறுவேறினால். அங்கே உங்கள் மத்தியில் தேவனுடைய ஆவி இருப்பதற்காக நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் இங்குதான் கவனமாகவும், ஜக்கிரதையாகவும் இருக்கவேண்டும். ஆகவே நீங்கள் உந்தித்தள்ள முயற்சிக்க வேண்டாம். நான் ஊதா நிறக்கண்களையுடையனாயிருக்கும் பொழுது நான் எனக்கென்று பழுப்பு நிறக்கண்களாக்கிக் கொள்ள முடியாது. பாருங்கள், நான் ஊதா நிறக்கண்களுடனே திருப்தியடைந்து விட வேண்டும். இப்பொழுது, ஆவிக்குரிய மக்களின் அந்த பரிமாணத்தில் தான் பிசாசுகள் கிரியை செய்கின்றன. 45இப்பொழுது நாம் ஆழமான ஒன்றை இங்கே கொண்டிருக்கிறோம், அது மிக ஆழமானதல்ல என்று நான் நம்புகிறேன். இப்பொழுது ஒன்று சாமுவேல் 28ல், சரியாக இந்த சமயத்தில் சில வேத வசனங்ளை நான் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் ''பிசாசுகள்'' என்பதைக் கொண்டு வந்து அவைகள் சபைக்குள்ளாக எப்படி கிரியை செய்கின்றன என்றும், இருக்கின்ற ஒவ்வொரு உண்மையான ஒன்றிற்கும் போலியான மாறுத்தரத்தை சாத்தான் எவ்விதமாக கொண்டிருக்கிறான் என்பதையும் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது, வேதாகமத்தின்படி, கிறிஸ்தவர்கள் மத்தியில் பிசாசுகள் வந்து, போலியாக நடப்பிப்பதை நீங்கள் காணமுடியும். ''நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்'' என்று அவர்கள் கூறுகையில் அந்த மக்களை கிறிஸ்தவர்களென்று அநேக தடவைகள் நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். ஏன், பிசாசுகளும் கூட அதே காரியத்தை விசுவாசித்து நடுங்குகின்றன. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கு அது அடையாளம் அல்ல. இந்த இரவு கூட்டங்களில் ஒன்றில் தெரிந்து கொள்ளுதலைக் குறித்துப் பேச விரும்புகிறேன், அப்பொழுது இரட்சிப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் - காண்பீர்கள். பாருங்கள்? முதலாவதாக அல்லது கடைசியாக அதனுடன் உங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது அல்லது அதைக்குறித்து உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு மனிதனை தேவன் நிபந்தனையின்றி இரட்சிக்கிறார். பையனே அது ஆழமான ஒன்றாயிருக்கிறது, அப்படித்தானே? இப்பொழுது, இதை குறித்து நாம் தியானிக்கும் பொழுது அந்த எண்ணமானது நம் அமைப்பிலிருந்து சென்று விடுகிறது. சரி. 46ஆபிரகாம் நம்முடைய விசுவாசத்தின் துவக்கமாக இருந்தான். அது சரியா? ஓ, ஆபிரகாம் வாக்குத்தத்தத்தை உடையவனாக இருந்தான். தேவன் ஆபிரகாமை ஏன் அழைத்தார் என்றால் அவன் ஒரு பெரிய மனிதனாக இருந்திருப்பானோ? நான் யூகிக்கின்றேன், இல்லை, ஐயா. அவன் கல்தேயர் தேசத்தில், ஊர் என்னும் பட்டணத்திலிருந்து, பாபிலோனிலிருந்து வெளியே வந்தவனாயிருந்தான், ஆகவே தேவன் அவனை அழைத்தார், அவர் தம்முடைய உடன்படிக்கையை நிபந்தனையின்றி அவனுடன் செய்தார். ''நான் உன்னை இரட்சிக்கப் போகிறேன். ஆபிரகாம், உன்னை மாத்திரம் அல்ல, அங்கே உன்னுடைய வித்தையும் கூட,'' என்றார், எந்தவித நிபந்தனையுமில்லை. தேவன் மனிதனுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்தார், மனிதனோ தன்னுடைய உடன்படிக்கையை ஒவ்வொரு தடவையும் உடைத்துப் போடுகிறான். தேவனோடு செய்யப்பட்டிருந்த தன்னுடைய உடன்படிக்கையை மனிதன் காத்துக் கொண்டதே கிடையாது. பிரமாணமானது காத்துக் கொள்ளப்படவேயில்லை. அவர்களால் பிரமாணத்தைக் காத்துக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்து வந்து தாமே அந்த பிரமாணத்தை உடைத்தார். ஏனெனில் கிருபையானது ஏற்கெனவே ஒரு இரட்சகரை அளித்திருந்தது. மோசே தப்பிப்பதற்கான ஒரு வழியை அளித்தான், ஆகவே அந்த தப்பித்தல் - அப்பொழுது அந்த மக்கள், அதன் பிறகு, இன்னுமாக ஏதோ ஒன்றை அவர்கள் செய்ய விரும்பினர். மனிதன் ஒன்றை எப்பொழுதுமே தன்னைத்தானே காத்துக் கொள்ள ஏதோ ஒன்றை செய்ய முடியாதிருக்கையில் செய்ய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான், அது அவனுடைய சுபாவமாக இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில், அவன் நிர்வாணமாக இருக்கிறான் என்பதை அவன் கண்டு கொண்ட மாத்திரத்தில், அவன் சில அத்தி இலைக் கச்சைகளை உருவாக்கிக் கொண்டான். அது சரிதானே? ஆனால் இவை கிரியை செய்யாது என்று அவன் கண்டு கொண்டான். ஒரு மனிதன் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள அவனால் ஒன்றுமே செய்து கொள்ள முடியாது. தேவன் காலாகாலங்களாக, நிபந்தனையின்றியே மனிதனை இரட்சிக்கிறார். ஆகவே பிறகு நீ இரட்சிக்கபடுகையில், நீ காக்கப்படுகிறாய். 47ஆபிராகாமை கவனியுங்கள். அதோ அந்த ஆள், அவன் கடந்து சென்றான், ஆகவே தேவன் பாலஸ்தீன தேசத்தை அவனுக்களித்து அந்த இடத்தை விட்டு செல்லக் கூடாதென்று அவனிடம் கூறினார். பாலஸ்தீனாவை விட்டுச் செல்கின்ற எந்த ஒரு யூதனும் பின் மாற்றத்தில் இருக்கின்றான். அவன் அங்கேயே இருக்க வேண்டுமென்று தேவன் அவனிடம் கூறினார். வேறெதோ ஒன்றை செய்ய வேண்டுமென்று தேவன் உன்னிடம் கூறியிருந்து நீ அதைச் செய்யாமலிருப்பாயானால், அப்படியானால் நீ பின் மாற்றத்தில் இருக்கின்றாய். அது சரிதானே? சரி, ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்க ஒரு பஞ்சம் வந்தது. ஆபிரகாம் அங்கே தங்கிருப்பதற்கு பதிலாக, இல்லை, அவனால் அங்கே தங்கியிருக்க முடியவில்லை, அவன் ஓடினான், சாராளை அழைத்துக் கொண்டு சுமார் முன்னூறு மைல்கள் கடந்து வேறொரு தேசத்திற்கு சென்றான். (இதைக் குறித்து பேச எனக்கு சமயம் இருந்தால் நலமாக இருக்கும்). ஆகவே அவன் அங்கே சென்றான், அப்பொழுது அவன் அங்கே இருந்த இந்த மகத்தான ராஜாவாகிய அபிமெலேக்கைச் சந்தித்தான். அவன் ஒரு வாலிப ஆளாக பையனாக இருந்து இருதயத்திற்கு இனிமையான ஒருவளைத் தேடிக்கொண்டிருந்தான், ஆகவே அவன் ஆபிரகாமின் மனைவியாகிய சாராளைக் கண்டு அவளைக் காதலித்தான். அப்பொழுது ஆபிரகாம் இப்பொழுது, ''நீ என்னுடைய சகோதரியென்றும் நான் உன்னுடைய சகோதரன் என்றும் அவனிடம் கூறு'' என்றான். அது அபிமெலேக்கிற்கு திருப்தியை உண்டாக்கினது, ஆகவே அவன், ''சரி, நாம் அவளை மாளிகைக்குக் கொண்டு செல்லலாம்'' என்றான். அங்கிருந்த பெண்கள் அவளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன், ஏனெனில் அவன் அவளை மறுநாளில் விவாகம் செய்யவிருந்தான். 48அபிமெலேக்கு ஒரு நல்ல மனிதனாக, நீதிமானாக இருந்தான். அந்த இரவில் அவன் உறங்கிக் கொண்டிருக்கையில் கர்த்தர் அவனுக்கு தோன்றி ''நீ செத்துப்போன ஒரு மனிதனுக்கு சமம்'' என்றார். அவர், ''அந்த மனிதன்... விவாகம் செய்து கொள்வதற்காக அங்கே நீ வைத்திருக்கும் ஸ்திரீயானவள், வேறொரு மனிதனின் மனைவி ஆவாள்'' என்றார். இப்பொழுது கவனியுங்கள். “வேறொரு மனிதனுடைய மனைவி.'' என்ன, அவன், “கர்த்தாவே, என் உத்தம இருதயத்தை நீர் அறிவீர், ஒரு நீதிமான், பரிசுத்த மனிதனாக உள்ளேன். என் இருதயத்தின் உத்தமத்தை நீர் அறிவீர். அந்த மனிதன் அவளை தன் 'சகோதரி' என்று என்னிடமாக சொன்னானே. அவளும் அவன் என் 'சகோதரன்' என்று தானாகவே கூறியிருக்கிறாளே?,'' என்றார். அவன் கூறினான், தேவன் “நான் உன்னுடைய இருதயத்தின் உத்தமத்தை அறிந்திருக்கிறேன், அதன் காரணமாகத்தான் நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன். ஆனால் அவன் என்னுடைய தீர்க்கதரிசியாயிற்றே!'' என்று கூறினார். அல்லேலூயா அவன் எந்நிலையில் இருந்தான்? பின் மாற்றத்தில், ஒரு சிறிய, பொய் சொல்கின்ற நேர்மையற்றவன். அது சரியா? ஓ, இல்லை. ஒரு சிறிய நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பொய் என்று கூட கிடையாது. அவை ஒன்று கறுப்பு பொய்கள் அல்லது அவைகள் பொய்களாகவே இருக்காது. அந்த மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டு அவள் அவனுடைய மனைவியாயிருக்க, அவளை சகோதரி என்று ஒரு அப்பட்டப் பொய்யை கூறுகிறான். இங்கே ஒரு நீதிமான் தேவன் முன்பாக நின்றுக் கொண்டிருந்தான். அவன், ''ஆண்டவரே, நீர் என் இருதயத்தை அறிவீர்,'' என்றான். ''அபிமலெக்கே, நான் உன் ஜெபத்துக்குச் செவிகொடுக்க மாட்டேன். ஆனால் அவனை.... அவன் அவனை அழைத்துக் செல்லட்டும், அவன் உனக்காக ஜெபிக்கட்டும். அவன் என் தீர்க்கதரிசி; நான் அவனுக்குச் செவிகொடுப்பேன்.'' ஆம், அவன் பின்மாற்றமடைந்த, பொய் சொன்னவன், ஆனால், ''அவன் என்னுடைய தீர்க்கதரிசி.'' அது சத்தியமல்லவா? அது வேதாகமம். 49இப்பொழுது, கால்வீனிஸ்ட் கொள்கையான ''ஒருமுறை கிருபைக்குள் செல்வோமானால், எப்பொழுதுமே கிருபைக்குள் இருப்போம்'' என்பதின் பேரில் மிகவுமாக சென்று விடாதீர்கள், ஏனெனில் நீங்கள் தயவிழப்பில் (disgrace) சென்று விடுவீர்கள். பாருங்கள்? இப்பொழுது சற்று, நாம் அதைக்கொண்டு வந்து, எவ்வளவு சமமாக அது இருக்கின்றது என்று உங்களுக்கு காண்பிக்க நாம் இந்த வாரத்தில் நேரம் எடுத்துப்பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு தவறை செய்துவிட்டதால் என்றென்றுமாக இழக்கப்பட்டுப்போய் விடுவீர்கள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள், தேவனுடைய ஆவியினால் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள், நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள், அதைக் குறித்து கனிகளே சாட்சி பகரும். உங்களுக்கு புரிகின்றதா. 50இப்பொழுது, இங்கே நாம், இந்த தேசத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது, இங்கே நான் வாசிக்க விரும்புகிறேன், 6வது வசனம். சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது கர்த்தர் அவனுக்கு சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. ஆகவே அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயை தேடுங்கள்: நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான். இங்கே இருக்கின்ற பொருளின் பேரில் இதை என்னால் சரியாக வைக்கமுடியும் ''அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயை எனக்காகத் தேடுங்கள்.'' ....அவன் அவனுடைய ஊழியக்காரன் இதோ எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வஸ்திரம் வேறு வஸ்திரம் தரித்துக் கொண்டு அவனும், இரண்டு.... கூட இரண்டு பேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய் சேர்ந்தார்கள்: அவளை அவர்கள் நோக்கி, நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பி வரச் செய் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே, அறிந்திருக்கின்றீர் ஆதலால்..... என்னைக் கொன்று போடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன?என்றாள். அப்பொழுது சவுல் இந்த காரியத்திற்காக உனக்கு பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று பதிலுரைத்து அவளுக்குக் கர்த்தர் மேல் ஆணை விட்டான். அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பி வரப்பண்ண வேண்டும் என்றதற்கு அவன்: சாமுவேலை எழும்பி வரப்பண்ண வேண்டும் என்றான். அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்ட மாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சவுலை நோக்கி ஏன் என்னை மோசம் போக்கினீர்? நீர் தான் சவுலாச்சுதே என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே. நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ நான்..... தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்னவாயிருந்தது என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள் சால்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள். அதினாலே சாமு.... (அது தான் தீர்க்கதரிசியின் சால்வை ஆகும். புரிகின்றதா?) சவுல் அவன் சாமுவேல் என்ற அறிந்து கொண்டு அவன் நின்று.... தரை மட்டும் முகங்குனிந்து வணங்கினான். சாமுவேல் சவுலை நோக்கி, நீ என்னை எழும்பி வரப்பண்ணி, என்னை கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்கு சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன் ஏனெனில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார்கள். தேவனும் என்னை கடந்து சென்றுவிட்டார். அவர் தீர்க்கதரிசியினாலாவது சொப்பனத்தினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; நான் என்ன செய்ய வேண்டுமென்பதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு உம்மை அழைப்பித்தேன் என்று பதிலளித்து கூறினான். அப்பொழுது அதற்கு சாமுவேல்: கர்த்தர் உன்னை விட்டு விலகி உனக்கு சத்துருவாய் இருக்கும் போது நீ என்னிடத்தில் கேட்பானேன்? கர்த்தர் என்னைக் கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து அதை உன் தோழனாகிய தாவீதுக்கு கொடுத்து விட்டார். 51இப்பொழுது, உங்களில் அநேகர் இதை நன்கு அறிந்தவர்களாயிருக்கிறீர்கள். இப்பொழுது நாம் நேராக இதனுள் செல்வோம், சற்று நேரம் நாம் இதற்குள் சென்று பார்க்கத்தக்கதாக இப்பொழுது தேவனே எங்களுக்கு உதவும். இப்பொழுது கவனியுங்கள். சவுல் என்கிற ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு சமயத்தில் தீர்க்கதரிசியாக கருதப்பட்டான், ஏனெனில் அவன் தீர்க்கதரிசிகளோடு தீர்க்கதரிசனம் உரைத்தான். அது சரிதானே, போதகர்களே?இப்பொழுது, இங்கே பின் மாற்றத்திலிருக்கிற நாளில் அவன் எங்கே இருப்பான் என்று சாமுவேல் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அவன் உரிய காலத்திற்கு முன்னதாகவே சென்றுவிட்டான், பாருங்கள். சரி, நீ தேவனைக் குறித்து விழிப்பாயிராவிட்டால், தேவன் உன்னை பூமியிலிருந்து எடுத்து விடுவார். 52அங்கே கொரிந்தியர் நிருபத்தில் பார்ப்பீர்களானால், அந்த மக்களை பவுல் எவ்விதமாக ஒழுங்கிற்குள் அமைக்கின்றான் என்று காண்பீர்கள். அவன் “நீங்கள் ஆவிக்குரிய வரங்களில் குறைவில்லாதவர்களாய், அவ்விதமான காரியங்கள் உங்கள் நடுவில் இராதபடியால், முதலாவதாக நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,'' என்றான். அவர்கள் தங்கள் ஸ்தானத்தில் கிறிஸ்துவுக்குள்ளாக அவர்கள் எவ்விதமாக இருந்தார்கள் என்று அவர்களுக்கு கூறுகிறான். பிறகு அவர்கள் மீது தாக்குதலைத் துவங்க ஆரம்பிக்கின்றான், அவர்களுடைய பெண் பிரசங்கிகளைக் குறித்தும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்றும், கர்த்தருடைய மேசையில் அவர்கள் எவ்வாறு புசித்துக் கொண்டிருந்தனர் என்பதைக் குறித்தும் அவர்களுக்கு கூறினான். மேலும் ஒரு மனிதன் தன்னுடைய மாற்றாந்தாயுடனேயே ஜீவிக்கிறான், எனவே அவர் இந்த கிறிஸ்துவுக்குள்ளான மனிதனிடத்தில், ''அவனுடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்படிக்கு, அவன் சரீரம் அழிந்துப்போகதக்கதாக, அவனை பிசாசினிடத்தில் ஒப்புக் கொடுத்து விடுங்கள்'', என்றார். பாருங்கள், அதுதான் காரியம், அவனை (பிசாசினிடத்தில்) ஒப்புக்கொடுப்பது. வேதாகமும், ''இதினிமித்தம் உங்களில் அநேகர் பாவத்தினிமித்தம் (தங்களுக்கு நியமிக்கப்பட்ட காலத்திற்கு முன்னமே) அடைந்திருக்கிறார்கள். தேவன் உங்களை வழியிலிருந்து எடுத்து விடுகிறார்; எனவே அவ்விதமாய் நீங்கள் எடுக்கப்படும்போது அதுதாமே நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்பதற்கு நல்ல அடையாளமாயிருக்கிறது. 53ஆதலால், இப்பொழுது இங்கே கவனியுங்கள், சவுல் தீர்க்கதரிசிகளில் ஒருவனாக, அல்லது தீர்க்கதரிசிகளின் மத்தியில் இருந்த ஒருவனாகக் கருதப்பட்டான். ஏனெனில் அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். ஆகவே இப்பொழுது அவன் பின்மாற்றத்தில் சென்றுவிட்டான், ஏனெனில் அவன் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை, மேலும் அவனுடைய ராஜ்ஜியமானது அவனுடைய கையிலிருந்து பிடுங்கப்பட்டு, சாமுவேலின் மூலம் ஒரு கலசம் எண்ணையைக் கொண்டு தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதின் கைக்குள் வைக்கப்பட்டது. 54கவனியுங்கள், அப்பொழுது, தேவனிடமிருந்து காரியங்களை அறிந்து கொள்வதற்காக மூன்று வழிகளை அவர்கள் கொண்டிருந்தனர்; முதலாவது தீர்க்கதரிசி ஆவான், இரண்டாவது ஒரு சொப்பனம் ஆகும், பிறகு மூன்றாவதாக ஊரீம் தும்மீம் என்பவைகளேயாகும். அவை பதிலளிக்காமல் இருக்காது. இப்பொழுது ஒரு தீர்க்கதரிசி எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும், ஒரு ஆவிக்குரிய சொப்பனம் என்னவென்றும் நீங்கள் அறிவீர்கள், உங்களுக்குத் தெரியும், அன்றொரு நாள் நான் ஒரு - ஒரு மனிதனிடம் ஊரீமைக் குறித்துக் கேட்டேன், அது என்னவென்று அந்த மனிதனால் என்னிடம் கூறமுடியவில்லை, அந்த ஊரீம் தும்மீம் - தேவன் இவைகள் மூலமாக பதிலளிக்கின்றார். பாருங்கள்? அவைகள் ஒவ்வொன்றிக்கும் பிசாசு போலியான ஒன்றை வைத்திருக்கிறான்; மந்திரவாதி, கள்ளத்தீர்க்கதரிசி, பளிங்குகல் உருண்டை (Crystal Gazer) அந்த தெள்ளத் தெளிவாக இருப்பது. பாருங்கள்? இப்பொழுது, அந்த ஊரீம் தும்மீம் ஆரோனுடைய மார்பின் மீது தொங்கிக் கொண்டிருந்தது, இங்கே, அந்த ஊரீம் தும்மீம் அந்த கற்களால் மூடப்பட்டிருந்தது. அவர்கள் அதை ஆலயத்தில் தொங்கவிட்டிருந்தனர். அவர்கள் நிச்சயமில்லாதிருக்கும் பட்சத்தில், பதிலுக்காக அவர்கள் தேவனுக்கு முன்பாக செல்வார்கள், அது. தேவனுடைய சித்தமா இல்லையாவென்று அந்த ஊரீம் தும்மீமின் மீது ஒரு ஒளி பிரகாசிக்கும், இப்பொழுது, அது தான் தேவனிடமிருந்து நேரடியான ஒரு பதிலாகும். இப்பொழுது இன்றைய ஊரீம் தும்மீம்கள்; அந்த குறிசொல்பவன், அதற்கொப்ப அந்த பளிங்குக்கல் உருண்டையை எடுக்கிறான்; பொய்யான காரியம். தேவன் திரித்துவத்தில் இருக்கின்றார்; தேவனுடைய வல்லமைகள் திரித்துவத்தில் இருக்கின்றது. பிசாசும் திரித்துவத்தில் இருக்கின்றான், அவனுடைய வல்லமைகளும் திரித்துவத்தில் இருக்கின்றது. வேதாகமத்தின் மூலமாக என்னால் அதை நிரூபிக்க முடியும். அந்த ஊரீம் தும்மீம் தான் பிசாசு இன்றைக்கு உபயோகப்படுத்தும் பளிங்குக்கல் உருண்டையாகும். இன்றைக்கு இங்கே பின்னால் இருக்கும் கள்ளத்தீர்க்கதரிசி, இப்பொழுது நாம் கொண்டிருக்கும் அந்த ஒருவன், அந்த... அல்லது, அந்த சூனியக்காரி, அல்லது அங்கே இருக்கின்ற அந்த குறிசொல்பவன், தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான், பிசாசின் பக்கமாக. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகின்றதா? 55இப்பொழுது, பிறகு, இன்றைய வேதாகமம் தான் ஊரீம் தும்மீம் ஆகும். யாராவது ஒருவர் ஒரு தீர்க்கதரிசனத்தையோ அல்லது ஒரு சொப்பனத்தையோ அளிப்பாரானால், அது தேவனுடைய வேதாகமத்தோடு ஒத்துப்போகவோ அல்லது எதிரொலிக்கவோயில்லையென்றால், அது பொய்யான ஒன்றாகும். அதை விசுவாசிக்காதீர்கள். நான் போக உத்தேசித்திருக்கும் இந்தியாவிலிருந்து சில காலத்திற்கு முன்னர் ஒரு மனிதன் என்னிடம் வந்தார், ஒரு அருமையான சிறிய பிரசங்கி. அவர், ''சகோதரன் பிரன்ஹாம், நான் இங்கே வந்தேன். ஒரு ஸ்திரீ பரிசுத்த ஆவியை கொண்டிருந்தாள்'', ''அவள் ஒரு இனிமையான, அருமையான ஸ்திரீயாக இருந்தாள்'', மேலும் அவளுக்கு நான்கு தடவை விவாகமாகியிருந்தது, அவள் தன்னுடைய நான்காவது கணவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்பொழுது நான், ''கர்த்தாவே, இது எப்படி ஆகும்? என்றேன்'' என்று கூறினார். மேலும் அவர் நான் அவரிடம் சென்று ''ஓ தேவனுக்கு மகிமை!'' என்றேன். ''அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! என்றேன்'' என்றார். மேலும் அவர், ''கர்த்தர் என்னிடம் ''இதோ, நான் உனக்கு ஒரு சொப்பனத்தை தரப்போகிறேன்'' என்று கூறினார், அவள் என்னுடைய மனைவியாகயிருப்பதை சொப்பனத்தில் கண்டேன், அவள் விபசாரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் என்னிடம் திருப்பி வந்து ''ஓ, விக்டர் என்னை மன்னித்து விடுவீர்களா? என்னை மன்னிப்பீர்களா? நான்...'' என்றாள். அதற்கு ''நான் நிச்சயமாக, நான் உன்னை மன்னித்து உன்னை என்னிடம் சேர்த்துக்கொள்வேன் என்றேன்'' என்று கூறினார். மேலும் அவர், “இப்பொழுது அதைத்தான் நான் செய்திருக்கிறேன். பாருங்கள், நான் மன்னித்துவிட்டேன்'' என்றார். நான் கூறினேன், ''விக்டர், உங்கள் சொப்பனம் மிக அருமையான ஒன்றாக இருந்தது, ஆனால் பிசாசு அதை உங்களுக்கு கொடுத்துள்ளான்“. அவர் ''என்ன?'' என்றார். நான், ''தேவனுடைய வார்த்தையோடு அது ஒத்துப் போகவில்லையே. அவள் விபச்சாரத்தில் இருக்கின்றாள். நான்கு மனிதரோடு அவளால் வாழ முடியாது. சரி. அவள் அதை விட்டுவிட்டு தன்னுடைய முதலாவது நபரிடம் சென்றாள், அவள் துவக்கத்தில் இருந்ததை விட மிகச் சீர்கெட்ட நிலைமையில் இருக்கின்றாள். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தனியாகத்தான் அவள் ஜீவிக்க வேண்டும்'' என்று கூறினேன். மேலும் நான், ''அது தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா. ஆதலால் அவள்... உங்கள் சொப்பனம் பொய்யான ஒன்றாகும். இது இந்த ஒன்றுடன் பொருந்தவில்லை'' என்றேன். 56ஆகவே ஒரு தீர்க்கதரிசி ஒரு தீர்க்கதரிசனத்தை அளித்தவுடன், அவர்கள் உரைத்தவுடன், அந்த தீர்க்கதரிசனம் உண்மையானதா என்று அவர்கள் பார்க்க விரும்புவார்களானால், அவர்கள் அதை ஊரீம் தும்மீம் முன்பாக வைப்பார்கள். தேவனுடைய சத்தமானது ஊரீம் தும்மீமின் மீது ஒளிகளை பிரகாசிக்கச் செய்யுமானால், அப்படியானால் அது முற்றிலுமானதாகும், சத்தியமாகும். ஆகவே ஒரு மனிதன் ஒரு வியாக்கியானத்தையோ, ஒரு சொப்பனத்தையோ, வேதத்தைக் குறித்த ஏதாவதொன்றை அளித்தாலோ, அல்லது வேறெதாவதொன்றையோ அளிக்கும் போது, அது தேவனுடைய வேதாகமத்தோடு ஒத்துப்போகாவிட்டால், அது பொய்யான ஒன்றாகும். இன்றைய ஊரீம் தும்மீம் ஒன்று இருக்கின்றது. தேவனுடைய வார்த்தை பேசுகின்றது, அதுதான் தேவனுடைய நேரடியான சத்தமாகும், வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்னர் இருந்த ஊரீம் தும்மீமைப் போன்று. ஆமென் அல்லேலூயா சரியாக இப்பொழுதே நான் பக்தி வசப்படுகிறதை உணர்கிறேன். நீங்கள் என்னை ஒரு அதிதீவிர மதவெறி கொண்டிருப்பவன் என்று நினைப்பீர்களானால் அவ்விதமாகச் செய்ய வேண்டாம். எனக்குத் தெரியும், நான் எங்கேயிருக்கிறேனென்று நான் அறிவேன். நான் உணர்ச்சிவசமடைந்த நிலையில் இல்லை. அது சரி. 57இதோ அந்த சத்தியம், தேவனுடைய வார்த்தை நீங்கள் எந்த ஒரு விதமான சொப்பனத்தைக் கொண்டிருந்தாலோ அல்லது எந்த விதமானதொரு தீர்க்கதரிசனத்தை நீங்கள் அளித்திருந்தாலோ அது தேவனுடைய வார்த்தையாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அது எனக்கு ஒரு பொருட்டல்ல. அந்த வார்த்தையுடன் அது ஒத்துப் போகாவிட்டால் அது தவறான ஒன்றாகும். இன்றைய தொந்தரவு அதுதான். ஒருவர் சொப்பனத்தைக் காண்கிறார், ஒருவர் தரிசனத்தைக் கொண்டிருக்கிறார், ஒருவர் அந்நிய பாஷையைக் கொண்டிருக்கிறார், ஒருவர் ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறார்; அது முழு காரியத்தையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் மிகக் குழப்பத்திற்குள்ளாக்கி விடுகின்றது, அப்பொழுது நீங்கள் உங்களில் ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கின்றீர்கள் மற்றும் எல்லா காரியத்தையும் உடைத்துப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை ஒரு இறுதியான அஸ்திபாரத்திற்கு திருப்பிக் கொண்டுவர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், அதுதான் தேவனுடைய வார்த்தையாகும். அது உண்மை. “ஓ, இயேசு ஒரு வெள்ளைக் குதிரையின் மீது வருகின்றார். அது எனக்குத் தெரியும். ஒரு தரிசனத்தில் நான் அவரைக் கண்டேன்” என்று கூறின ஒருவர் பேரில் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த மாதிரியில் ஒரு சபையை அவர்கள் உருவாக்குகின்றனர், “ஓ, அல்லேலூயா! ஒரு மேகத்தின் மீது அவர் வருகின்றார்.'' அந்த விதமான ஒன்றின் பேரிலும் அவர்கள் உருவாக்கி விடுகின்றனர். அவைகளை உடைக்கின்றனர், பிரிக்கின்றனர், ஒருவரையொருவர் (”Buzzard Roost“) பருந்தின் கூடு என்றும், மற்றும் தூக்கனாங்குருவி கூட்டைப் (”Louse Hangout“) போன்று என்று அழைத்துக் கொள்கின்றனர், அதைப் போன்று ஒவ்வொன்றையும் செய்கின்றனர். என்ன, சகோதரனே, அது எதைக் காண்பிக்கிறதென்றால், முதல் காரியமாக, நீ அதைச் செய்யும்போது உன்னுடைய இருதயம் தேவனுடன் சரியாக இல்லை என்பதே. அது சரி. நாமெல்லாரும் சகோதரர்கள். நாம் ஒருவர் பேரிலோருவர் ஒட்டிக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் நமக்குத் தேவை. 58இப்பொழுது கவனியுங்கள், சவுல் செல்கையில் அவன் பின்மாற்றமடைந்திருந்தான். அவர், தேவன், தம்முடைய முகத்தை அவனிடமிருந்து திருப்பிவிட்டிருந்தார். அவன் சென்று அந்த தீர்க்கதரிசியோடு விசாரித்துப் பார்த்தான். அந்த தீர்க்கதரிசி சென்று தீர்க்கதரிசனம் உரைக்க முயற்சித்தான், தேவனோ வழியை அடைத்துவிட்டார், ஒரு தரிசனத்தைக் கூட அளிக்கவில்லை. தீர்க்கதரிசி வெளியே வந்து என்னால் முடியவில்லை. ''இல்லை, உன்னைக் குறித்து எதையுமே அவர் என்னிடம் கூறவில்லை'' என்றான். நல்லது, பிறகு அவன், ''கர்த்தாவே எனக்கு ஒரு சொப்பனத்தைத் தாரும்'' என்றான். இரவிற்குப்பின் இரவு, ஒரு சொப்பனமும் வரவில்லை. பிறகு அவன் ஊரீம் தும்மீமிடம் செல்கின்றான், “ஓ தேவனே! நான் தீர்க்கதரிசிகளிடம் சென்று முயன்று பார்த்தேன், சொப்பனத்தின் மூலமாக அறிந்து கொள்ள முயற்சி செய்தேன், இப்பொழுது நீர் எனக்கு உதவி செய்யும், அதை நீர் செய்வீர்?'' ஆனால் பதில் வரவில்லை, எந்த ஒரு வெளிச்சமும் பிரகாசிக்கவில்லை. பிறகு அவன் ஒரு சூனியக்காரியிடம் சென்றான், கீழ்த்தரமானது, இழிவான ஒன்று. ஆகவே அவன் அவளிடம் சென்றான், அங்கே ஊர்ந்து சென்றான், அவன் தன்னைத்தானே வேஷம் மாற்றிக் கொண்டான். ஆகவே இந்த சூனியக்காரி சென்று சாமுவேலின் ஆவியை அழைக்கின்றாள். இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நான் அறிவேன். அநேகர், ''அது சாமுவேல் அல்ல'' என்று கூறினர். ஆனால் வேதாகமமோ அது சாமுவேல் என்றே கூறுகின்றது, அது சாமுவேலே தான். எப்படி நீங்கள் புரிந்து கொள்கிறீர்களோ, அப்படித்தானே? ஆனால் அது சாமுவேல் தான். வேதாகமம் அவ்விதமாகத்தான் கூறுகின்றது. ஆகவே அந்த சூனியக்காரியால் அவனை அழைக்க முடிந்தது, அவள் சாமுவேலை மேலே அழைத்தாள். சாமுவேல் எங்கேயோ இருந்தான், ஆனால் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவனாக இருந்தான், இன்னுமாக தன்னுடைய தீர்க்கதரிசியின் சால்வையை தன்மேல் கொண்டிருந்தவனாக இருந்தான். ஆகவே, சகோதரனே, நீ மரிக்கையில், நீ மரணமடையவில்லை, நீ எங்கோ ஓரிடத்தில், எங்கேயோ ஓரிடத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். 59இந்த பிசாசியில் என்பதைப்பற்றி சற்று அறிந்து கொள்ளும்படியாக சற்று ஒரு நிமிடத்திற்காக இங்கே நான் நிறுத்தட்டும். அவள் ஒரு பிசாசாக இருந்தாள், அவள் அந்த ஆவிகள் உலகத்தோடு நெருங்கின தொடர்பு கொண்டவளாக இருந்தாள். இப்பொழுது, இன்றைக்கு ஆவிகளோடு தொடர்பு கொண்டிருப்பவர்கள் அநேகர், உண்மையாகவே கூறிக்கொள்ளுபவர் கிறிஸ்தவர்கள் என்று ஆவிக்குரிய உலகத்தைக் குறித்து அறிந்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக அறிந்துள்ளனர், இன்னுமாக அவள் ஒரு பிசாசாக, தீய ஆவியாக இருந்தாள். வேதாகம காலங்களிலும் கூட அதே விதமாகத்தான் இருந்தது. இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, பேராசிரியர்களாக, அறிவாளிகளாக, போதகர்களாக அவர்கள் இருந்தனர், இன்று நல்ல வேதாகம கல்லூரிகளிலிருந்து நாம் உருவாக்கும் சிறந்தவர்களுக்கு மேலாக அவர்களில் சிலர் அங்கே இருந்தனர். பரிசுத்தமான, பேர் பெற்ற மனிதனாக, அவர்கள் இருக்க வேண்டியதாயிருந்தது. ஒரு லேவியன் களங்கமில்லாதவனாக, ஒவ்வொரு வழியிலும் நீதியுள்ளவனாக காணப்பட வேண்டியதாயிருந்தது. ஆனாலும் அந்த மனிதனோ ஒரு முயலானது பனிக்காலணிகளைப் பற்றி தெரிந்திருப்பதைக் காட்டிலும் தேவனைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். இயேசு வந்தபோது அவரை அடையாளங் கண்டு கொள்ளத் தவறினான், அவன் இயேசுவை ஒரு ''பிசாசு'' என்று அழைத்தான். அது சரியா? 60ஆகவே இங்கே கீழ்த்தரமான வகையான ஒரு பிசாசு வருகின்றது, ஒரு மனிதனை கல்லறையில் கட்டி வைத்து மற்ற எல்லா காரியத்தை செய்து கொண்டிருந்தது, அவைகள் கூக்குரலிட்டன. பிசாசும் கூட, ''நீர் யார் என்று எங்களுக்குத் தெரியும். நீர் தேவனுடைய குமாரன், பரிசுத்தர்,'' என்று கூறினது. அது சரியா? சூனியக்காரிகள், மந்திரவாதிகள், பிசாசுகள் அவரை தேவனுடைய குமாரனென்று அடையாளங் கண்டுகொண்டனர்; அதே சமயத்தில் கல்வியறிவு பெற்றிருந்த, வேத கலாசாலை பிரசங்கிகள் அவரை பெயல்செபூலாக அடையாளங் கண்டுகொண்டனர். யார் சரியாக இருந்தது, பிசாசு அல்லது அந்த பிரசங்கியா? பிசாசு தான். ஆகவே, சகோதரனே, இன்றைக்கு ஒன்றும் ஒரு பெரிய வித்தியாசமான மாறுதல் எதுவும் அதில் இல்லை. அவர்கள் தேவனுடைய வல்லமையை அடையாளங்கண்டு கொள்வதில்லை. 61எவ்வளவு போதகத்தை நீ கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதை நீ உனக்குள்ளாக அதை கிரகித்துக் கொள்ள முடியும். தேவன் பெரிய வார்த்தைகளில் இல்லை. ஒரு உத்தம இருதயத்தில் தான் தேவன் இருக்கின்றார். அது என்ன என்று எனக்கு தெரியாதிருக்கும் ஒன்றைப்போல், நீ இங்கே நின்று கொண்டு, பெரிய வார்த்தைகளை பேசலாம், அது உன்னை தேவனுக்கு அருகாமையில் கொண்டு வராது. நீ நின்று கொண்டு உன்னுடைய பிரசங்கத்தை திரும்பக் கூறி இந்த காரியங்களைக் கூறத்தக்கதாக எப்படிப்பட்ட பயிற்சியை மேற்கொண்டாலும் சரி, அது உன்னை தேவனண்டை கொண்டு போய்ச் சேர்க்காது. ஒரு அகராதியை வைத்து உறங்கும் அளவிற்கு நீ அகராதியை கற்றிருக்கலாம், ஆனால் அது இன்னுமாக உன்னை தேவனுக்கருகில் கொண்டு வராது. ஒரு தாழ்மையான, அற்பணிக்கப்பட்ட, எளிமையில் இருக்கின்ற இருதயமே உன்னை தேவனண்டையில் கொண்டு வரும். அது உண்மையே. ஆமென்! ஒரு தாழ்மையான இருதயத்தையே தேவன் நேசிக்கின்றார். இப்பொழுது, உங்களுக்கு அஆஇ (ABC) தெரியவில்லையென்றாலும் பரவாயில்லை, அது எந்தவித வித்தியாசத்தையுமே உண்டு பண்ணாது. ஒரு தாழ்மையுள்ள இருதயம் மாத்திரமே! ஒரு தாழ்மையான இருதயத்தில்தான் தேவன் வாசம் செய்கிறார்; கல்வியறிவில் அல்ல, பள்ளிகளில் அல்ல, வேத சாஸ்திரத்தில், வேத கல்லூரிகளில் அல்ல, இந்த மற்ற எல்லாவிடங்களிலும் அல்ல, பெரிய வார்த்தைகளில் அல்ல, அல்லது முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த இடங்களில் அல்ல. மானிட இருதயத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார். ஆகவே உன்னைத்தானே நீ எவ்வாளவாக தாழ்மையாக ஆக்கிக் கொள்கிறாயோ, இன்னும் அதிக எளிமையாக இருந்தால் நீ தேவனுடைய பார்வையில் மகத்தான ஒன்றாக ஆகலாம். 62ஒன்றை நான் உங்களுக்குக் கூறட்டும். இங்கே உங்களுடைய வயல்கள் முழுவதும் கோதுமையால் நிறைந்திருப்பதை நான் காண்கிறேன். கோதுமையினால் நிறைந்திருக்கும் கதிரானது எப்பொழுதுமே குனிந்து வணங்கினவாறே காணப்படும். அங்கே ஒரு சிறிய பழைய தண்டு முளைத்தெழும்பி தனக்கு எல்லாம் தெரிந்தாற்போல் இங்குமங்குமாக சுற்றி அலைந்து கொண்டிருக்கும். அது தன் தலையில் ஒன்றும் பெற்றிருக்கவில்லை. அதைப் போலவே அவர்கள் தங்கள் தலைகளில் நிறைய காரியங்கள் வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருதயங்களில் ஒன்றுமே இல்லை. அல்லது, ஒரு பரிசுத்த தலை வல்லமைக்கு தலை வணங்கும், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று அடையாளங் - கண்டு கொண்டு அவருடைய கிரியைகளை விசுவாசிக்கும். ''அவர் நேற்றும்... மாறாதவர்.'' ஓ அவர்கள் நிச்சயமாக அவரை ஒரு வரலாற்றுப் பூர்வமான பார்வையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால் அது வரலாறான ஒன்றல்ல. ஜனங்கள் எழுந்து நின்று, “ஓ அவர்கள் அந்த மகத்தான உணர்ச்சி வேகமிக்க பேச்சு மற்றும் அதைப்போன்ற காரியங்களையும் கொண்டிருந்தபோது நான் பெந்தெகொஸ்தேயை விசுவாசிக்கிறேன்'' என்று கூறி, ஒரு அக்கினியை வரைகின்றனர். குளிரில் உறைந்து கொண்டிருக்கின்ற ஒரு மனிதனால் ஒரு வரையப்பட்ட நெருப்பினால் அனல் கொள்ள முடியாது. வரையப்பட்ட நெருப்பு அனலை மூட்டாது. அப்படிதான் அவர்கள் இருக்கின்றனர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரென்றால், இன்று அது என்னவாக இருக்கும்? அது வரையப்பட்ட ஒரு தீ. குளிரில் உறைந்து மரணமடைந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் அவர்கள் கொண்டிருந்த ''அந்த பெரிய அக்கினியைப் பார்” என்று கூறினால், என்ன, அது உனக்கு வெப்பத்தை அளிக்காது. 63அவர்கள் பெந்தெகொஸ்தேயில் செய்ததை, ஆதி ஏற்பாட்டில் அவர்கள் எதைக் கொண்டிருந்தனரோ, அதை நாம் இன்று பெற்றிருக்கிறோம்! காரியத்தை தேவன் சரியாக செய்து முடிக்கையில், சபையானது ஒன்றாக அமைக்கப்பட்டவுடன், எடுத்து கொள்ளப்படுதல் வரும். எடுத்துக்கொள்ளப்படுதல் இருக்கட்டும், நம்மால் தெய்வீக சுகமளித்துலுக்கான விசுவாசத்தைக்கூட கொண்டிருக்க முடியவில்லையே, ஏனெனில் நாமெல்லாரும் ஒருவர் இந்த வழியாகவும் ஒருவர் அந்த வழியாகவும் குழம்பிப் போயிருக்கிறோம், “டாக்டர் இன்னார் - இன்னார் அது இந்த விதமாகத்தான் என்று கூறியுள்ளார். நல்லது, என் பிரசங்கி அவர் இதுவாகத்தான் இருக்கிறார் என்று கூறினார்''. ஒரு ஸ்திரீ, சற்று முன்னர், “அவர் ஒரு பொய்யர்.'' ''என் போதகர் அவ்விதமாகக் கூறியுள்ளார்'' என்று கூறினாள். அவளுடைய சபை குருவானவர் ஒரு தடவை இங்கே வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன், அப்பொழுது யார் பொய்க்காரரென்று நாம் பார்ப்போம். ஆம். பொய்யர் யார் என்று பார்க்கலாம், வந்து அதை சோதனைச் செய்து பார். 64சிறிது காலத்திற்கு முன்னர், டெக்ஸாசிலுள்ள, ஹார்லிங்கனில் நாங்கள் ஒரு ஆராதனையை நடத்திக் கொண்டிருந்தோம். அவர்கள் பெரிய விளம்பர அடையாளங்களை வைத்திருந்தனர், நான் அங்கே அந்த இரவில் இருந்தபோது அவர்கள் கார்கள் மேலெல்லாம் வைத்திருந்தனர், நான் ஒரு பொய்காரனென்று என்னை வெளிக்காட்டத்தக்கதாக (FBI) புலனாய்வுத் துறையினர் அங்கேயிருக்கின்றனர் என்று அது கூறினது. ஆகவே அங்கே டெக்ஸாசில் எங்கோ ஓரிடத்தில் ஒரு சிறிய பெண் சுகமாக்கப்பட்டிருந்தாள். நான் - நான் யூகிக்கிறேன், அவள் பான்ஹாண்டில் அருகில் இந்த பக்கமாக ஹார்லிங்டனில் எல்லையில் சுமார் ஆயிரம் மைல்கள் இருக்கும் சகோதரன் பாக்ஸ்டர் என்னிடம் வந்து சகோதரன் பிரன்ஹாமே, அங்கே காணப்படுகின்ற ஒரு குழப்பத்தைப் போன்று நீர் கண்டிருக்கவே மாட்டீர், அங்கே சுமார் நான்கு அல்லது ஐந்தாயிரம் மக்கள் இருக்கின்றனர் என்றார். மேலும் அவர், ''மேலும் பிறகு சுற்றிலுமாக, இன்றிரவு பிரசங்க மேடையின் மீது (FBI) புலனாய்வுத் துறை உம்மை மடக்கி, உம்மை வெளிகாட்டப் போகின்றது'' என்றார். நான், ''நல்லது, அதைக்குறித்து நான் நிச்சயமாக மகிழ்ச்சி கொள்கிறேன்“ என்றேன். அவர், ''அந்த இரவு சுகமாக்கப்பட்ட அந்த சிறிய சிறுமியை உமக்கு தெரியுமா?'' என்றார். 65நான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்..... என்னுடைய அறைக்குள் சென்று கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று அழுது கொண்டிருப்பதை நான் கேட்டேன், நான் சுற்று முற்றும் பார்த்தேன். யாரோ ஒருவர் தாக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நான் எண்ணினேன். அது ஒரு பெண்ணாக இருந்தது. நான் திரும்பி பார்த்தேன். நான் கூறினேன். நான் பின்னால் சென்று, ''சீமாட்டியே, காரியம் என்ன?'' என்றேன். அது சுமார் பதினேழு, பதினெட்டு வயது கொண்ட இருவராக, தங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் போட்டு, அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ''சகோதரன் பிரன்ஹாமே!'' என்றனர். அவர்கள் என்னை அறிந்துள்ளனர் என்று நான் அப்பொழுது அறிந்து கொண்டேன். ''நாங்கள், நான் அவளை இந்த தூரமான இடத்திற்கு கொண்டு வந்தேன். அவள் மனநலக் காப்பகத்திற்கு செல்ல வேண்டியவளாக இருந்தாள்.'' ஆகவே அந்த சிறிய பெண் டெக்ஸாசிலுள்ள லுப்பாக்கில் நடந்த என்னுடைய கூட்டத்தில் இருந்தாள். மேலும், ''நான் இங்கே அவளைக் கொண்டு வந்து, நீர் அவளுக்காக ஜெபத்தை ஏறெடுப்பீர், தேவன் அவளை சுகமாக்குவார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை நான் அறிந்திருந்தேன்,'' என்றாள். நல்லது, நான் எப்படிப்பட்ட ஒரு விசுவாசம்! என்று எண்ணினேன். மேலும் நான் ''நல்லது, இப்பொழுது, சகோதரியே, நீ அவளை...'' என்றேன். அச்சமயம் நான், ''நீங்கள் இங்கு ஒரு மஞ்சள் ரோட்ஸ்டர் வாகனத்தில் வந்தீர்கள், அப்படித்தானே?'' என்றேன். ''ஆம்!'' என்றாள். நான் “உன் தாய் ஒரு நோயாளி,'' என்றேன். அவள் “அது சரியே” என்றாள். நான், “நீ மெத்தொடிஸ்ட் சபையை சார்ந்தவள்” என்றேன். அவள், “அது முற்றிலும் உண்மையாகும்” என்றாள். மேலும் நான், ''சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நீ ஏறக்குறைய வாகனத்துடன் குப்புறக் கவிழ்ந்து விட்டாய். பாதி கான்கிரிட் மற்றும் பாதி ஜல்லி கூழாங்கற்களுடன் கலந்த கருங்காரையாக இருந்த அந்த இடத்தண்டை வந்து கொண்டிருந்தபோது நீயும் இந்த சிறுபெண்ணும் சிரித்து கொண்டிருந்தீர்கள், நீங்கள் ஒரு வளைவில் திரும்பிக் கொண்டிருந்தீர்கள்'' என்றேன். அவள், “சகோதரன் பிரன்ஹாம், அது உண்மை தான்” என்றாள். நான், “ஆகவே கர்த்தர் உரைக்கிறதாவது, அந்த பெண் சுகமானாள்” என்றேன். 66அடுத்த நாளில் அவள் நகரத்தையே தீயிட்டுக் கொண்டிருந்தாள், சுற்றிலும் எல்லாரிடமும் அதைக்குறித்து கூறிக்கொண்டிருந்தாள். அங்கே அவர்கள் அவளை அறிந்திருக்கவில்லை, அவள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்திருப்பாளோ அல்லது இல்லையோ என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே பிறகு அந்த நாளில் நான்.... சகோதரன் பாக்ஸ்டர், ''சகோதரன் பிரன்ஹாம், அந்த சிறு பெண்கள் அங்கே தங்கள் சூட்கேஸ் பெட்டியை அடுக்கி தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.'' என்று கூறினார். இந்த காரியத்தை நான் அறிந்திருக்கிறேன் என்று அவருக்கே தெரியாதிருந்தது. எங்கள் நிதி நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. அதைக்குறித்து அவரைப் பேச நான் விடவில்லை. ஆனால் அந்த சிறு பெண்களில் ஒருத்தி அந்த இரவிற்கு முந்தின இரவில் காணிக்கையாக தொள்ளாயிரம் டாலர்கள் காணிக்கை போட்டு, அந்த நிதியை மேலே போட்டிருந்தாள். இப்பொழுது, இந்தநாள் வரை அவர் அதை அறியாதிருந்தார், ஆனால் நான் அதை அறிந்திருந்தேன். பாருங்கள்? நான்.... அது சரியாகி விடும் என்று தேவன் என்னிடம் கூறியிருந்தார். 67சகோதரன் பாக்ஸ்டர் “சகோதரன் பிரன்ஹாம்,'' உங்களுக்கு ஒரு சிறிய அழைப்பை நான் செய்யட்டும், ''இங்கே தெய்வீக சுகமளிப்பவர்கள் இந்த மக்களிடம் இதைச் செய்தனர்'' என்றார். நானோ, ''தேவையில்லை. இல்லை, ஐயா. நீங்கள் அதைச் செய்யாதீர்கள். சகோதரன் பாக்ஸ்டர், அந்த விதமாக பணத்திற்காக அழைப்பை நீர் செய்தால், அந்த நேரமே நீங்களும் நானும் ஒருவரையொருவர் சகோதர கைகளை குலுக்கி, நான் தனியாகச் சென்று விடுவேன், புரிகின்றதா?'' என்றேன். நான், ''நீங்கள் அதைச் செய்ய வேண்டாம், ஆயிரம் மலைகளில் ஆடுமாடுகளை தேவன் சொந்தமாக கொண்டிருக்கிறார், ஆகவே எல்லா காரியமும் அவருக்கே சொந்தம். நான் அவருக்கே சொந்தம். அவர் என்னை பார்த்துக் கொள்வார் என்று கூறினேன். அவர், ''சரி“என்றார். பிறகு அந்த இரவில் அவர், ''சகோதரன் பிரன்ஹாம், இங்கே பாருங்கள். யாரோ ஒருவர்.... இங்கே பாருங்கள்! இங்கே உள்ளே ஒரு கடித உறை இருக்கின்றது, அதன் மீது பெயரெதுவுமே இல்லை, அதனுள் தொள்ளாயிரம் டாலர்கள் இருக்கின்றது. செய்ய நமக்கு தேவையாயிருக்கின்ற சரியான ஒன்று'' என்று கூறினார். நான் “சகோதரன் பாக்ஸ்டர்'' என்றேன். அவர் “என்னை மன்னியுங்கள்'' என்றார். 68ஆகவே அப்பொழுது நான் அது அந்த சிறு பெண் தான் என்று அறிந்து கொண்டேன். ஆகவே பிறகு - பிறகு அடுத்த நாளிலே, சகோதரன் பாக்ஸ்டர் ''சகோதரன் பிரன்ஹாம், அவர்கள் தங்கள் துணிகளை ஆயத்தம் செய்து, அழுது கொண்டிருக்கின்றனர்,'' என்று கூறினார். நான், ''என்ன காரியம்?'' என்றேன். ''நீர் சென்று அவர்களை சந்தித்தால் நலமாயிருக்கும்'' என்றார். அவர்கள் தங்கியிருந்த அறைக்கு நான் சென்றேன். நான், எந்த அறையில் அவர்கள் இருக்கின்றனர்? என்று கேட்டேன். நான் அங்கு சென்று கதவைத் தட்டினேன். அவர்கள் அழுது கொண்டிருந்ததை நான் கேட்டேன். நான் கதவைத் தட்டினேன், அந்த பெண் கதவண்டை வந்து, ''ஓ, சகோதரன் பிரன்ஹாம், என்னை மன்னியுங்கள், இந்த எல்லா தொந்தரவிற்கும் காரணம் நான் தான்'' என்று கூறினாள். நான், “தொந்தரவா? என்ன காரியம், சகோதரியே?” என்றேன். அவள் “ஓ, (FBI) புலனாய்வு அதிகாரிகள் உம்மை பின்தொடரச் செய்து விட்டேனே'' என்றாள். நான், ''அது உண்மைதானா?'' என்றேன். அவள், “ஆமாம், இன்று நான் நகரம் முழுவதுமாக எல்லா காரியத்தையும் அதிகம் சாட்சி கொடுத்து விட்டேன் என்று யூகிக்கிறேன்'' என்றாள். நான், ''அப்படியல்ல'' என்றேன். மேலும் அவள், ''சகோதரன் பிரன்ஹாம், FBI புலனாய்வு அதிகாரிகள் அங்கே இருக்கின்றனர், அங்கே இன்றிரவு உம்மை அம்பலப்படுத்தப் போகின்றனர்'' என்று கூறினாள். நான், ''நல்லது, நான் - நான் தவறான ஒன்றைச் செய்து கொண்டிருப்பேனானால், நான் அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒருவனே, புரிகின்றதா?'' என்றேன். நான், ''நிச்சயமாக, சுவிசேஷத்தை பிரசங்கிப்பதென்பது அம்பலப்படுத்தப்பட வேண்டியிருந்தால், நல்லது, அது செய்யப்பட வேண்டும். பார்? நான் - நான் - நான் இந்த வேதாகமத்தின்படி தான் வாழ்கின்றேன், இந்த வேதாகமம் எதைக் கூறாமலிருக்கின்றதோ... சரியாக இங்கே இதுதான் என்னுடைய பாதுகாப்பாகும். புரிகின்றதா?,'' என்றேன். ஆகவே நான் கூறினேன், மேலும் அவர்.... 69அவள், ''சரி, நான் செய்த காரியத்திற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்'' என்றாள். நானோ, “சகோதரியே நீ எதையுமே செய்யவில்லை” என்றேன். அவள், ''அப்படியானால் அங்கே செல்ல உமக்கு பயம் இல்லையா?'' என்றாள். நான், “இல்லை” என்றேன். அவள், “ஐயோ, FBI புலனாய்வுத் துறையினர் அங்கே இருக்கின்றனரே” என்றாள். நான், ''நல்லது, முன்பு என் கூட்டங்களில் அவர்கள் வந்தனர், பிறகு அவர்கள் இரட்சிக்கப்பட்டனர்'' என்று, நான் கூறினேன், ''திரு. அல். ஃபெரார்...'' காப்டன் அல்ஃபெரார், வாஷிங்கடனிலுள்ள டாகோமாவில் அவருடைய மனந்திரும்புதலை உங்களில் அநேகர் அறிவீர்கள், ஒரு துப்பாக்கி சுடும் அரங்கிலிருந்து வந்த அவர் சொன்னார், ''இந்த மனிதனை நான் இரண்டு வருடமாக கண்காணித்துக் கொண்டிருந்தேன். நிதி நிலைமைகளைக் குறித்து கேள்விப்பட்டேன், நான் அதைக் கண்காணித்தேன், எல்லாவிடங்களிலும் பின்தொடர்ந்தேன். இதுதான் சத்தியம், இன்றிரவு நீங்கள் மட்டுமீறிய உணர்ச்சியார்வம் கொண்டிருக்கின்ற ஒரு மதவெறியர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை, நீங்கள் சத்தியத்திற்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். காவல் துறையில் உள்ள ஒரு மனிதனை அவனுடைய குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க வைத்து பிறகு ஜெப வரிசையில் அனுப்பினேன், அந்த குழந்தையிடம் காணப்பட்ட கோளாறு என்னவென்று சரியாகக் கூறப்பட்டது. மேலும் ''இது போலியோ பாதிப்படைந்திருக்கிறது. இன்னும் எட்டு நாட்களில் பள்ளி கூடத்திற்கு திரும்பச் செல்லும் என்று கூறப்பட்டது. எட்டாவது நாளில் அந்த குழந்தை பள்ளிக்கு மறுபடியும் சென்றது. இரண்டு வருடங்களாக இவரை தொடர்ந்து கண்காணித்து வந்தேன்'' என்று பத்தாயிரம் மக்களுக்கு முன்பாகக் கூறினார். அவ்வளவுதான்.... சீட்டில் நகர கூட்டம், அதைக்குறித்த புகைப்படம் எல்லாம் உங்களுடைய புத்தகத்தில் இருகின்றது. அவர், ''ஏதோ ஒரு போலி மதவாதிக்கு செவிக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் சத்தியத்திற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று கூறினார். காப்டன் அல். ஃபெரார். அடுத்த நாளில் நான் அவரை தேவனண்டையில் நடத்திச் சென்றேன், ஒரு துப்பாக்கி சுடும் அரங்கத்தில், அங்கே இருக்கின்ற ஒரு பெரிய இடத்தில். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். 70நான், ''ஒருக்கால் இந்த ஆளும் அதேவிதமாகவே செய்யலாம்'' என்றேன். அவள், “அங்கே நீர் செல்ல பயப்படுகிறீரா?,'' என்றாள். நானோ, “பயமா? என்ன, நிச்சயமாக இல்லை. நிச்சயமாக இல்லை. அதைச் செய்ய தேவன் என்னை அனுப்பியிருக்கையில் ஏன் நான் பயங்கொள்ள வேண்டும்? யுத்தத்தை செய்கின்றவர் அவர்தான், நானல்ல'' என்றேன். ஆகவே நான் இப்பொழுது, ''நீ செய்ய வேண்டியது என்னவெனில் விலகியிருக்க வேண்டும் அவ்வளவுதான்'' என்றேன். ஆகவே..... அந்த இரவு கூட்டத்திற்கு நாங்கள் சென்றோம், அந்த இடம் ஜனத்திரளால் நிரப்பப்ட்டிருந்தது. அந்த இடத்தின் பாதுகாவலர் வந்து, ''ரெவரெண்ட் பிரன்ஹாம், பத்து மெக்ஸிகோ பிள்ளைகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளேன்,'' என்றார். மேலும் அவர் ''இங்கே பாருங்கள், ''ரெவரெண்ட் பிரன்ஹாம் FBI புலனாய்வுத் துறையினரால், ஒரு மட்டுமீறிய உணர்ச்சியார்வமிக்க மதவெறியர் என்று அம்பலப்படுத்தபடப் போகிறார்'' என்றார், அல்லது அதை போன்ற ஒன்றைக் கூறினார். மேலும் அவர், ''அது அவர்களின் ஒவ்வொரு கார்களின் மேலும் எழுதப்பட்டிருக்கின்றது. இழுத்து... நான் பத்து சிறிய மெக்ஸிகோ பிள்ளைகளை வாடகைக்கு அமர்த்தியிருக்கிறேன், அவர்களெல்லாரும் அதை எடுத்து இங்கே வைக்கப் போகின்றனர். ஓ, நான் அந்த ஆளை நான் கையும் களவுமாக பிடிப்பேன் என்று உணர்கிறேன்'' என்றார். நான், ''கவலைப்படாதீர்கள் ஐயா. தேவன் அவனை பிடிப்பார், பாருங்கள்'' என்றேன். நான் ''அவனை அப்படியே விட்டுவிடுங்கள்'' என்று கூறினேன். 71ஆகவே அவர் அங்கே வந்தார். அந்த இரவில் நாங்கள் உள்ளே வந்தபோது, அதை நான் மறக்கவேமாட்டேன், அறைக்குள்ளே நடந்து வந்தேன். நான்.... சகோதரன் பாக்ஸ்டர் ''நம்பிடுவாய்'' என்று பாடினார். அவர், ''இப்பொழுது, நாம் இன்றிரவு இந்த கட்டிடத்தை விட்டு செல்லவேண்டும்'' என்று சகோதரன் பிரன்ஹாம் கூறுகின்றார். ''நான் பின்னால் கடைசிக்குச் சென்று உட்கார்ந்து கொள்ளப் போகிறேன். இங்கே இன்றிரவு பிரசங்க மேடையின் மீது அவரை அம்பலப்படுத்த அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். நான் அநேக கடினமான யுத்தங்களில் அவரைக் கண்டிருக்கிறேன், தேவன் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்வதை கண்டிருக்கிறேன். நான் - நான் பின்னால் சென்று உட்கார்ந்து கொள்ளப் போகிறேன்'' என்று கூறினார். நான் மேலே நடந்து வந்தேன். நான், ''இங்கே இன்றிரவு பிரசங்க மேடையின் மீது அம்பலப்படுத்தப்படப் போவதாக கூறும் ஒரு சிறிய கட்டுரையை சற்று முன்னர் படித்துக் கொண்டிருந்தேன்'' என்று கூறினேன். ''நான் இப்பொழுது FBI புலனாய்வு அதிகாரிகள் முன்பாக வந்து இங்கே பிரசங்க மேடையின் மீது என்னை அம்பலப்படுத்த நான் விரும்புகிறேன். நான் இங்கே சுவிசேஷத்தின் அரண்காப்பாக நின்று கொண்டிருக்கிறேன்; நீங்கள் வந்து என்னை அம்பலப்படுத்தக் கோருகிறேன்'' என்றேன். நான் காத்திருந்தேன். நான் எங்கேயுள்ளேன் என்பதை அறிவேன். என்ன சம்பவிக்கப் போகிறதென்று அறையை விட்டு புறப்படும் முன்னரே அவர் ஏற்கெனவே எனக்கு அந்த அறையில் காண்பித்து விட்டார், நீங்கள் பாருங்கள். மேலும் நான் கூறினேன், நான், ''ஒருக்கால் சற்று நான் காத்திருப்பேன். நாம் ஒரு பாடலைப் பாடுவோமா?'' என்று கூறினேன். பிறகு யாரோ ஒருவர் வந்து ஒரு தனிப்பாடலைப் பாடினார். 72நான், ''திரு. FBI புலனாய்வு உளவாளியே நீ உள்ளே இருக்கிறாயா அல்லது வெளியே இருக்கிறாயா? அம்பலப்படுத்தப்பட நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ முன்னே வரலாமல்லவா? என்றேன். ஒருவரும் வரவில்லை. அது எங்கேயிருக்கிறதென்று நான் வியந்து கொண்டிருந்தேன். அது என்னவென்று கர்த்தர் என்னிடம் கூறியிருந்தார். அது பின்மாற்றமடைந்திருந்த இரண்டு பிரசங்கிமார்கள், நான் - நான் கவனித்துக் கொண்டிருந்தேன். மூலையில் ஒரு கறுத்த நிழல் தொங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். அது எங்கேயிருந்ததென்று நான் அறிந்திருந்தேன். நான் அங்கே நோக்கிப் பார்த்தேன், அது நேராக நகரத் துவங்கி அரங்கத்திற்குள் இதைப் போன்று சென்றது. நீல நிற சூட்டை அணிந்திருந்த ஒரு மனிதன், மற்றொருவன் சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தான். நான், ''நண்பர்களே, அது FBI நிறுவனத்தார் இல்லை. வேதாகமத்தை பிரசங்கிப்பதற்கும் FBI புலனாய்வு நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?'' என்றேன். நான், ''நிச்சயமாக இல்லை. என்னை அம்பலப்படுத்த வந்த இரண்டு FBI உளவாளிகள் அவர்கள் அல்ல. ஆனால், இதோ அம்பலப்படுத்துதல், அதோ சரியாக அங்கே அவர்கள் உட்கார்ந்துள்ளனர், அந்த இரண்டு பிரசங்கிகள் நேராக அங்கேயுள்ளனர்'' என்றேன். அப்பொழுது அவர்கள் கீழே இறங்கினர். நான், ''அப்படி கீழே இறங்காதீர்கள்'' என்றேன். அங்கே டெக்ஸானை சார்ந்த கனத்த இருவர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நான், ''வேண்டாம் சகோதரரே, இது மாம்சம் இரத்தம் சம்பந்தப்பட்ட காரியமல்ல, அப்படியே அமர்ந்திருங்கள். தேவன் அதைப் பார்த்துக் கொள்வார்'' என்றேன். 73நான், “இப்பொழுது, சகோதரரே, பாருங்கள், நீங்கள் மேலே இருக்கையில், இந்த பக்கமாக நோக்கிப் பாருங்கள்'' என்றேன். மேலும் நான், ''ஒருக்கால்... நான் மாயவித்தைக்காரனான சீமோன் என்றும், மந்திர வித்தையினால் ஜனங்களை பிரம்மிக்கப்பண்ணிக் கொண்டிருக்கிறேனென்றும் நீங்கள் கூறினீர்கள். நான் தான் மாயவித்தைக்காரனான சீமோன் என்றால் அப்படியானால் நீங்கள் தேவனுடைய மனிதராவீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த மேடையின் மீது வாருங்கள். மேலும் மாயவித்தைக்காரனான சீமோன் நான் தான் என்றால், நான் சாகத்தக்கதாக தேவன் என்னை அடிக்கட்டும். நான் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருப்பேனென்றால், நீங்கள் வாருங்கள், நீங்கள் செத்துப் போகத்தக்கதாக தேவன் உங்களை அடிப்பாராக. இப்பொழுது யார் சரி, யார் தவறு என்று நாம் பார்த்துவிடுவோம். இப்பொழுது நீங்கள் கீழே இறங்கி வாருங்கள். நாம் ஒரு பாடலைப் பாடுவோமாக” என்றேன். அவர்கள் கட்டிடத்தை விட்டு வெளியே சென்றனர், அன்றிலிருந்து அவர்களை இதுவரை நாங்கள் காணவில்லை. பாருங்கள்? நான், ''வாருங்கள், நான் தான் மாயவித்தைக்காரனான சீமோனென்றால், நான் செத்துப் போகத்தக்கதாக தேவன் என்னை அடிப்பாராக. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்றால், நீங்கள் இந்த மேடையின் மீது வரும்போதே அப்பொழுதே தேவன் உங்களை செத்துப் போகத்தக்கதாக அடிப்பாராக. நான் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவனாக காணப்படுவேனானால், இந்த பிரசங்க மேடையின் மீதே தேவன் உங்களை சாகடிப்பார்“ என்றேன். அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அது சரி. அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மற்ற இடங்களிலிருந்து அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். அது சரி. ஆகவே அதைக்குறித்து சிந்திக்கவே சிந்திக்காதே. தேவன் இன்னுமாக தேவனாகவே இருக்கின்றார். அவர் பதிலளிக்கின்றார். 74இப்பொழுது, இந்த எந்தோரின் மந்திரக்காரி, அவள் சாமுவேலின் ஆவியை அழைத்தாள். சவுல் சாமுவேலிடம் பேசினான். இப்பொழுது, அது எப்படியாகும் என்று ஒருக்கால் நீங்கள் வியக்கலாம். அது இன்றைக்கு செய்யப்பட முடியாது. இல்லை, ஐயா. ஏனெனில் அது காளை வெள்ளாட்டுக்கடாவின் இரத்தமானது நிறைவேறுதலின் காலத்திற்கான ஒரு காத்துக் கொண்டிருத்தலாகும். அந்நாட்களிலே ஒரு மனிதன் மரித்தால்... பிரசங்கிகளே, அது சரியென்றால் நான் கூறுவதை ஆமோதியுங்கள். ஒரு மனிதன் மரித்தபோது, ஒரு மிருகத்தின் பரிகாரத்தின் கீழ் மரித்தான், அவனுடைய ஆத்துமா பரதீசுக்குச் சென்றது. அவன் மீட்கப்படும் நாள் வரைக்கும் அங்கே இருந்தான். ஆகவே அவனுடைய ஆத்துமா அங்கே இருந்தது. 75இங்கே உங்களுக்கு ஒரு சிறு காட்சியை நான் வரைவேனாக. சுமார் அக்டோபர், நவம்பர் மாதரீடர்ஸ் டைஜஸ்ட் பிரதியில் என்னுடைய கட்டுரையை அல்லது அவர்கள் என்னைக்குறித்து எழுதின கட்டுரையை எத்தனைப்பேர் வாசித்தீர்கள்? சரி. அது எப்படியென்று நீங்கள் கவனித்தீர்களா? அதற்கு முன்பு சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர், இந்த புகழ் வாய்ந்த ஆவியுலக தொடர்பாடு கொண்டவளான, அநேக ஆண்டுகளாக இதைக் கைக்கொண்டிருக்கும், செல்வி பெப்பர் (Miss Pepper), ரீடர்ஸ் டை ஜஸ்ட் இதழில் செல்வி பெப்பரின் கட்டுரையை நீங்கள் பார்த்தீர்களா? எப்படி இரண்டு ஆவிகள்... இது விநோதமான ஒன்றல்லவா. எவ்வளவு நேரம் எனக்கிருக்கிறது? இல்லை கொஞ்சம் தான் இருக்கின்றது. நான் இருபது நிமிடங்கள் கடந்து விட்டிருக்கின்றேன், நான் துரிதமாக செல்லவேண்டும். எனக்கு தெரியும் உங்களுக்கு... கவனியுங்கள், ஒரு நிமிடத்திற்கு என்னை பொருத்துக் கொள்ளுங்கள். 76அங்கே? அங்கே போலியிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா. ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு உண்மை மற்றும் ஒரு போலி இருக்கின்றது. நான் உங்களுக்கு ஒரு டாலர் நோட்டை கொடுத்து, ''இது ஒரு நல்ல டாலர் நோட்டா?'' என்று கூறினால், நீங்கள் அதை உற்று நோக்குவீர்கள், அது ஒரு உண்மையான டாலர் நோட்டைப் போலவே காணப்பட வேண்டும், இல்லையேல் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். அது சரிதானா? ஆகவே அது உண்மையாகவே ஒரு நல்ல போலியான ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும், பக்தியான மக்களையும் வஞ்சிக்கின்ற அளவிற்கு மிக நெருக்கமாக இரண்டு ஆவிகளும் காணப்படுமென்று இயேசு கூறியிருக்கிறாரென்றால், இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, அங்கே அவர்களில் பழைய குளிர்ந்துபோன சடங்குகள் நிறைந்தவர்கள். அவர்கள் வெளிப்புறத்தில் தேவபக்தியின் வேஷத்தை கொண்டுள்ளனர், புரிகின்றதா? ஆனால் இந்த இரண்டு ஆவிகளும், அந்த உண்மையான ஆவிகள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிக நெருக்கமாக அது காணப்படும், அவை இந்த கடைசி நாட்களில் எப்படி அருகருகாக நெருக்கமாகக் கிரியை செய்து கொண்டிருக்கிறது. இயேசு அவ்விதமாகக் கூறவில்லையா? அவர் அவ்விதமே கூறினார். 77இப்பொழுது கவனியுங்கள், நண்பர்களே, ஒரு சிறிய காட்சியை நான் உங்களுக்கு வரையப்போகிறேன். நீங்கள் உங்கள் ஒருமித்த கவனத்தை எனக்கு அளியுங்கள், ஏனெனில் நான் உங்களுக்கு ஒரு உவமையை அளிக்கப்போகிறேன், ஆகவே அப்பொழுது அதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் அது எழுதப்பட்டுள்ளது, நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், இரண்டாயிரத்து எழுநூறுபேர் ஜெபம் செய்யப்பட காத்துக் கொண்டிருந்தனர், அவர்கள் அங்கே வெளியே நின்று கொண்டிருந்தனர். நீங்கள் அந்த கட்டுரையை வாசியுங்கள். கனடாவிலிருந்து ஒரு மனிதன் வந்திருந்தார், மேயோ மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் ஆகியோரிடம் வைத்தியம் பெற்ற ஒரு சிறிய பையனை வைத்திருந்தார், அவன் மிக மோசமாயிருந்த மூளை வியாதியால் பீடிக்கப்பட்டு அவனுடைய சிறு கைகள் இந்தவிதமாக இழுக்கப்பட்டிருந்தது, கீழிருந்த கால்கள் இழுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள், ''இந்த வியாதிக்கு ஒரு அறுவை சிகிச்சையோ அல்லது எதுவுமே இதற்கு செய்யமுடியாது'' என்றனர். 78ஆகவே அவர் அவனை மறுபடியுமாக கனடாவிற்கு கொண்டு சென்றுவிட்டார். அவர், ''நான் இன்னுமாக தளர்ந்து போகவில்லை'' என்றார். ரீடர்ஸ் டைஜஸ்டின் நவம்பர் மாத பிரதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், அது டான்னி மார்டனின் அற்புதம் என்றவாறு தலைப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே - ஆகவே அப்பொழுது அந்த - அந்த மனிதன், ''நான் இன்னும் தளர்ந்து போகவில்லை, ஏனெனில் செவிடும் ஊமையுமாயிருந்த என்னுடைய இரண்டு நண்பர்களை பேசவும் கேட்கவும் செய்த வில்லியம் பிரன்ஹாம் என்னும் விசுவாச சுகமளிப்பவரை நான் அறிவேன்'' என்று கூறினதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் நான் எங்கேயிருக்கிறேன் என்பதைக் கண்டறிய அவர்கள் தொலைபேசி செய்தனர். நான் அமெரிக்காவில் இருந்தேன். நான் கலிபோர்னியாவில்லுள்ள காஸ்டா மேசாவில் இருந்தேன். அது ஒரு கட்டுரை, நீங்கள் அதை வாசிக்கும்போது, அழத் தயாராயிருங்கள். அது உங்கள் இருதயத்தை உடைத்துவிடும். அவர் எவ்வாறு அந்த பனியிலும் எல்லாவற்றினூடாகவும், இந்த குழந்தையுடன் அவர் கடந்து வந்தார். அவர், ''டான்னி கவனமாயிரு. இப்பொழுது, நாம் தோல்வியுறவில்லை'' என்றார். அந்த சிறிய பையனால் புன்னகை கூட செய்ய முடியவில்லை, அவன் மிகவுமாக வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தான். ''நாம் தோற்கடிக்கப்படவில்லை, நாம் தேவனைக் கேட்கப் போகிறோம். நாம் தேவனுடைய தீர்க்கதரிசியிடம் சென்று அவரைக் கேட்போம்'' என்றார். 79ஆகவே அப்பொழுது அவர்கள் பனியினூடாக வந்தனர். பிறகு முடிவில் அவர்கள் அங்கே வந்தடைந்தனர். அவர்களுடன் தாயும் வந்தாள், விமானத்தில் செல்லத்தக்கதாக போதுமான பணம் அவர்களிடம் இல்லாதிருந்தது, ஆகவே அவர்கள் தாயை திருப்பி அனுப்பிவிட்டனர். அந்த பையனும் அவனுடைய அப்பாவும் பேருந்தில் வரவேண்டியதாயிருந்தது, அவர்கள் கனடாவிலுள்ள வின்னிபெக்கிலிருந்து கலிபோர்னியாவிலுள்ள காஸ்டா மேஸாவிற்கு அவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தனர். அவர்கள் அங்கே உள்ளே சென்றனர், கடினப்பட்டனர், அந்த சிறிய குழந்தை அணியாடைகளை எவ்விதமாகவெல்லாம் அணிவிக்க வேண்டியதாக இருந்ததென்பதை அந்த தகப்பன் கூறுகின்றார். அவன் ஒன்றுமே செய்யகூட முடியாமலிருந்த சுமார் ஏழு அல்லது எட்டு வயது நிரம்பின சிறிய பையன். மேலும் அவர்... அவன் சாப்பிட கூட வாய்ப்பில்லாமல் எதுவுமே இல்லாமல், அவருடைய சிறிய பையன் அவர் பேசுவதை மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தான் என்று கூறினார். அவனுடைய கண்கள் எவ்விதமாக காணப்பட்டதென்றும் அவன் - அவன் சிரிக்க முயன்றதையும் எப்படிக் கூறினார் என்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே அவருக்கு... அமெரிக்காவில் அவனுங் காண்கின்ற வித்தியாசமான காட்சிகளை அவனிடம் அவர் கூறுவார். 80அவர்கள் அங்கே கலிபோர்னியாவிற்கு சென்றபோது, அவர்கள் காண வந்ததைப் பற்றி பிரயாணிகள் வழிகாட்டியிடம் (Traveler's aid) கேட்டனர். அவரோ “எதைக் காண வந்தீர்கள், தெய்வீகமா?,'' என்றார். ஒரு பெரிய கேள்விக்குறி. அதைக்குறித்து அமெரிக்கா என்ன கூறுகின்றது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியும், உங்களுக்குத் தெரியும். பாருங்கள், ''நாங்கள் கூர்மையான அறிவுத்திறம் வாய்ந்தவர்கள் நாங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம் என்பதையுமே கூற வேண்டிய அவசியம் கிடையாது. எல்லாவற்றையுமே நாங்கள் எழுதப் பெற்றிருக்கிறோம்.'' பாருங்கள்? ஆகவே அப்பொழுது, ''என்ன தெய்வீகம்? இதற்குத்தானா கனடாவிலிருக்கின்ற வின்னிபெக்கிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறீர்கள்?'' என்ன, அது பயங்கரமானது என்று நினைத்தனர். 81எப்படியாயினும், அந்த செய்திதாள் நிறுவனம் ஒரு - ஒரு காரை அனுப்பி அவரை அங்கு அனுப்பி வைத்தது. மேலும் அவர் கூறியதாவது, அவர்கள் வரிசையை அடைந்து போது, அங்கே ஜெபிக்கப்படத்தக்கதாக இரண்டாயிரத்து எழுநூறுபேர் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த உருக்குலைந்து விகாரமான சிறு தோற்றமுடையவனாக காணப்பட்ட பையனையும், அந்த தொப்பியுடனும், கந்தையான கிழிந்த கோட்டை அணிந்திருந்த அவரையும், ஒவ்வொருவரும் சற்று தள்ளி கண்டபோது, அவருக்கு இடமளித்ததாகக் கூறினார். அவர் பிரசங்க மேடைக்கு வந்தபோது..... ஒரு ஜெப அட்டையை மாற்றிக் கொள்வது விதிகளுக்கு புறம்பான ஒன்றாகும். யாராவது ஒருவர் கூட்டத்திற்கு வந்து உங்களுடைய அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வரிசையில் இன்னொருவர் பேரில் ஜெப அட்டையை மாற்றிக் கொள்ளும்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஜெப அட்டை நிராகரிக்கப்படும். பாருங்கள்? ஏனெனில் நீங்கள் வந்து விதிமுறைகளை அறிந்து கொள்ளவேண்டும். அது உங்களைப் பொருத்தது. நீங்கள் வேறொருவருக்காக வந்து அதைப் பெறமுடியாது. அதற்கு செவிசாய்க்கத்தக்கதாக உங்களுக்காக நீங்கள் தான் வந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். யாரோ பெரிய மனிதர் வந்து, ''ஒருக்கால்.... நல்லது, இந்த காரியத்தில் அவ்வளவாக எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், ஒருக்கால் அவர் எனக்கு சுகமளித்தாரனால், நான்...'' என்பாரானால், உங்களுக்கு புரிகின்றதா? அப்பொழுது அது பிரசங்க மேடையில் ஒரு தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கும். ஆகவே இந்த காரியமானது இங்கு வரும் முன்னே அதை அவர்கள் களையெடுத்து விடுகின்றனர். 82ஆகவே அந்த பையன் வந்தபோது, அல்லது அந்த தகப்பன் பிரசங்க மேடையின் மீது வரிசையில் தாண்டி முன்னோக்கி வந்தபோது, அவருடைய ஜெப அட்டையை பில்லி கேட்டான். அவரிடம் எதுவுமே இல்லை. அப்படியானால் ''மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா,'' ''நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும்'' என்றான். அவர், ''சரி, நான் காத்திருக்கிறேன், அப்படியானால் மற்றவர்களைப் போல என் தருணம் வரும்வரை காத்திருப்பேன், இவ்விதமாகச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது“ என்றார். நான் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அதை நான் கேட்கும்படியானது. அந்த தகப்பன் திரும்பிச் செல்வதை நான் கண்டேன், “என்ன ஆயிற்று?'' என்று வினவினேன். ''அவர் ஜெப அட்டையை வைத்திருக்கவில்லை'' என்று கூறினான். அப்பொழுது ஏதோ ஒன்று, ''அவரை இங்கே கூப்பிடு'' என்று என்னிடம் கூறினது. ஆகவே நான், ''அவரை இங்கே அழைத்து வா“ என்றேன். அந்த தகப்பன் மேலே வந்தார், அவருடைய முகத்தில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது, சவரம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவர் - அவர் மேலே வந்தார், ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை கூறினது இதோ பாருங்கள்? நான் எந்த கேள்விகளையும் கேட்கவில்லை, ஆனால் குழந்தை முகத்தை நேராக உற்று நோக்கினேன், அந்த குழந்தை எங்கிருந்து வருகிறதென்றும், அது மேயோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதென்றும், அதைக்குறித்த காரியம் என்னவென்றும் எவ்வளவாக வியாதிப்பட்டிருக்கிறதென்றும், எல்லாவற்றையும் கூறினேன். 83அப்பொழுது அந்த தகப்பன் அழ ஆரம்பித்தார், அவர் புறப்பட ஆரம்பித்தார். அவர் பிரசங்க மேடையை விட்டுக் கிளம்பினார், அப்பொழுது அவர் திரும்பி, ''அது சரிதான் ஐயா'' என்றார்.'' ''ஆனால் என்னுடைய குழந்தை பிழைத்துக் கொள்ளுமா?'' என்றார். நான், ''அது என்னால் கூற முடியாது'' என்றேன். ''சற்று பொருங்கள்'' என்றேன். ஒரு தரிசனம் தோன்றுவதைக் கண்டேன். நான், “நீங்கள் இதை விசுவாசிக்க விரும்பவில்லை, ஏனெனில் மேயோ மற்றும் ஹாப்கின் மருத்துவர் இருவருமே அந்த மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யமுடியாதென்று கூறியிருக்கின்றனர், ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் உங்களுக்கு கூறகிறேன். நாளை நீங்கள் இந்த குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். அடுத்த மூன்று நாட்களுக்குள் தெருவில் ஒரு கறுத்த தலையைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை சந்திக்கப் போகிறீர்கள். இந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்றென்று அந்த பெண் உங்களுக்குச் சொல்வாள். அறுவை சிகிச்சை செய்யப்போகிற ஒரு சிறிய நாட்டு மருத்துவரைக் குறித்து அவள் உங்களிடம் கூறப் போகின்றாள், நீங்கள் அதை நம்பவிரும்பமாட்டீர்கள், ஏனென்றால் மேயோ மருத்துவர்களே அது செய்யப்படவே முடியாது என்று கூறி கையை விரித்து விட்டிருந்தனர். ஆனால் உங்கள் குழந்தைக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு அதுவேயாகும், தேவனுடைய வல்லமையின் மூலமாகவும், தேவனுடைய இரக்கத்தினாலும் அந்த அறுவைச் சிகிச்சையினாலும். இப்பொழுது, நான் தேவனுடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர் என்றால், நான் கூறின விதமாகவே நீங்கள் போய்ச் செய்யுங்கள்” என்றேன். எசேக்கியாவின் மீது அத்தி இலைகளையும் மற்றதையும் போட்டது போல். அவர் திரும்பி, ''உமக்கு நன்றி'' என்றார். அவர் கடந்து சென்றுவிட்டார். 84இரண்டு அல்லது அதற்கு அதிகமான நாட்கள் கடந்தது, ஒரு நாளிலே அவர் தெருவில் நடந்து கொண்டிருந்தார், ஒரு பெண் அவரிடம் நடந்து வந்து, ''உங்களுடைய குழந்தைக்கு என்ன ஆயிற்று?'' என்றாள். ''அது ஒரு - ஒரு மூளை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறது'' என்றார். அவர் அவ்விதமாக பேசிக்கொண்டேயிருந்தார். ஆகவே, மேலும், அவர்கள் - அவர்கள் அது மிக மோசமான ஒன்று என்று எண்ணியிருந்தனர், அது உங்களுக்கு தெரியும். மேலும் அவர் சில நிமிடங்களில் ஏதோ சம்பவித்ததாகக் கூறினார். அவள், ''ஐயா, அந்த அறுவைச் சிகிச்சையை செய்யக்கூடிய ஒருவர் எனக்குத் தெரியும்'' என்றாள். இவர், ''ஸ்திரீயே, பார், அது செய்யப்பட முடியாதென்று கூறி மேயோ சகோதரர்கள் அதை கைவிட்டுவிட்டனர். இங்கே இருக்கின்ற வில்லியம் பிரன்ஹாம் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் அதற்காக ஜெபித்துக் கொண்டிந்தார். குழந்தைக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். ஒரு நிமிடம் பொறுங்கள்! கறுப்பு - தலை சாம்பல் நிறம் கொண்ட சூட்டை அணிந்திருப்பாள். ''அது அவள் தான்'' என்றார். “அந்த மருத்துவர் எங்கே இருக்கிறார்?'' அவர் அவரிடம் கூறினார். அவர் குழந்தையை அங்கு கொண்டு சென்றார். அந்த மருத்துவர் அறுவைச் சிகிச்சையைச் செய்தார், குழந்தை சுகமானது. 85இப்பொழுது, இது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழின் மூலம் வெளி வந்த காரியம். ஆகவே மேயோ சகோதரர்கள் அதைக்குறித்து ஒரு பேட்டி எடுக்க என்னைச் சந்தித்தனர். ''ரெவரெண்ட் பிரன்ஹாம் அவர்களே, அந்த குழந்தைக்கு நீர் என்ன செய்தீர்?'' என்றனர். நான், ''ஒன்றும் செய்யவில்லை. நான் அதை தொடவும் இல்லை. அதனிடம் என்ன கூறவேண்டுமென்று தேவன் என்னிடம் என்ன கூறினாரோ அதை மாத்திரமே நான் கூறினேன். அந்த மனிதன் அதற்கு கீழ்ப்படிந்தார்'' என்று கூறினேன். இப்பொழுது, இதைக்குறித்த வேடிக்கையான காரியம் என்னவென்றால், அதற்கு பிறகு இரண்டு வாரம் பின்னர் அல்லது அந்த சம்பவத்திற்கு இரண்டு வாரம் அல்லது மூன்று, ஒருக்கால் ஒரு மாதத்திற்கு முன்னர் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில், செல்வி பெப்பரின் கட்டுரை வெளிவந்தது. இப்பொழுது அவள் ஒரு மெய்யான மந்திரக்காரி அல்லது ஆவியுலகத்துடன் தொடர்பு கொண்டிருப்பவளாவாள். இப்பொழுது ஒரு உண்மையான ஒன்று இருக்கின்றது மற்றும் யாராவது ஒருவர் போலியாகச் செய்வதும் இருக்கின்றது. அந்த பெண் 1897 ஆண்டிலிருந்து அவர்களிடம் இருக்கின்றாள். அவள் இப்பொழுது நியூயார்க்கில் நூறு வயதிற்கு மேம்பட்டவளாக இருக்கின்றாள், அவள் ஒரு கம்பத்தைப் போல செவிடும் ஊமையுமாக இருக்கின்றாள். ரீடர்ஸ் டைஜஸ்ட்..... என்னுடையதிற்கு முன் சுமார் இரண்டு மாதங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன் வெளியானதென்று நான் நினைக்கிறேன்; இலையுதிர்க் காலத்தின் துவக்கத்தில். நீங்கள் அதைக் காணலாம். முன்பொரு நாளில் சகோதரன் பாக்ஸ்டர் அதை வைத்திருந்தார். நான் அதைக்குறித்து எண்ணியிருந்தால், நான் அதை அவரிடத்திலிருந்து.... அல்லது அதைக் குறித்து கூறப்போகிறேனென்று அறிந்திருந்தால், நான் - நான் அதை நான் என்னுடன் கொண்டு வந்திருப்பேன். நான் அதை உங்களுக்கு பெற்றுத்தர முடியும். அது சுமார் பன்னிரண்டு அல்லது பதினான்கு பக்கங்கள் இருக்கும். அவள் ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக இருந்தாள். ஒரு நாளில் அவள் ஒரு நினைவிழந்த நிலைக்குள் சென்றாள், அவள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், மரித்தவர்களோடு பேச ஆரம்பித்தாள். அதிலிருந்து உலகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் அந்த பெண்ணைக் கொண்டு சென்றனர். அவளை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர். அவள் ஏதாவது காரியத்தை சொருகி வைத்திருக்கிறாளா என்று பார்க்கத்தக்கதாக அநேகமுறை அவளுடைய ஆடைகளை மாற்றினர். அவளின் முகத்தின் மீது ஒரு முகமூடியைப் போட்டு ஒரு கிரேக்க மனிதனைக் கொண்டு வந்து அவனை ஒரு ஆங்கிலேயனைப் போல நடந்து கொள்ளும்படிக்குச் செய்தனர். அவளோ அதைக்குறித்த எல்லாவற்றையுமே அவனிடம் கூறினாள். அவன் - அவன் - அவன் அவனுடைய மரித்துப்போன கூட்டாளிகளில் ஒருவனை அழைக்க விரும்பினான். 86இப்பொழுது அவளுக்கு ஒரேயொரு காரியம்.... உலக முழுவதும், இங்கே ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் கூறினது, இங்கே சில இரவுகளுக்கு முன்னர், அல்லது சில மாதங்களுக்கு முன்னர், அந்த காரியங்களில் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டது. ஒரு மனிதன் அடிக்கடி தோன்றும் இறந்த தன் தாயின் ஆவியின் கையை முத்தம் செய்வதாக இருந்தது, ஆனால் அடுத்த நாளில் காவல் துறை நீதிமன்றத்தில் அவன் பாலாடையை அழுத்துவதற்குரிய துணியைத்தான் முத்தம் செய்தான் என்று நிரூபிக்கப்பட்டது. ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்ளும் காரியத்தை அநேக மக்கள் பாவனை செய்கின்றனர்! அவர்கள் தெருவின் ஓரத்தில் வெளியே அமர்ந்திருக்கும் சிறு வயதான கையெழுத்துப்படிகளைப் பற்றிக் கருத்தறிவிப்போர் ஆவர். அவர்கள் துவக்கத்திலிருந்தே ஆவியுலக இடையீட்டாளர்களாக இருக்கவில்லை. அவர்கள் போலியான பாவனையாளர்களே தவிர வேறொன்றுமல்ல. ஆனால் ஒரு உண்மையான ஆவியுலகத் தொடர்பொன்று உண்டு. ஆகவே பக்தியுள்ள மக்களாகிய நாம், இரண்டு பக்கங்களிலும் போலியாக பாவனை செய்யும் அநேகரை நாம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது சில நிமிடங்களுக்கு அப்படியே தரித்திருங்கள். 87இப்பொழுது கவனியுங்கள், அந்த செல்வி பெப்பர் ஆவியுலக இடையீட்டாளியானவளாய் இருக்கின்றாள். அந்த இதழ் ''இங்கே ஒரு காரியத்தை நிச்சயமாக தெரிந்து கொள்ளலாம், அது, ஒரு மனிதன் மரிக்கையில் அவன் மரித்த நிலையில் இல்லை. அவன் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், ஏனெனில் அந்த பெண் அவர்களுடைய ஆவியை திரும்ப அழைக்கின்றாள், மக்களிடையே அவை பேசுகின்றன'', அது இவ்வாறு கூறினது. ''இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே அவள் என்ன செய்கின்றாள்? நீங்கள் அதை நம்புகிறீர்களா?'' ஆம், ஐயா. வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது, அதன் காரணமாகத்தான் அதை நான் நம்புகிறேன். மேலும் அவள் பிசாசினாலானவள். மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதலானது பிசாசினுடைய தந்திரமாயிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது அவை இரண்டையும் கவனியுங்கள். பிறகு, அவளுடையதற்கு பிறகு என் கட்டுரை அடுத்ததாக வந்தபோது எனக்கு கடிதங்கள் மிக வேகமாக வந்ததை நீங்கள் அறிவீர்கள், காலத்தின் முடிவிற்கு சற்று முன்னர், இந்த காரியங்களை தேவன் பேசினது விநோதமாக இல்லையா? ரீடர்ஸ் டைஜஸ்ட் வானத்தின் கீழிருக்கின்ற ஒவ்வொரு மொழியிலும் பிரிசுரிக்கப்படுகின்றது. பாருங்கள்? கவனியுங்கள், ஒன்றன்பின் ஒன்று அவை தொடர்ந்தது விநோதமாக இருக்கின்றதல்லவா? 88இப்பொழுது இங்கு ''சகோதரன் பிரன்ஹாமே நீர் ஒரு ஆவியுலகத்தோடு இடைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரேயன்றி வேறல்ல'' என்று கூறின கடிதங்கள் வந்தன, ''அது அதை நிரூபிக்கின்றது. இங்கே பாருங்கள், நீர் கூறினீர் அந்த பெண் அதை கண்டுபிடிக்க ...இந்தப் பெண்ணைப் பாருங்கள்?'' என்றது. நான் ஒரு நிமிடம் பொறுங்கள். மக்களுக்கு அனுப்பத்தக்கதாக. ஒரு முறையான கடிதத்தை வைத்திருக்கிறேன், என்னை மன்னியுங்கள், நான், ''பிரசங்கிகளாகிய நீங்கள் எவ்வளவு குறைவாக அறிந்துள்ளீர்கள்'' என்று கூறினேன். நான், ''உங்களுடைய சரீரத்திற்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு பதிலாக, உங்களுடைய மூளைகள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதாக இருக்கின்றது'' என்றேன். அது சரி. ''நீங்கள் காரியங்களைக் குறித்தும் சிந்திக்கத்தக்கதாக நிற்பதில்லை. அதை ஆழ்ந்து ஆராய நீங்கள் முயல்வதில்லை''. முந்தின நாட்களில் அதே விதமாகத்தான் அவர்கள் செய்தனர். அவர்கள் இயேசுவைக் கண்டிருந்தனர். அவரால் முடியுமென்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுடைய இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருந்தார். அவர்கள் அதைப்போன்று என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களோ, ''அவன் பிசாசுகளின் தலைவன். அவன் பெயல்செபூல், உலகத்திலேயே சிறந்த குறிசொல்பவன் ஆவான்'' என்றனர். அது தேவனுடைய குமாரன்தானா என்று அதில் அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதை அறிந்து கொள்ளத்தக்கதாக ஆவிக்குரியவர்களாக அவர்கள் இருக்கவில்லை. அதுதான், அவர்கள் காரியத்திற்கு புறம்பாக பார்த்தனர். நிச்சயமாக, ஒரு கோவேறு கழுதையின் மேல், இன்னும் மற்றது, சவாரி செய்து எருசலேமிற்கு இயேசு வரவேண்டியதாக இருந்தது, ஆனால் அவர்களோ இரண்டாம் வருகையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். 89ஆகவே இன்றைக்கும் அதே காரியம் தான் உண்மையான காரியத்திற்கு மேலாக இருப்பதை அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அல்லேலூயா! அது சரி. இந்த மதிய வேளையில் தேவன் இங்கே இருக்கின்றார் என்பதை நான் அறிவேன், உங்களுடைய நேரத்தில் நிறைய நான் எடுத்துக் கொள்கிறேன். என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் நண்பனே இதை நீ காணவேண்டியவனாக இருக்கின்றாய். உங்களை நான் மறுபடியுமாக பார்க்க முடியாதிருக்குமானால், பிசாசுகள் என்ன என்பதை நீ அறிய வேண்டியவனாக இருக்கின்றாய், சத்தியம் மற்றும் தவறு என்னவென்பதை நீ அறிய வேண்டியவனாக இருக்கின்றாய். ஆகவே அது மிகவும் நெருக்கமாக காணப்படுகின்றது, அந்த காரியத்தை நீ பிரித்துத்தானாக வேண்டும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அது அங்கே வெளியே இருக்கப்போவதில்லை, பரிசேயரைப்போன்று இந்த பக்கமாக இல்லை அல்லது அந்தப் பக்கமாக இங்கே பின்னால் இருப்பதுமில்லை. அது சரியாக இங்கே கதவிலேயே இருக்கின்றது, சரியாக அதனருகிலேயே. அதைக் கவனியுங்கள். இப்பொழுது நான் எடுப்பேனானால்.... 90அவைகளில் இரண்டு காரியங்களை நாம் எடுத்துக் கொள்வோம். நான் எடுத்து உங்களுக்கு ஒரு டாலர், நோட்டை அளித்தால், இப்பொழுது, நான் ஒரு கள்ள டாலர் நோட்டை கையிலெடுத்து அதை உற்றுப்பார்த்து, முதல் காரியமாக நீ அது எதினால் செய்யப்பட்டிருக்கின்றது என்று அதை தொட்டுணர்ந்து பார்ப்பாய். அது சரி தானே? அது எதினால் செய்யப்பட்டிருக்கிறதென்று நீ பார்ப்பாய். அதனுடைய மதிப்பை நீ பார்ப்பாய். ஒரு உண்மையான டாலர் காகிதத்தினால் செய்யப்பட்டிராது, அது காகிதம் மற்றும் பட்டிழை பாதிப்பாதியாக இருக்கின்றது, உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே முதல் காரியமாக, அதனுடைய மதிப்பை நீங்கள் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அதுதான் முதலாவது அடையாளம். இப்பொழுது நம்மோடு தொடர்பு கொண்டிருக்கும் டாலர்: நாம் அவளை இந்த பக்கமாக வைத்து, பிறகு நம்மை நடத்திக் கொண்டிருக்கும் கர்த்தரை இந்த பக்கமாக வைப்போமாக. 91இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் கவனிக்க வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், எல்லா காரியம்... உங்களுடைய கட்டுரையை கவனியுங்கள். அவளுடைய ஐம்பது மற்றும் கூடுதலான வருடங்களில் அவளுடைய குறிசொல்லுதலின், மரித்த ஆவிகளை அழைத்தலில், அவள் ஒரு தடவை கூட தேவனை, கிறிஸ்துவை, தெய்வீக சுகமளித்தலை, விடுதலையை, நியாயத்தீர்ப்பை அல்லது எதையுமே குறிப்பிடவேயில்லை. அதில் வேடிக்கை விளையாட்டு மற்றும் முட்டாள்தனமேயன்றி வேறெதுவுமே அதில் இல்லை..... ஆனால் இந்தப் பக்கத்திலேயோ, தேவன், நியாயத்தீர்ப்பு, இயேசுவினுடைய வருகை, தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை, விடுதலை, என மாறா மதிப்பளவுமிக்கதாக பாருங்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் குறிசொல்பவர்களையும், மந்திரக்காரிகளையும் நீங்கள் நோக்கிப் பார்க்காதீர்கள். மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டதோ? என்னே! கவனி! 92செய்ய வேண்டிய உண்மையான காரியம் என்னவென்றால், அது உண்மையான டாலர் அல்லது இல்லையா என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமானால், அதனுடைய எண்களை எடுத்து கொண்டு அதை திரும்பவுமாக நாணயம் அச்சிடும் சாலைக்கு அனுப்பிவிடுங்கள். நீங்கள் குறித்துள்ள இலக்கத்தோடு அங்கிருக்கும் இலக்கம் ஒத்துப்போகுமானால், அதற்கென ஒரு வெள்ளி டாலர் காத்துக் கொண்டிருக்கிறது. அது சரிதானே? அப்படியானால், பிறகு, சகோதரனே, அவள் என்ன செய்தாள் என்பதை எடுத்து அதைத் திரும்பவுமாக வேதாகமத்தினிடத்திற்கு கொண்டு செல், அது எந்தோரின் மந்திரக்காரியே என்று நீ கண்டு கொள்வாய். இங்கேயிருப்பதை நீ எடுத்து, அதை திரும்பவும் இங்கே நாணயம் அச்சடிக்கும் சாலையில் உள்ள புஸ்தகத்தில் எடுத்துக் சென்று பார்ப்பாயானால் அதில், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்றிருப்பதை பார்ப்பாய். நிச்சயமாக, அவருடைய அதே கிரியை! அவர் சென்று மக்களோடு முட்டாள் தனம் மற்றும் வீணான காரியத்தை செய்து கொண்டிருக்கவில்லை. அது நல்லதான ஒன்றிற்காக, யாரோ ஒருவருக்கு உதவி செய்து, அவர்களை தேவனிடம் வழிநடத்துவதற்காக இருந்த ஒன்று ஆகும். ஆமென்! நான் எனக்கே ஆமென் போடவில்லை, ஆனால் ஆமென் என்றால் ''அப்படியே ஆகக்கடவது'' என்று அர்த்தம். ஆகவே நான்.... நான் அதை விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று எனக்குத் தெரியும். 93இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது உங்களுக்கு புரியும். இப்பொழுது, சீக்கிரமாக இப்பொழுது, ஏனெனில் உங்களை நான் அதிக நேரம் காக்க வைக்க விரும்பவில்லை. இங்கே, நாம் ஒரு காட்சியைப் பார்ப்போமாக, ஒரு சிறிய மனக்காட்சி. இங்கே ஒரு ஓடையானது சரியாக இந்த வழியாக, ஜீவனினூடாக வருகின்றது. இப்பொழுது கவனியுங்கள். அது ஒரு வாய்க்காலாக இருக்கின்றது. இப்பொழுது உங்களுடைய திசை திரும்பாத கவனத்தை எனக்குத் தாருங்கள், ஏனெனில் நீங்கள் இதை தவறவிடாதிருப்பீர்கள். சரியாக இதைப்போன்று இப்பொழுது, இங்கிருக்கின்ற இந்த சிறு வாய்க்காலில் சாவுக்குட்பட்ட உயிரினங்களாகிய, நீங்களும் நானும், வாசம் செய்கிறோம். இப்பொழுது, அங்கே அதில், அது என்னவென்பதை நாம் காண்போமாக. அது முட்டாள்தனம் மற்றும் எல்லாமும் சேர்ந்த ஒரு பெருந்திரள் ஆகும், ஆனால் எப்பொழுதாவது ஒரு ஒளியை நீங்கள் காணலாம், நீங்கள் இருளையும், தெருக்களையும் காண்கிறீர்களே அது மகிழ்ச்சி ஆராவாரம் மற்றும் கும்மாளம், பிசாசுகள் மக்களை செய்யத் தூண்டுதல் ஆகும். ஓ, அவர்கள் அருமையாக உடையுடுத்துகிறார்கள், என்னே, அவர்களால் முடிந்த மட்டும் மிகவுமாக கல்வியில் நடத்தையில் மேம்பாடுற்றவர்களாக இருக்கின்றனர், மெருகேற்றப்பட்ட அறிவாளிகள், ஆனால் இன்னுமாக பிசாசாக இருக்கின்றனர். ஆனால் அங்கே மறுபடியும் பிறந்தவர்களும் அதில் உட்கார்ந்திருக்கின்றனர். 94இப்பொழுது, இந்த வாய்க்காலில் இருக்கின்ற இந்த மக்கள் இரண்டு வித்தியாசப்பட்ட பக்கங்களிலிருந்தும் வெளிப்படையாய்த் தெரியாத செல்வாக்கினால் துாண்டப்படுகின்றனர். இப்பொழுது, இந்த பக்கத்தில் இந்த வழியாக செல்கின்றனர், அங்கே ஒரு திரித்துவம் இருக்கின்றது. மேலும் இந்தப் பக்கத்தில் இந்த வழியில் ஒரு திரித்துவம் இருக்கின்றது. இப்பொழுது, இப்பொழுது முதலாவதாக, இந்தப் பக்கத்தில் அநீதியுள்ளவர்களின் ஆத்துமாக்கள் இருக்கின்றது, ஒரு மனிதன் மரிக்கையில் நியாயத்தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கு அவன் செல்கிறான். அங்கே காவலில் இருந்த ஆத்துமாக்களுக்கு இயேசு சென்று பிரசங்கித்தார். அடுத்ததாக தீய ஆவிகள் இருக்கின்றன. அடுத்ததாக பிசாசும் நரகமும் இருக்கின்றன. மேலே, முதலாவதாக, இப்பொழுது, பேய்கள், மனந்திரும்பாதிருந்த மரித்த மனிதருடைய ஆவிகள் அதில் இருக்கின்றன. அவை நியாயத்தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று முட்டாள்தனம்தான், அதைத்தான் அவர்கள் செய்தனர். இப்பொழுது, இங்கே மேலே, இந்த கிறிஸ்தவர்கள் மேலேயிருந்து உள்ள செல்வாக்கால் இயக்கப்படுகின்றனர். இது ஒரு உவமையாகும். இங்கே மேலே வேறொரு ஆவி உள்ளது, பரிசுத்தஆவி. அது, கிறிஸ்து இயேசு. ஒரு மனிதனுடைய ஆவி. அந்த பரிசுத்த ஆவியானவர், பரிசுத்தஆவி இந்த சாவுக்குரிய பரிமாணத்தில் தம்முடைய சபையை இயக்குகின்றார். அந்த பிசாசு, இந்த ஆவியால், மனிதனை தன் செல்வாக்கால் இயக்குகின்றது. இப்பொழுது, கவனியுங்கள், அதற்கடுத்ததாக தூதர்கள். அதற்கடுத்ததாக தேவன் இருக்கின்றார். இப்பொழுது, இங்கே இருக்கின்ற ஒவ்வொரு சாவுக்குரிய மானிடர்களும் இந்த உலகங்களில் ஒன்றினால் இயக்கப்படுகின்றனர். நான் என்ன கூறவிழைகிறேன் என்பதை உங்களால் காணமுடிகின்றதா? 95இப்பொழுது அந்தப் பெண் என்ன செய்தாள், அந்த பரிமாணத்திற்குள்ளாக அவள் உடைத்துக் கொண்டுச் சென்றாள். ஆகவே துவக்கத்திலே முன் காலத்திலே ஆதியிலே மனந்திரும்பாத அந்த விழுந்த தூதர்களின் ஆவிகள், அவைகள் தங்களைப் பிடித்துக் கொள்ளும்படியாக இடங்கொடுத்த நபர்களாயிருந்த அந்த பிசாசு பிடித்த மனிதருடன் அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். அவர்கள் நியாயத்தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இங்கேயிருக்கின்ற இவைகள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்து இயக்கப்படுகின்றனர். ஆகவே பிசாசும் தன்னுடைய தீர்க்கதரிசிகளை வைத்திருக்கிறான், தேவனும் தம்முடையவைகளைக் கொண்டிருக்கிறார். நான் என்ன கூறவிழைகின்றேன் என்று புரிகின்றதா? அது செல்வாக்கினாலுண்டான பாதிப்பாகும், இதோ அது. அதை பிரிக்காது நிற்போம். இயேசு, அவர் பூமியில் இருந்தபோது.... இப்பொழுது, இன்றைக்கு, அந்த பரிமாணத்திற்குள்ளாக உடைத்துச் சென்று அந்த பரிமாணத்திலிருந்து ஒரு நீதிமானை வெளியே கொண்டுவர அவனால் முடியாது. அவனால் அதைச்செய்ய முடியாது, ஏனெனில் நீதிமான்கள் ஒரு காலத்தில் இருந்த பரதீசில் அவர்கள் இல்லை, இல்லை, ஐயா. இயேசுவின் இரத்தம் அதை எடுத்துப் போட்டதிலிருந்து, அந்த பரதீசும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. இங்கே கவனியுங்கள், என்னே! 96எவ்விதமாக இயேசு, அவர் மரித்தபோது, அவர் சென்று காவலில் இருந்த அந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்திருப்பார் என்று என்னால் எண்ணிப்பார்க்கக் கூடுமானால்.... அவர் மரித்தார், ஒரு பாவியாக, எந்த ஒரு பாவமும் அறியாதவராக, ஆனாலும் இன்னுமாக நம்முடைய பாவம் அவர் மீது இருந்தது. ஆகவே தேவன், அவருடைய பாவங்களுக்காக, அவரை பாதாளத்திற்கு அனுப்பினார். ''அவர் சென்று அந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார்'' என்று வேதாகமம் கூறுகின்றது. சில மக்கள், ''சகோதரன் பிரன்ஹாமே, அதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையே. இயேசு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவர் மரித்தார். பிறகு ஞாயிறு காலை உயிரோடெழுந்தார், என்ன, அவர் ஒருநாள் தானே மரித்த நிலையிலிருந்தார்'' என்று கூறிகின்றனர். அவர் கூறினார், ''அந்த நேரத்துக்குள்ளாக'' என்று ஏனெனில் அவர் நிற்கத்தக்கதாக வேதாகமத்தில் ஒரு வேத வசனத்தை அவர் கொண்டிருந்தார். ஏனெனில், தாவீது கடைசியில் பின்மாற்றமடைந்த ஒரு மனிதன், ஆனால் அவன் இரட்சிக்கப்பட்டான், ஆனால் தேவனுடைய ஊக்குவித்தலின் கீழிருந்த ஒரு தீர்க்கதரிசியாக ''என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்,'' என்று கூறினான். அந்த சரீரமானது மூன்று பகல் மற்றும் இரவு அழிவில் இருக்கும் என்றும் அவன் அறிந்திருந்தான். தேவன் அந்த தீர்க்கதரிசியிடம், ''அவர் அழிவைக் காண்பதில்லை'' என்று கூறியிருந்தார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) 97அல்லேலூயா! அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்தார். அதன் பேரில், ஒவ்வொரு தடவையும் அவர் சாத்தானை தோற்கடித்தார். ஆகவே அப்பொழுது அவர்கள் அவரை கொலை செய்தபோது, என்னுடைய பாவங்களை உன்னுடைய பாவங்களை தம்மேல் சுமந்தவராய் ஒரு பாவியாக அவர் மரித்தார், அவர் கீழே சென்றார், அங்கேயிருந்த அந்தக் கதவை அவர் தட்டுவதை என்னால் காண முடிகின்றது. அங்கேயிருந்த இழக்கப்பட்டுப் போயிருந்த ஆத்துமாக்கள் வெளியே வந்து, ''உம், நீர் யார்?'' என்றன. அவர், ''ஏன் நீங்கள் ஏனோக்கிற்கு செவிகொடுக்கவில்லை? பிரசங்கம் செய்த அந்த மற்ற தீர்க்கதரிசிகளுக்கு ஏன் நீங்கள் செவிகொடுக்கவில்லை?'' என்றார். அவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டிருந்தனர். ''உயிரோடிருந்த தேவனுடைய குமாரன் நான். நான்... என்னுடைய இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. நான் செய்வேன் என்று தீர்க்கதரிசிகள் கூறினதை நான் நிறைவேற்றினேன், என்று உங்களிடம் கூற நான் வந்துள்ளேன்.'' என்றார். சரியாக கீழே அந்த பிசாசுகளுக்கு முன்னர், சரியாக பாதாளத்திற்குள், பிசாசிடமிருந்து மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை எடுத்து, தம்முடைய இடுப்பில் அவைகளை தொங்க விட்டு, மேலே கிளம்பினார். அல்லேலூயா! அதிகாலையில் எழும்பி. அல்லேலூயா! ஒரு சிறு காட்சியை நாம் சித்தரிப்போமாக. அதிகாலையில், அங்கே பரதீஸில் வேறொரு குழு இருந்தது. இப்பொழுது அங்கே அவர்கள் இல்லை. 98இப்பொழுது பரிசுத்தவான்களின் மத்திய ஸ்தத்தில் விசுவாசம் கொண்டிருக்கின்ற பெரிய கத்தோலிக்க நண்பர்களாகிய நீங்கள் உங்கள் சபையில் ஒரு பரிசுத்தவானோடு நீங்கள் பேசிக் கொண்டிருப்பீர்களானால், அந்த மனிதன் ஒரு பாவியாக இருக்கிறான், அவன் பாதாளத்தில் இருக்கின்றான் அல்லது - அல்லது அவனுடைய நியாயத்தீர்புக்காக காத்துக்கொண்டிருக்கிறான். அவன் ஒரு பரிசுத்தவானாக இருப்பானானால், அவன் தேவனுடைய மகிமையில் இருக்கின்றான். மேலும் அவர் திரும்ப வர முடியாது. அது சரி. என்னால் அதை நிரூபிக்கமுடியும். காளைகளின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடாது, ஆனால் இயேசுவின் இரத்தமோ பாவங்களை நீக்குகிறது. 99பரதீசு இருந்த இடத்திற்கே இயேசு ஏறிப்போவதை என்னால் காணமுடிகிறது, அங்கே வயதான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் அவர்கள் அங்கே இருந்தனர், சாமுவேல் மற்றும் அவர்களில் எல்லாருமே அங்கே இருந்தனர். அவர் கதவைத் தட்டுவதை என்னால் கேட்க முடிகின்றது. (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறு தடவை தட்டுகிறார் - ஆசி) ஆமென்! ஓ, இதை நான் நேசிக்கிறேன். இப்பொழுது சரியாக நான் ஒருவித பக்திப் பரவசப்படுவதை உணர்கிறேன். அவர் அங்கே நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகின்றது. “யார் அங்கே இருப்பது? அங்கே இருப்பது யார்?'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவன், ''நான், பேசுகிறது ஆபிரகாம். யார் அது?'' என்றான். “நான் ஆபிரகாமின் வித்து''. ஆமென். ஆபிரகாம் வாசலண்டைவந்து கதவைத் திறப்பதை என்னால் காண முடிகின்றது. அவர், ''ஆபிரகாமின் வித்து நான்'' என்று கூறினார். தானியேல், அங்கே பாருங்கள். நான் கண்ட கையால் பெயர்க்கப்படாத மலையிலிருந்த பெயர்ந்த கல்,'' என்றான். ''அதோ அவர் இருக்கிறார். நான் அவரைக் கண்டேன். அவருடைய பாதத்தின் கீழ் இருக்கின்ற மேகத்தைப் போல், அசைந்து கொண்டிருக்கிற மேகம், ஆட்டுக்கடாக்கள்... தங்கள் கரங்களைக் கொட்டின, இலைகள், அவையெல்லாம் ஆர்ப்பரித்தன'' என்று மக்கள் கூறினதை என்னால் கேட்க முடிகின்றது. ஓ, பரதீசிலிருந்த பலத்தரப்பட்டவரை, அவருக்காக காத்துக்கொண்டிருப்பதை என்னால் காணமுடிகின்றது. 100''வாருங்கள்! எருசலேமில் பொழுது விடிகின்றது. நாம் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். நாம் மேலே போகப்போகிறோம், ஏனெனில் நீங்கள் காளை ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தில் நம்பிக்கை வைத்து என்னுடைய இரத்தத்தின் நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தீர்கள். ஆனால் என்னுடைய இரத்தம் அங்கே கல்வாரியில் சிந்தப்பட்டிருக்கிறது. நான்தான் மனிதப் பிறவியெடுத்த தேவனுடைய குமாரன். எல்லாப் பாவக்கடன்களும் செலுத்தப்பட்டாயிற்று. நாம் வெளியே செல்லும் சாலையில் இருக்கிறோம்!'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது! அல்லேலூயா! தேவனுக்கு மகிமை! சாராளின் கையைப் பிடித்து ஆபிராகம் இழுப்பதை என்னால் காணமுடிகின்றது. இங்கே அவர்கள் வருகின்றனர், சரியாக. வெளியே! மத்தேயு 27ல், அவன் வெளியே வந்தபோது, அங்கே எருசலேமில் அவர்கள் ஒரு சிறு நிறுத்தத்தைச் செய்வதை என்னால் கேட்கமுடிகின்றது. ஆகவே முதல் காரியம் உங்களுக்குத் தெரியுமா, காய்பாவும் மற்றவர்களும் தெருவில் நின்று, ''அந்த ஆள் எழுந்துவிட்டான் என்று என்னிடம் அவர்கள் கூறுகின்றனர். என்ன, யார் அது அங்கே போய்க் கொண்டிருப்பது; அந்த வாலிப பையனும், அந்த வாலிப்பெண்ணும்?'' என்று கூறிக்கொண்டிருப்பதை என்னால் காணமுடிகின்றது. இனியும் வயதானவர்களாக அல்ல; அது ஆபிரகாமும் சாராளுமாக இருந்தது. அவர்கள் திடீரென்று காட்சியை விட்டு மறைந்தனர். அவர்கள் பார்த்தனர், ''யாரோ நம்மை பார்க்கிறார்கள்.'' அவர் தீடீரென மறைந்து சுவற்றினூடாக சென்றதுபோல அவர்களும் செய்ய முடிந்தது, அதேவிதமான சரீரம். அல்லேலூயா சரி. இங்கே எல்லாத் தீர்க்கதரிசிகளும் மற்றவர்களும் இருக்கின்றனர், அவர்கள் சுற்றிலும் நடந்து நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இயேசுவும் சரியாக மேலே, நட்சத்திரங்கள் சந்திரன், மேகங்களுக்கு மேலாக சிறைப்பட்டிருந்தவர்களை சிறையாக்கி வழிநடத்திச் சென்றார், மனிதர்களுக்கு வெகுமதிகளை அளித்தார். இன்றைக்கு இயேசு பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அங்கே மேலே ஏறிச்சென்று, தம்முடைய எல்லா சத்துருக்களையும் தம்முடைய பாதப்படியாக்கிப் போடத்தக்கதாக உட்கார்ந்திருக்கின்றார். 101ஆகவே இன்றைக்கு, என்னுடைய அருமையான கிறிஸ்தவ நண்பனே, ஒவ்வொரு பக்கத்திலும் பிசாசுகள் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் தேவனுடைய ஆவியும் ஒவ்வொரு தடவையும் அதற்கு எதிர்த்துச் செயலாற்ற சென்று கொண்டிருக்கின்றது. அல்லேலூயா! உங்களுக்கு புரிகின்றதா. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் மற்றவைகளும் அதை அறிவிக்கின்றன. அவைகள் அதை கவனித்துக் கொண்டிருக்கின்றன. அது என்னவென்பதை அவர்களால் காணமுடியாது. அது என்ன? தேவனுக்கும் பிசாசுக்கும் இடையே வரவிருக்கின்ற அந்த மகத்தான பலப்பரீட்சைக்கு ஒரு முன்னடையாள நிழலாக அது உள்ளது. தேவனுடைய பக்கமாகச் சென்று உங்களுடைய இருதயத்தில் சரியாக இருங்கள். ஆமென். 102இங்கே சில காலத்திற்கு முன்னர் நான் ஒஹையோவிலுள்ள டோல்டோவில் இருந்தேன். அங்கே இரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் முடிக்கப்போகிறேன். பிசாசுகளைக்குறித்து நான் என்ன கூறபடுகின்றேன் என்பதை உங்களால் காணமுடிகின்றதா? அவைகள் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. அவை மிகவும் பக்தியுள்ளவைகளாக இருக்கின்றன, மிக பக்தியுள்ளவைகளாக! ஓ, அவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்குச் சென்று அப்போஸ்தருடைய பிரமாணங்களை திரும்பத் திரும்ப உச்சரித்து, துதிப்பாடலைப் பாடுகின்றனர். ஓ, என்னே, இருப்பதிலேயே மிக பக்தியுள்ளவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். “சகோதரன் பிரன்ஹாமே, அது தான் சத்தியமா?” இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது அந்த விதமான ஆவியே தான். இயேசு, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்று கூறினார். “ஓ, ரஷ்யாதான் அந்திகிறிஸ்து'' என்று இப்பொழுது அவர்களில் சிலர் கூறுகின்றனர். இல்லை ரஷ்யா அந்திகிறிஸ்து அல்ல. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் முட்டாளாக்கும் விதத்தில் அந்திகிறிஸ்து மிகவும் பக்திவாய்ந்தவனாக இருக்கப்போகிறான். நினைவில் கொள்ளுங்கள், தேவன் தம்முடைய மனிதனை எடுக்கின்றார், ஒருபோதும் தம்முடைய ஆவியை அல்ல. பிசாசும் தன்னுடைய மனிதனை எடுக்கின்றான், ஆனால் அவனுடைய ஆவியை அல்ல. இப்பொழுது, இதுதான் காரியம். உன்னைத்தானே பொருத்திக்கொள். நான் சத்தியத்திற்கு மாத்திரம் தான் உத்திரவாதியாக இருக்கிறேன். 103பிசாசுகள், அவைகள் கிரியை செய்து கொண்டிருக்கின்றன! நேற்று சரீரத்தின் பரிமாணத்தில் அவைகளை நான் காண்பித்தேன். இன்று, நான் ஆவிக்குரிய பரிமாணத்தில் மதச்சார்பான மண்டலத்தில் அவைகள் எங்கே இருக்கின்றது என்று உங்களுக்கு காண்பிக்கிறேன், அவைகள் அங்கே, புற்று நோய் என்று அழைக்கப்படுகின்றன, அவர்கள் இது அது மேலும் மற்றது என்று அழைக்கின்றனர், ஆனால் அவை பிசாசுகள் என்று வேதாகமத்தைக் கொண்டு உங்களுக்கு நான் நிரூபித்திருக்கிறேன். இப்பொழுது, இங்கே இன்று, அவைகள் மறுபடியுமாக மதசம்பந்தமான துறையிலிருக்கின்ற, மிக மார்க்க பணிகளைச் செய்ய ஆர்வமிக்கவைகளாக காணப்படுகின்றன. நீங்கள் துவக்கத்தில், சகோதரனே, சிந்திப்பீர்களானால் அதனுடைய துவக்கமாகிய காயீன், ஒரு அதிக பக்திவாய்ந்த மனிதனாக இருந்தான். ஏசாவும் மிகவும் பக்தியான மனிதனாக இருந்தான். யூதாசும் மிக பக்தியான மனிதனாக இருந்தான். அது மதம் ஆகும். அது உலகத்திற்கு வெளியே இல்லை. அது சரியாக நம் மத்தியிலேயே இருக்கின்றது. அதைக் கவனியுங்கள், பிசாசியல்! ஒருக்கால் சிறிது கழித்து, என்றாவது ஒரு சமயத்தில், அதை இன்னும் அதிகமாக என்னால் காண்பிக்கக்கூடும். நமக்கு நேரம் கடந்து கொண்டிருக்கின்றது. யாரையும் நியாயந்தீர்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் நேசியுங்கள். உங்களுடையஇருதயத்திலிருந்து உங்களால் நேசிக்க முடியவில்லையென்றால், அப்படியானால் கிறிஸ்துஉங்களோடு இல்லை. 104ஒஹையோவிலுள்ள டொலேடோவில், ஒரு சிறு உணவு விடுதிக்குள் நான் சென்றேன். உணவு அருந்தும் இடத்திற்குச் சென்றேன், உணவின்போது அப்பத்துண்டை சாற்றில் அமுக்கி எடுக்கும் ஒரு சிறிய இடம், ஒரு அருமையான சிறிய இடம். அவர்கள் மிக அருமையாக இருந்தனர். அந்தப் பகல் வேளையில் ஞாயிறு ஆராதனைக்கு செல்லத்தக்கதாக அவர்கள் மூடியிருந்தனர். அவர்கள் உணவகத்தை மூடியிருந்ததால், தெருவிற்கு அப்பால் நான் செல்ல வேண்டியதாக இருந்தது, உலகப்பிரகாரமான ஒரு பழைய சிறிய இடத்திற்கு, நான் அங்கே நடந்து சென்றேன். ஒஹையோவில் சூதாட்டம் சட்ட விரோதமானது என்பது எனக்குத் தெரியும். அங்கே மாநிலக் காவல்துறை போலிஸ்காரர் ஒருவர் ஒரு சிறு பெண்ணின் தோளின் மேல் தன் கரத்தை வைத்திருந்தார், அவருடைய கை அவளின் மார்பின்மேல் தொங்கிக் கொண்டிருந்தது, அவள் சிறிய துளையில் காசு போடுவதனால் இயங்கும் கருவியில் விளையாடிக் கொண்டிருந்தாள். நம்முடைய மாநிலங்களின், மற்றும் தேசத்தின் சட்டம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. பரிதாபம்! அசையாத கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், நான் நின்று கொண்டிருக்கிறேன், மற்ற எல்லா நிலங்களும் சரிகின்ற மணலாக இருக்கின்றன. ஒன்றுமே மீதமாக இல்லை. அது சரி. 105நான் இங்கே திரும்பிப் பார்த்தேன், அங்கே ஒரு அழகான வாலிபப் பெண் இருந்தாள், ஒருக்கால் பன்னிரெண்டுக்கும் இருபதுக்கும் இடைப்பட்ட வயதுப்பருவத்தில் இருந்திருக்கலாம், பத்தொன்பது, பதினெட்டு, பத்தொன்பது வயதாக இருந்திருக்கலாம். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனரென்றால், அங்கே மேஜையை சுற்றிலும் பையன்கள் இந்தனர், அது அதிர்ச்சியூட்டுகிற காரியமாக இருந்தது. நான் அங்கே உட்கார்ந்திருந்தேன். ஆகவே இப்பொழுது ஆச்சரியமென்னவென்றால், நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு ஒரு பெண் வந்து, ''உமக்கு ஒரு நாற்காலி வேண்டுமா?'' என்றாள். நான், ''உமக்கு நன்றி. எனக்கு காலை ஆகாரம் வேண்டும்'' என்றேன். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தேன், இங்கே ஒரு வயதான பெண் உட்கார்திருந்தாள். அவளுக்கு என்னுடைய தாயாரின் வயது இருக்கும் - ஐம்பத்தைந்து, ஐம்பத்தெட்டு வயது இருக்கும். ஜனங்கள் அணியும் அந்த சிறிய தெய்வீக மற்ற இரண்டு ஆடையை அவர்கள் அணிந்திருந்தனர். அவை குளிர்ச்சியாக உள்ளதென்று அவர்கள் உரிமை கோருகின்றனர். ''நீங்கள் கிறுக்கர்கள்“ என்று விஞ்ஞானம் கூறுகின்றது. நிச்சயமாக, அப்படியல்ல. நீங்கள் உங்கள் நிர்வாணத்தை காட்டத்தான் விரும்புகிறீர்கள். அது ஒரு வெட்கக்கேடானது, அவமானம். ஒரு சீமாட்டி (lady) அவைகளை அணிந்து கொள்ளமாட்டாள். ஒரு பெண் (woman) அதைச் செய்வாள், ஆனால் ஒரு சீமாட்டி செய்யமாட்டாள். 106ஆகவே பிறகு, அவர்கள் பிறகு... அங்கே அவள் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய சதை சுருக்கம் விழுந்து தொங்கி கொண்டிருந்தது. அவள் தன்னுடைய உதடுகளின் மேல் பகட்டு வண்ண மலர்ச் செடிவகையைப்போல் காணப்பட்ட ஒப்பனை அல்லது நீங்கள் அதை எந்தப் பெயரில் அழைக்கிறீர்களோ, அது அங்கே இருந்தது, ஒரு ஆணின் தலையைப் போன்று மயிரைச் சிறிதாக கத்தரித்திருந்தாள், அது எல்லாவற்றையும் தாறுமாறாக்கி விட்டிருந்தது, அது அவலட்சணமான ஒன்று என்று வேதாகமம் கூறுகின்றது. ஆகவே ஒரு பெண், ஒரு ஆணானவன... ஒரு பெண் மயிரை வெட்டுவாளானால், அவளை விவாகரத்து செய்ய ஒரு மனிதனுக்கு உரிமை உண்டு என்று வேதாகமம் கூறுகின்றது, ஏனெனில் அவள் அவனுடன் உத்தமமாக இல்லை. இந்த நாட்களில் ஒன்றில் நாம் சென்று வேதாகமத்தை பிரசங்கம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. அவள் தன் மயிரை குட்டையாக வெட்டினால், தன்னுடைய கணவனை கனவீனப்படுத்துகிறாள் என்று கூறுகிறது. அவள் அவலட்சணமுள்ளவளாயிருப்பாளானால், அவள் தள்ளப்பட வேண்டியவளாக இருக்கிறாள். நீங்கள் வேறொருவரை மணக்க முடியாது! ஆனால் நீங்கள் அவளைத் தள்ளிவிடலாம். வியூ பையனே, அது, அது கடினமான ஒன்றாகும், அதை என்னால் உணரமுடிகின்றது. ஆனால் அது தான் சத்தியமாயிருக்கிறது. 107ஓ, ஒரு காலத்தில், நாம் பரிசுத்த ஆவியின் பரிமாணங்களில் அதை நாம் கொண்டிருந்தோம், ஆனால் நாம் தளர்ந்து போய்விட்டோம். அந்த வயதான சகோதரன் “நாம் தளர்ந்து போய்விட்டோம், நாம் தளர்ந்து போய்விட்டோம். நாம் தளர்ந்து போய்விட்டோம், செம்மறியாடு வெளியே சென்றுவிட்டது, ஆனால் வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தது?'' என்று கூறுவது வழக்கம். நீங்கள் தளர்ந்து போய்விட்டீர்கள். அதுதான் காரணம், நீங்கள் தளர்ந்து போய்விட்டீர்கள், உலகமும் சபையும் ஒன்றோடொன்று கலந்துவிட்டது. மோவாபியர்கள் இன்னும் மற்றவர் மற்றும் பிலேயாம் அவன் எப்படி அவர்களுக்குள் விவாகம் செய்தான், இன்று உள்ளது போன்றே அதே விதமாக. ஆகவே சபையானது முற்றிலுமாக மாசுப்பட்டிருக்கிறது, அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாகி தேவனுடைய வாயிலிருந்து துப்பப்படுகின்ற லவோதிக்கேயா காலம் தான் பெந்தெகொஸ்தே காலமாகும். அந்த முழு குழுவிலிருந்து, தேவன் தம்முடைய மீதமுள்ளவர்களை, அழைக்கின்றார், அவளை வீட்டிற்கு கொண்டு செல்கின்றார், அது முற்றிலுமாக சரி, அது சரியாக உயிர்த்தெழுதலினூடாக இருக்கும். 108ஆகவே அங்கே அவள், அவளுடைய முகம் முழுவமாக உதட்டுக்கு பகட்டு வண்ணமலர்ச்செடி வகையைப்போல் காணப்பட்ட ஒப்பனை உடையவளாக உட்கார்ந்திருந்தாள், அது முழுவதுமாக பூசப்பட்டிருந்தது. மேலும் அவள் தன்னுடைய கண்களின் மேல் கறுப்பு மை தீட்டியிருந்தாள், அவளுக்கு வியர்வை வந்து கொண்டிருந்தது, அது கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்த வயதான பெண்ணிற்கு வயதான பேரப்பிள்ளைகள் கூட இருந்திருக்கக்கூடும். அவள் வயதான இரண்டு ஆண்களோடு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவர் தன்னுடைய கழுத்தைச் சுற்றி ஒரு பெரிய கழுத்துப் பட்டையை சுற்றியிருந்தார், ஜூன் மாதத்தில், அங்கே உட்கார்ந்திருந்தனர். அப்பொழுது அவன் எழுந்து குடித்துக் கொண்டிருந்தது போலிருந்தது, அவளும் கூட குடித்துக் கொண்டிருந்தாள். அவள்சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். நான், “ஓ தேவனே! தேவனே, அதை நீர் தாம் ஏன் முற்றிலுமாக எடுத்துப் போடக்கூடாது? ஏன் அதைச் செய்யக்கூடாது? என்னுடைய சிறிய ஷாரன்.... என்னுடைய சிறு குழந்தை என்னுடைய சிறிய சாராள் மற்றும் என்னுடைய சிறிய ரெபேக்காள் இந்த சந்ததியில் வளர்க்கப்பட்டு, இந்த விதமான காரியத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டுமா?'' என்று எண்ணினேன். நான், ''இந்த பூங்காக்களிலும் மற்ற இடங்களிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்பார்'' என்று எண்ணினேன். நான், ”ஓ, தேவனே! ஓ, அது உம்முடைய சித்தம் என்பதைப்போல் நீர் ஷாரனை எடுத்துக் கொண்டதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய சிறு ரெபேக்காளும் சிறு சிறு சாராளும் இதைப்போன்ற காரியத்தின் கீழ் வளர்க்கப்பட வேண்டுமோ?“ என்று எண்ணினேன். மக்கள் அழைப்பது அவை பாடற்குழுவில் பாடுவது மற்றும் எல்லா காரியமும். ஆகவே நான், ''இது மானக்கேடான ஒன்றல்லவா?'' என்று எண்ணினேன். நான், ''தேவனே, உம்முடைய பரிசுத்த நீதியானது அதை எப்படி சகிக்கின்றது? உம்முடைய பரிசுத்த நேர்மையான சீற்றமானது அங்கே பறந்து சென்று இந்த இடத்தை வெடிக்கச் செய்வதுபோல காணப்படுகிறதே'' என்று எண்ணினேன். 109அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் ''இந்தப் பக்கம் வா'' என்று கூறினதை நான் கேட்டேன். நான் இங்கே நடந்து சென்றேன். ஆகவே அவர் என்னூடாக வந்தபோது, ஒரு வித்தியாசமான நபராக நான் உணர்ந்தேன். ''எதற்காக அவளை குற்றவாளியாகத் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்?'' நான், ''அவள் இருக்கின்ற விதத்தை, அதை நோக்கிப் பாரும்,'' என்றேன். ஆகவே இங்கே தான் அவர்.... நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். இதைப்போன்ற ஒரு உலகத்தை நான் கண்டேன். அது உருண்டையான, வேறொரு உலகம். ஆனால் இங்கே இருந்த உலகம், அதைச் சுற்றிலும் ஒரு வானவில்லைக் கொண்டிருந்தது, தேவனுடைய கோபாக்கினையிலிருந்து பாதுகாக்கின்ற கிறிஸ்துவின் இரத்தமாக அது இருந்தது. அதை அவரால் பார்க்க முடியாதிருந்தது, அவர் - அவர் அந்த காரியத்தை சரியாக இப்பொழுதே அழித்துவிடுவார், ஏனெனில் அவர் ''அதைப் புசிக்கும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள்.'' என்றார். ஆகவே அவர் அதைச் செய்வார். அப்பொழுது நான் இந்த விதமாக சிந்தித்தேன். என்னை நானே கண்டேன். அதை நான் செய்யாவிடினும், ஆனாலும் எப்படியாயினும் நான் ஒரு பாவியாயிருந்தேன். ஆகவே அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு ஒரு முட்டு தாங்கியாக இருக்கிறது. பாருங்கள்? அது, நான் பாவம் செய்கின்றபோது, என்னுடைய பாவங்கள் அவரை மோதி அவருடைய விலையேறப்பெற்ற தலையை நொறுக்கினது, இரத்தமும் தண்ணீரும் ஓடி விழுகின்றதை என்னால் காணமுடிகின்றது. ''பிதாவே, அவனை மன்னியும், தான் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறான்'' நான் ஏதாவதொன்றைச் செய்து அதை மோதி தள்ளுவேன். ''பிதாவே, அவனை மன்னியும்.'' 110அது அவரைக் கடந்திருக்குமானால், நான் அழிக்கப்பட்டிருப்பேன். நான் அவருடைய கிருபையை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், அதைக் கடந்து என் ஆத்துமா செல்லும் நாளில் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டேன். நான் அதை நிராகரித்துவிட்டேன். நியாயத்தீர்ப்பைத் தவிர வேறெதுவுமே மீதி இல்லை. நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று, நான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டேன். தேவன் “நீ அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவீர்கள்'' என்றார். நீங்கள் அப்பொழுதே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். இந்த பகல் வேளையில் இதுதான் நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருக்கின்றது, கிறிஸ்துவின் பேரில் உங்களுடைய மனப்பான்மை. ஆகவே அப்பொழுது நான், ''ஆம், அது சரிதான்'' என்று நினைத்தேன். நான் அவரை நோக்கி தவழ்ந்து சென்றதை ஒரு நாளிலே நான் கண்டேன். என்னுடைய பழைய புத்தகம் அங்கே இருந்ததை நான் கண்டேன், ஒரு பாவியாக, அதன்மேல் எல்லாம் இருந்தது. என்னுடைய பாவங்களையும் அது என்ன செய்து கொண்டிருந்தது என்பதையும் நான் கண்டேன், நான் ''கர்த்தாவே, என்னை மன்னிப்பீரா?'' என்று கூறினேன். அவர் தம்முடைய பக்கமாக தம்முடைய கரத்தை எடுத்தார், இரத்தத்தை எடுத்து, அதன் மேலே குறுக்காக எழுதி, “மன்னிக்கப்பட்டது'' என்றார். அவர் மறதி என்னும் கடலில் அதை திரும்பப் போட்டார், அதை திரும்பவுமாக நினைக்காதிருப்பதற்காக. அது என்றென்றைக்குமாக கடந்து சென்றுவிட்டது! மன்னித்தேன், ஆனால் நீ அவளை குற்றவாளியாக தீர்க்கிறாயே என்றார். அது என்னுடைய கருத்தை மாற்றினது. நான் ''என் மேல் கர்த்தாவே, கிருபையாயிரும்'' என்றேன். 111நான் அதை விட்டு வெளியே வந்தேன், நான் கடந்து சென்று உட்கார்ந்தேன். நான், ''அம்மா, எப்படியிருக்கிறீர்கள்?'' என்றேன். அவள், “ஓ, ஹலோ” என்றார்கள். அப்பொழுது நான், ''என்னை மன்னிப்பீர்களானால், நான் ரெவரெண்ட் பிரன்ஹாம், ஒரு ஊழியக்காரன்'', என்றேன். அவள், “ஓ, பொருத்தருளும். பொருத்தருளும், ரெவரெண்ட் பிரன்ஹாம்'' என்றாள். நான், ''அம்மாளே'' என்றேன். காரியத்தை விளக்கிக் கூறினேன். நான், ''நான் அங்கே நின்றுகொண்டு உங்களை குற்றவாளியாக தீர்த்ததை என்ன ஒரு பயங்கரமான காரியம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஒருக்கால் உங்களுக்கு பிள்ளைகள் இருக்குமே'' என்றேன். அவள் ''எனக்கு பிள்ளைகள் உண்டு'' என்றாள். நான், நீங்கள் ''தவறாக செல்வதற்கு என்ன காரணமாக இருந்தது?'' என்றேன். பிளக்கத்தக்கதான ஒரு கதையை என்னிடம் அவள் கூற ஆரம்பித்தாள். நான், ''அவர் ஏன் இந்தவிதமான காரியத்தை பூமியை விட்டே பெயர்ந் தெரியக்கூடாது என்று நான் - நான் தேவனைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இங்கே நீங்கள் குடித்து வெறித்திருக்கின்ற இரண்டு மனிதரோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், நீங்களும் குடித்து வெறித்திருக்கிறீர்கள் என்றேன். மேலும் நான், என்றாவது ஒரு நாளிலே.... அந்த இரத்தமானது தேவனுடைய கோபாக்கினையை உங்களிடமிருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாட்கள் ஏதாவதொன்றில் நீங்கள் மரிக்கப்போகிறீர்கள். ஆகவே, அப்படியானால், இப்பொழுது நீங்கள் - நீங்கள் சுயாதீனமுள்ள ஒருவளாக இருக்கிறீர்கள், நீங்கள் நிராகரிக்கலாம் அல்லது பெற்றுக் கொள்ளலாம்'' என்றேன். நான், ''ஆனால் ஒரு நாளில் உங்கள் ஆத்துமா அதைக்கடந்து செல்லப் போகின்றது, அங்கே இரக்கம் இருக்காது. உங்களுடைய பாவங்களிலே நீங்கள் மரிப்பீர்களானால், நீங்கள் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டீர்கள், ஆகவே நீங்கள் பாதாளத்திற்கு செல்லப்போகிறீர்கள்'' என்றேன். என்ன ஆயிற்றென்று தெரியுமா? அந்த உணவு விடுதியின் இருக்கையிலிருந்து அந்த பெண் மெதுவாக வந்துவிட்டாள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே கேட்டிராத ஒரு ஜெபகூட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம், அவள் கிறிஸ்துவினண்டை வந்தாள். அது என்ன? அவர்களை குற்றவாளியென்று தீர்க்காதிருங்கள் சுவிசேஷத்தை அவர்களுக்கு கூறுங்கள். அவர்கள் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்; இந்த பரிமாணத்தில் இருக்கின்ற அழிவுக்குள்ளாக இருக்கும் மானிடர்கள். இங்கேயிருந்து வருகின்ற ஒன்றினால் இயக்கப்படுகிறார்கள். நம்முடைய இயக்கம் பரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. மற்றவர்களை கிறிஸ்துவிற்க்கு ஆதாயப்படுத்த நம்முடைய தாலந்துகளைக் கொண்டு நம்மால் என்ன செய்ய முடியுமென்பதைக் காண்போம். 112எங்களுடைய பரலோகப் பிதாவே, உம்முடைய நன்மைகளுக்காகவும் இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்னை மன்னியும், கர்த்தாவே; ஒருக்கால், இந்த மக்கள், நீண்ட நேரமாக இவர்களை நான் வைத்துவிட்டேன். ஆனால் இதைப்போன்ற கூட்டங்களின் பகல்வேளை முடிவாக இருப்பதால் ''பிசாசுகள்'' என்பதைப்பற்றி அவர்களுக்கு கூற நான் விரும்பினேன், ஒரே இடத்தில், ஒரே பிரசங்கத்தில் அதைக்குறித்து அதிகமாக வெட்டி எடுத்து காட்டிவிட்டேன், ஆனால் ஒருக்கால் அவர்கள் இங்கேயும் அங்கேயும், அதை எடுத்து நான் என்ன கூறமுயன்றேன் என்பதை புரிந்து கொள்ளட்டும். அதைக்கொண்டு வந்ததான என்னுடைய இருதயத்தின் நோக்கங்களை நீர் அறிவீர். மக்கள் தாம் இந்த நண்பகல் வேளையில் இங்கிருந்து செல்லட்டும், ஆணும் பெண்ணுமாக அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு அசைவையும் கவனிப்பார்களாக, சந்தோஷமாகவும் விடுதலையாகவும் அவர்கள் வாழ்வார்களாக. தேவன் அவர்களை இரட்சித்தாரென்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். ஆகவே அவர்கள் தாமே அவரை நோக்கிப் பார்க்கட்டும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லா கோட்பாடுகளையும் காரியங்களையும் மறந்து, சமாதானமாயும் சாந்தமாயும், தேவனைப் பற்றிய பயத்திலும் ஜீவிப்பார்களாக. மேலும், தேவனே, ஏதாவதொரு காரியத்திற்காக நீர் அவர்களை உபயோகிக்க விரும்புகையில், நீர் தாமே அவர்களுடன் நேரிடையாக பேசி, எங்கெல்லாம் அவர்கள் செல்ல வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அங்கே அனுப்பும் அல்லது என்னவெல்லாம் அவர்கள் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அவ்வாறே அவர்கள் செய்யும்படிக்குச் செய்யும். மக்கள் தாமே தாழ்மையாக இருந்து கிறிஸ்துவை தங்களுடைய இருதயத்தில் காண்பார்களாக. எங்களை, எங்கள் ஒவ்வொருவரையும், எங்களுடைய குறைகளையும், மன்னியும், கர்த்தாவே. 113சாத்தான் மதசம்பந்தமான போர்வைகளை அணிந்து, எல்லாவிடங்களில், அவன் விரும்பிய வண்ணம் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போன்று அலைந்து திரிந்து பட்சித்துக் கொண்டிருக்கிறான். என்பதை நாங்கள் அறிவோம். ஓ, தேவனே, எல்லாவிடங்களிலும் உள்ள இந்த ஏழைப்பிள்ளைகள், அவர்களை நோக்கிப்பாரும், அவர்கள் திறந்த முகமாக மக்கள் முன்பு வெளியரங்கமாக காணப்படுகின்றனர். தேவனே, அவர்களிடம் இரக்கமாயிருந்து, இழக்கப்பட்டிருக்கிற எல்லோரையும் இரட்சித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்த வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். மேலும் தேவனே, வியாதி என்னும் இந்த பழைய பிசாசுகள் உம்முடைய பிள்ளைகளின் மேல் வருகிறதையும் அங்கே இருக்கின்ற ஒரு பரிகாரத்தை நீர் கொண்டிருக்கிறீர் என்றும், அது அவைகளைப் பார்த்துக்கொள்ளும் என்றும் நாங்கள் உணர்கிறோம். அவர்கள் பாவம் செய்யச் செய்கின்ற எல்லா பிசாசுகளை, அங்கே இருக்கின்ற ஒரு பரிகாரத்தை நீர் கொண்டிருக்கிறீர், அது அவைகளைப் பார்த்துக்கொள்ளும். நீர் அதை அருளுவீரென்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். அங்கே இருக்கிறதென்று ....